Monday, November 1, 2010

கம்ப்யூட்டரை விஞ்சியது தேனீயின் மூளை

சிக்கலான கணிதத்திற்கு, கம்ப்யூட்டரை விட தேனீக்கள் தீர்வளித்துள்ளதாக, பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன.பிரிட்டனை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் தேனீக்கள் போக்குவரத்து குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
 
அதில், விற்பனை பிரதிநிதியின் சிக்கலான போக்குவரத்து வழிக்கு, கம்ப்யூட்டரை விட தேனீக்கள் எளிதாக தீர்வளித்துள்ளன என்று தெரிவித்துள்ளனர்.பல்வேறு இடங்களுக்கு விற்பனை பிரதிநிதிகள் செல்வதற்கான வழிகள் குறித்து, கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதன் மூலம், அதிக இடங்களுக்கு, குறுகிய நேரத்தில், எளிதாக சென்று சேர்வதற்கான குறுக்கு வழிகளை கம்ப்யூட்டர் உருவாக்கி கொடுத்தது. ஆனால், பிரிட்டன் விஞ்ஞானிகள் நடத்திய தேனீக்கள் குறித்த ஆய்வில், கம்ப்யூட்டர் உருவாக்கிய வழிகளை விட, அதிக வழிகளை தேனீக்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது.தேனீக்கள் நாள்தோறும், தேனை சேகரிப்பதற்காக, பூக்களைத் தேடி அதிக தூரம் பயணம் செய்கிறது. பறப்பதற்காக, அதிக சக்தியை செலவழிக்கும் தேனீ, குறுகிய நேரத்தில், அதிக பூக்களுக்கு செல்கிறது. இதற்காக, குறுக்கு வழிகளை அதிகமாக பயன்படுத்துவது தெரிய வந்தது.இதுகுறித்து பிரிட்டனை சேர்ந்த ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது:தேனை தேடி, தேனீக்கள் அதிக பயணம் மேற்கொள்கின்றன. ஆனால், அவை அதிக குறுக்கு வழிகளை பயன்படுத்துகின்றன. இதற்காக, கம்ப்யூட்டரின் உதவியுடன், செயற்கை பூக்களை கொண்டு, தேனீக்களின் பயண வழியை கண்காணித்தோம். அதில், தேனீக்கள் மிகக்குறைவான நேரத்தில், வெவ்வேறு பூக்களுக்கு செல்வதற்கு அதிக குறுக்கு வழிகளை பயன்படுத்துவதை கண்டறிந்தோம்.அந்த வழிகள், விற்பனை பிரதிநிதி செல்வதற்காக, கம்ப்யூட்டர் உருவாக்கி கொடுத்த வழிகளை விட, அதிக வழிகளாகும். இதன் மூலம், கம்ப்யூட்டரின் அறிவை, மிகச்சிறிய தேனீயின் மூளை மிஞ்சியுள்ளது.இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 
thanks dinamalar

No comments:

Post a Comment