இந்நிலையில், திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்த கையுடன், மதுரைக்கு வந்தார் அதன் தலைவர் விஜயகாந்த். இரண்டு நாட்களாக முகாமிட்டு, மாவட்ட வாரியாக தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்து கூட்டணி குறித்து, "பல்ஸ்' கேட்டறிந்தார். அவர் மதுரை வரும் தகவல், போலீசாருக்கு கூட தெரியாது.திருப்பரங்குன்றம் மலை பின்புறமுள்ள கட்சி நிர்வாகிக்கு சொந்தமான ரிசார்ட்சில் தங்கி, இந்த ஆலோசனையில் ஈடுபட்டார். விருதுநகர், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களிடம் தனித்தனியாக கருத்துக்களை கேட்டார். பெரும்பாலான தொண்டர்கள் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும், என தெரிவித்தனர். தனியாக தேர்தலை சந்திக்க பொருளாதார வசதிகள் இல்லை, எனவும் பலர் சுட்டிக் காட்டினர். காங்., தலைமையில் தனி அணி அமைந்தால், அந்த கூட்டணியில் இடம் பெறலாம் எனவும் சிலர் தெரிவித்தனர்.
அனைவரின் கருத்துக்களையும் கேட்ட விஜயகாந்த், "கூட்டணி குறித்து இப்போது குழம்ப வேண்டாம். ஜனவரி வரை பொறுத்திருங்கள். தனித்து போட்டியிடும் வகையில் தேர்தல் ஏற்பாடுகளை செய்யுங்கள். தொண்டர்கள், மக்கள் விரும்பக் கூடிய கூட்டணியை ஏற்படுத்துவேன்' என தெரிவித்தார். ஒரு பக்கம், "தனித்து போட்டியிடும் வகையில் ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்கிறார்; மற்றொரு பக்கம், கூட்டணி வரும் என்கிறார். இதில் எது நடக்கப் போகிறதோ; ஒண்ணும் புரியலை' என தொண்டர்கள் மண்டையை பிய்த்துக் கொள்கின்றனர்.(dinamalar)
No comments:
Post a Comment