Tuesday, November 9, 2010

கமல்ஹாசனின் அடுத்த படம் தலைவன் இருக்கின்றான்



Kamal`s next Thalaivan irukkiraan

 











தற்போது மன்மதன் அம்பு படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அடுத்து தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தானே இயக்கலாம் அல்லது தனக்கு நெருக்கமான இயக்குநர் இயக்கவும் வாய்ப்புள்ளது என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், "இப்போது எனது அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இந்தப் படத்துக்கு தலைவன் இருக்கின்றான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதலில் தலைவன் இருக்கிறான் என்றுதான் வைத்தேன். இலக்கணப்படி தலைவன் இருக்கின்றான் என்பதுதான் சரியானது. இது ஒரு பெரிய பட்ஜெட் படம். சர்வதேச சமூகத்தைப் பற்றியதான இந்தப் படம்தான் இப்போது என் மனதை ஆக்கிரமித்துள்ளது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ஹாலிவுட் ஸ்டுடியோ ஒன்றும் இணைந்து தயாரிக்கிறது," என்று கூறியுள்ளார்(dinamalar)

No comments:

Post a Comment