இந்திய நாட்டில் 76 வயதுடைய மன்மோகன் சிங் பிரதமர் பதவி வகிக்கலாம் 70 வயதுக்கு மேல் நாங்கள் தேசிய விளையாட்டு சம்மௌனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்க கூடாதா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் பாஜகவை சேர்ந்த விஜய் மல்ஹோத்ரா.
டில்லி உயர்நீதிமன்றம், தேசிய விளையாட்டு சம்மௌனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் ஓய்வு பெறும் வயதை 70 ஆகவும், மூன்று முறைகளுக்கு மேல் பதவியில் நீடிக்கக் கூடாது என்ற தேசிய விளையாட்டு விதிகளை தீவிரமாக நடைமுறைப் படுத்த மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
டில்லி உயர்நீதிமன்ற உத்தரவால் முப்பது வருடங்களுக்கு மேலாக தேசிய வில் எறிதல் சங்க தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்ஹோத்ரா, 15 வருடங்களாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருக்கும் கல்மாடி போன்றோரின் பதவிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் கொதித்துப் போன மல்ஹோத்ரா பிரதமர் மன்மோகன் சிங்கை குறிவைத்து தாக்கியுள்ளார். மேலும் எம்.எல்.ஏ க்கள், எம்.பி க்கள் ஆகியோருக்கு ஓய்வு பெறும் வயது இல்லாதிருக்கும் போது விளையாட்டு ஆணைய தலைமைப் பொறுப்பு வகிக்கும் தங்களுக்கு மட்டும் இது எப்படி பொருந்தும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
thanks inneram
No comments:
Post a Comment