அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய பயணத்தை முன்னிட்டு அவர் மும்பையில் தங்க உள்ள தாஜ் ஹோட்டலின் பாதுகாப்புப் பணிக்காக வியாழக்கிழமை ஒத்திகையில் ஈடுபட்ட போலீஸôர்.
புது தில்லி, நவ.4: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இந்தியாவுக்கு வருகிறது. அதிபர் ஒபாமாவின் இந்திய பயணத்தின்போது வெள்ளை மாளிகை கட்டடம் மட்டும்தான் வாஷிங்டனில் இருக்கும். அதிலுள்ள முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு இடம்பெயர்கிறது.
அதிபரின் தகவல் தொடர்பு சாதனங்கள், அணு குண்டை பயன்படுத்துவதற்கான பொத்தான், அதிபர் பயணிக்கும் லிமோசின் கார் இவை மட்டுமின்றி வெள்ளை மாளிகையில் உள்ள முக்கிய அதிகாரிகளும் இந்தியாவுக்கு வருகின்றனர். அதிபரின் பாதுகாப்புக்காக 34 போர்க் கப்பல்கள் மும்பை கடல் பிராந்தியத்தில் காவல் பணியில் ஈடுபடும். இதில் ஒரு விமானந்தாங்கிக் கப்பலும் அடங்கும். மும்பையில் ஒபாமா தங்கியிருக்கும் 2 நாள்களும் இவை இந்தப் பகுதியில் ரோந்துப் பணியை மேற்கொள்ளும்.
2008-ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தினர். இவர்கள் அனைவரும் கடல் வழியாகத்தான் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். இதையடுத்தே கடலோர ரோந்துப் பணியை அமெரிக்க போர்க்கப்பல்கள் மேற்கொள்கின்றன.
மும்பைக்கு முதலில் வரும் ஒபாமா, விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தெற்கு கொலாபாவில் உள்ள இந்திய கடற்படைத் தளத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து கார் மூலம் தாஜ் ஹோட்டலுக்கு வருவார்.
ஒபாமாவின் இந்தியப் பயணத்தை ஒட்டி 2 ஜெட் விமானங்கள், 40 கார்கள் வந்துள்ளன. இத்துடன் அதிக அளவு பாதுகாப்பு அதிகாரிகளும் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.
தாஜ் ஹோட்டல், ஹயாத் ஹோட்டலில் அதிபருடன் வரும் அதிகாரிகள் தங்குவதற்காக 800 அறைகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளன. ÷அதிபர் ஒபாமாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை அந்நாட்டு புலனாய்வுப் பிரிவு மேற்கொள்கிறது. இத்துடன் தேசிய பாதுகாப்பு கமாண்டோக்களும் (என்எஸ்ஜி) மேற்கொள்வர். இவர்கள் தவிர, மத்திய துணை ராணுவத்துடன் உள்ளூர் போலீஸôரும் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வர்.
மும்பையைத் தொடர்ந்து தில்லியிலும் இதே அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதிபர் பயணம் செய்யும் 'ஏர்ஃபோர்ஸ் 1' விமானம் ஞாயிற்றுக்கிழமை மாலையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலைவரை தயாராக இருக்கும்.
ஒரு நாள் செலவு ரூ. 900 கோடி: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாதுகாப்புக்கு நாளொன்றுக்கு ரூ. 900 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபருடன் பாதுகாப்பு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உள்பட 3,000 பேர் இந்தியா வந்துள்ளனர்.
அதிபருக்கு ஆகும் செலவு குறித்து குடியரசுக் கட்சியின் மைகேல் பாஹ்மன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு முன்பு எந்த அதிபருடனும் இந்த அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் அதிகாரிகள், பாதுகாப்பு வீரர்கள் பயணித்தது கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபரின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா செல்லும் பாதுகாப்பு வீரர்களின் பட்டியலை அளித்தோம்.
பொதுவாக அரசு செலவிடும் தொகையை இதுபோல பெரிதுபடுத்திக் கூறுவது வழக்கம் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அமி பிரண்டேஜ் குறிப்பிட்டார்.(dinamani)

No comments:
Post a Comment