பிரபுதேவாவுடனான (கள்ளக்காதல்) விவகாரத்தில் நயன்தாராவுக்கு நடிகர் சங்கம் மூலம் சம்மன் அனுப்பப்பட்டது. தனது கணவர் பிரபுதேவாவை நடிகை நயன்தாராவிடம் இருந்து மீட்டுத் தருமாறு பிரபுதேவாவின் காதல் மனைவி ரமலத் தொடர்ந்த வழக்கில் நயன்தாராவுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியது. அதனை அவர் பெற்றுக் கொள்ளாததால் நடிகர் சங்கம் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நயன்தாராவுக்கான சம்மன், நடிகர் சங்க மானேஜர் பெயருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி அனுப்பி வைக்கப்பட்டது. அதனை நடிகர் சங்க மானேஜர் பெற்றுக் கொண்டார். நடிகர் சங்க வக்கீலுடன் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவை மதித்து சம்மனை கேரள மாநிலம் திருவல்லாவில் உள்ள நயன்தாரா வீட்டு முகவரிக்கு பதிவு தபாலில் நடிகர் சங்கம் அனுப்பி வைத்தது.
பிரபுதேவாவுக்கான சம்மன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுபடி வருகிற 23ம்தேதி நேரில் ஆஜராவதா? அல்லது வக்கீலை ஆஜராக செய்வதா? என்று பிரபுதேவாவும் நயன்தாராவும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வழக்கு முடியும் வரை நயன்தாராவும், பிரபுதேவாவும் பொது விழாக்களில் சேர்ந்து பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோர்ட்டில் ரம்லத் வக்கீல் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதையும் மீறி இருவரும் துபாயில் கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது!(dinamalar)

No comments:
Post a Comment