Thursday, November 11, 2010
கூட்டணியில் அ.தி.மு.க.,வுக்கு காலி இடம் இல்லை: காங்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய அமைச்சர் ராசாவை நீக்கி, கூட்டணியில் இருந்து தி.மு.க., விலக்கினால், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க தயார் என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்த காங்., கட்சியின் செய்திப்பிரிவு தலைவர் ஜனார்த்தன திவிவேதி தமிழ்நாட்டில் தி.மு.க.,வுடன் தான் எங்களது கட்சி முக்கிய கூட்டணி என்றும், வேறு யாருடனும் கூட்டணி இல்லை என்றும் கூறினார். மேலும் கூட்டணிக்கு, அ.தி.மு.க.,விற்கு தற்போது இடம் காலி இல்லை என்று தெரிவித்தார். இதே கருத்தை மத்திய அமைச்சரும், தமிழக காங்., பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் தெரிவிவத்துள்ளார்.(dinamalr)
Labels:
Political News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment