Friday, November 19, 2010

விருதகிரி இசை வெளியீடு! விஜயகாந்த் புது திட்டம்!!



Vijayakanth`s Viruthagiri audio launch on 22nd november














விருதகிரி படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த நடிகர் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். விஜயகாந்த் முதல் முதலாக தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் புதிய படம் விருதகிரி. படத்தில்
போலீஸ் அதிகாரியாக விஜயகாந்த் நடிக்கிறார். விஜயகாந்த் தே.மு.தி.க. கட்சியை தொடங்கி, விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தோகுதியில் உள்ள விருதகிரீஸ்வரர் கோயில் மூலவரை குறிக்கும் வகையிலும், விருதாச்சலம் மக்களை பெருமைப்படுத்துவதற்காகவும் விருதகிரி என படத்திற்கு பெயர் சூட்டியிருப்பதாக ஏற்கனவே விஜயகாந்த் கூறியிருந்தார்.
படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டிவிட்ட நிலையில் வருகிற 22ம்தேதி இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் விஜயகாந்த். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். 2011 சட்டமன்ற தேர்தல் பிரசார ஆயுதமாக விருதகிரி படம் இருக்கும் என ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில் பட வெளியீட்டுக்கான ஆயத்த பணிகளில் விஜயகாந்த் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.(dinakaran)

No comments:

Post a Comment