Thursday, October 14, 2010

ரஜினிக்கு கடவுள் பால்தாக்ரே?

     பால்தாக்ரேவை சந்தித்த ரஜினி அவர் தனக்கு கடவுள் போன்றவர் என்று பேட்டி அளித்திருகிறார்.  இது உண்மையில் கண்டனத்திற்கு உரியது.  யார் இந்த பால்தாக்ரே என்று யோசிக்கவேண்டும். 
     தமிழர்கள் யாரும் தங்கள் நாட்டில் இருக்ககுடாது என்றும் தமிழர்களுக்கு இங்கென்ன வேலை? அவர்களை போய் தமிழ்நாட்டில் வேலை செய்யசொல்லுங்கள் என்று துரத்திவிட்டவர்தான் இந்த பால்தாக்ரே.  இன்று தனது படம் அங்கு ஓட வேண்டும் என்ற சுயனலதிர்க்காக அவரை கடவுள் என்று புகழ்ந்துள்ளார்.  அவரை வாழவைத்த, வாழ வைத்து கொண்டிருக்கின்ற தமிழர்கள் அவருக்கு கடவுளாக தெரியவில்லையா? 
     உண்மையில் இது ரஜினி மீது தமிழர்கள் வைத்திருக்கும் மரியாதையை கெடுத்து கொள்ளும்  செயலாகும்.  எதையும் யோசிக்காமல் பேசிவிட்டு பிறகு மன்னிப்பு கேட்பதே ரஜினிக்கு பழக்கமாக ஆகிவிட்டது.  

3 comments:

  1. நல்ல கருத்து நண்பரே ..
    இதெல்லாம் பாத்தும் நம்ம தமிழன் திருந்தவாப் போறான்..??அடுத்தப் படம் எப்போ வருதின்னு எதிர் பார்த்துட்டு நிப்பாங்க..அந்த தைரியத்துல தான் நடிகனுங்க என்ன வேணும்னாலும் பேசுறாங்க..

    ReplyDelete
  2. தமிழ் நாட்டில் இருப்பவர்கள் தமிழர்களாக இருக்கவேண்டுமா?அதுவும் சரிதான்...

    மக்கா,மதினா அடிமைகளா இருக்கக்கூடாது...

    அந்தக் குல்லாவைத் தூக்கி எறிந்துவிட்டு முதலில் நீங்கள் தமிழன் என்று ஒப்புக்கொண்டு இதைக்கூற முடியுமா?

    தமிழன் என்ற அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் ஏதும் இல்லை என்று கூறத்துணிந்தவன் பேசலாம்.
    இல்லாவிட்டால் பொத்திக்கொண்டு இருக்கவும்.

    நான் தமிழன்...என்னைத் தவிர இன்னொரு கடவுள் என் கற்பனையிலும் இல்லை.

    ReplyDelete
  3. குல்லாவ தூக்கிப்போட்டால் தான் தமிழனா!
    அப்போ எங்கு போனாலும், சுயநலத்துக்காக, குல்லாவ எல்லோருக்கும் போடுற ரஜினியை என்ன சொல்ல? ஈழ தமிழர்களை கருவறுத்த துரோகி ராஜபக்சேயை சந்தித்தாலும் குல்லாவ போடாமல் ரஜினி விடுவாரா, என்ன?

    ReplyDelete