Saturday, November 20, 2010

பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் சாராயக் கடைகளை மூடுவோம்: ராமதாஸ்



 புதுச்சேரியில் பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் கள், சாராயக் கடைகளை மூடுவோம்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

புதுச்சேரியில் பா.ம.க., அலுவலகத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது:
தமிழகத்தில் 2011ல் பா.ம.க., ஆட்சி நடக்க வாய்ப்பில்லையென்றாலும், அடுத்து வரும் தேர்தலில் அந்த வாய்ப்பு நிச்சயம் உண்டு. ஆனால், புதுச்சேரியில், 2011ல் பா.ம.க., ஆட்சியை கொண்டுவர முடியும். புதுச்சேரி மாநிலத்தின் முழு நம்பிக்கையை பா.ம.க.,வினர் பெறவில்லை. இங்கு மக்களின் முழு நம்பிக்கை பெற்று ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்பதே எனது நீண்டநாள் ஆசை. வரும் 2011ம் ஆண்டு தேர்தலிலேயே அது நடக்க வேண்டும். பதினைந்து தொகுதிகளை எடுத்துக் கொண்டு வேலை செய்தால் தனித்தும்கூட 10 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க முடியும். கூட்டணிக்கு தலித் இளைஞர்களை சேர்த்துக் கொள்ளலாம். தலா இரண்டரை ஆண்டு காலம் என ஒப்பந்தம்கூட போட்டுக் கொள்ளலாம். மக்களை நேரில் சந்தித்து, பா.ம.க.,விற்கு ஓட்டுப் போட வேண்டும் என்று சத்தியம் வாங்குங்கள். கோகைன் போன்ற போதைகளை விட ஆல்ககஹால் கொடுமையானது. வன்னியர், தலித் சமுதாய மக்கள் குடிக்க பர்மிஷன் தர மாட்டோம். புதுச்சேரியில் பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் கள், சாராயக் கடைகளை மூடுவோம். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.(dinamalar)

No comments:

Post a Comment