Saturday, October 30, 2010

எம்ஜிஆருக்கு சென்னையிலும் கோயில்

அமரர் எம்ஜிஆருக்கு சென்னைக்கு அருகிலும் ஒரு கோயில் கட்டப்பட்டு வருகிறது.

புரட்சித் தலைவர் என்றும் பொன்மனச் செம்மல் என்றும் மக்களால் அழைக்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். பாரத ரத்னா விருது பெற்ற பெருமைக்குரியவர். 

இவருக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் ஏற்கெனவே கோயில்கள் எழுப்பப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. அரசியல் கட்சிகளுக்கு அப்பால் பலரும் இந்தக் கோயில்களில் அன்னதானம் செய்து வருகின்றனர். வழிபாடும் தொடர்ந்து நடத்தப்படுகிறது. சில தினங்களுக்கு முன் மதுரைக்கு அருகிலும் சேலம் அருகிலும் எம்ஜிஆருக்கு கோயில்கள் கட்டப்பட்டன. 

இப்போது, சென்னையை அடுத்த திருநின்றவூர் பகுதியிலும் எம்ஜிஆருக்கு கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள நாதமேட்டில் இந்த கோயில் கட்டப்படுகிறது. 

எம்ஜிஆரால் நிறுவப்பட்ட அதிமுக உள்பட, எந்த அரசியல் கட்சியின் உதவி்யுமில்லாமல் இக்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது. 

கவிஞர் காசி முத்துமாணிக்கம் மற்றும் இதயக்கனி பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.விஜயன் ஆகியோர் இக்கோயிலின் பூமி பூஜையை துவக்கி வைத்தனர். 

இந்த பூமி பூஜையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இலவச உதவிகளும் தரப்பட்டது. 

ஏராளமான எம்ஜிஆர் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

MGR










தேங்க்ஸ் thatstamil

No comments:

Post a Comment