Monday, November 8, 2010

திறமைக்கு கிடைத்த பரிசு: கிறிஸ்டன்


 



: "" கடந்த 2 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி, திறமையாக செயல்பட்டு வருகிறது. இதனால் "நம்பர்-1' இடத்தை கைப்பற்றி உள்ளது. அணியின் திறமையை மேலும் நிரூபிக்க தேவையில்லை,'' என, இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியது: இந்திய அணி கடந்த 2 ஆண்டுகளில், "டாப்-5' அணிகளுக்கு எதிராக வெற்றிகளை குவித்து உள்ளது. 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 12 வெற்றி, 2 தோல்வி பெற்றுள்ளது. மற்றவை "டிராவில்' முடிந்து உள்ளன. இதனால் தான் "நம்பர்-1' இடத்தை எட்ட முடிந்தது. திறமை இல்லாவிட்டால், முதலிடத்துக்கு முன்னேறி இருக்க முடியாது. 

அடுத்த இலக்கு: தென் ஆப்ரிக்க மண்ணில், அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பது தான் இந்திய அணியின் அடுத்த இலக்கு. இதிலும் வெற்றி பெற்று விட்டால், டெஸ்ட் வரலாற்றில் மிகச் சிறந்த அணியாக இந்தியா உருவெடுக்கும். ஆனால் தென் ஆப்ரிக்க மண்ணில் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமான காரியம். அங்குள்ள மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு அதிகம் ஒத்துழைப்பவை.

அனுபவ வீரர்கள்:இந்திய அணியில் சச்சின், டிராவிட், லட்சுமண் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் உள்ளனர். இந்த மூவர் கூட்டணி, தென் ஆப்ரிக்க மண்ணில் அசத்தும் என எதிர்பார்க்கிறேன். அணியில் புஜாரா, முரளி விஜய் உள்ளிட்ட திறமையான வீரர்கள் அணியில் இடம் பெற்றிருந்தாலும், அவர்கள் போதிய அனுபவம் பெற இன்னும் 2 ஆண்டுகள் தேவைப்படும். பவுலிங்கில் ஸ்ரீசாந்த், இஷாந்த், ஜாகிர் ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளனர். இதனால் அடுத்த மாதம் நடக்க உள்ள தென் ஆப்ரிக்க தொடரில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். இவ்வாறு கிறிஸ்டன் தெரிவித்தார்.(dinamalar)

No comments:

Post a Comment