சிட்னி, நவ.9: 37 வயதிலும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது இந்தத் திறமையே, நானும் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்.
"36 வயதை எட்ட உள்ள நிலையில் என்னால் மீண்டும் நேர்த்தியான பேட்ஸ்மேனாக பரிமளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு சச்சின் டெண்டுல்கரின் விளையாட்டே காரணம். 37 வயதான நிலையிலும் அவர் தொடர்ந்து பேட்டிங்கில் ஜொலித்து வருகிறார்.
கடந்த ஆண்டு மட்டும் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் 9 சதங்களை அவர் விளாசியுள்ளார். அவரைப் போன்று என்னாலும் விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
எனினும், எதிர்வரும் ஆஷஸ் கோப்பை போட்டி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகியவற்றில் விளையாடுவதைப் பொருத்தே, கிரிக்கெட்டில் தொடர்ந்து நீடிப்பது குறித்து முடிவு செய்ய உள்ளேன்.
இலங்கையுடனான ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா இழந்துள்ளது. எனினும், அடுத்துவரும் ஆஷஸ் தொடரை வெல்வதில் முனைப்பாக உள்ளோம்.
அண்மைக்காலமாக ஆஸ்திரேலியா தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. அவற்றிலிருந்து மீண்டு ஆஷஸ் கோப்பையை வெல்வதில் அணி வீரர்கள் முழு ஈடுபாட்டுடன் உள்ளனர்.
கிளார்க்குக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு' என்று சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் பாண்டிங் தெரிவித்துள்ளார்(dinamani)

No comments:
Post a Comment