Saturday, November 6, 2010

தீபாவளிக்கு "டாஸ்மாக்'கில் கூட்டம்: ரூ.300 கோடிக்கு சரக்கு விற்பனை

      தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

 தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இனிப்புகள் வழங்கியும் தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் அதிகாலை முதலே மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.சிறைக் கைதிகளை அவர்களின் உறவினர்கள் காண்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் கைதிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.மத்திய அமைச்சர் வாசன், ஆழ்வார்பேட்டையில் உள்ள தமது இல்லத்தில், கட்சி தொண்டர்கள், முதியோருடன் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினார்.

தீபாவளியை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில் நேற்று வழக்கத்தைவிட அதிக கூட்டம் இருந்தது. காலையில் கடைதிறந்தது முதலே குடிமகன்கள் சரக்கு வாங்குவதற்காக வரிசைக்கட்டி நின்றதால், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.கடந்த ஆண்டு தீபாவளிக்கு, டாஸ்மாக் கடைகளில் விற்பனை இலக்கைவிட 50 சதவீதம் கூடுதலாக 220 கோடி ரூபாய்க்கு சரக்குகள் விற்பனை நடந்தது. அதேபோல இந்த ஆண்டும், விற்பனை இலக்கான 300 கோடி ரூபாயை தாண்டி, விற்பனை நடந்திருக்குமென தெரிகிறது. 
எங்கே செல்லும் இந்த பாதை?(dinamalar)

No comments:

Post a Comment