Wednesday, December 8, 2010

சென்னை அணியில் தோனி, ரெய்னா நீடிப்பு



அடுத்த இரண்டு (2011, 2012) ஐ.பி.எல்., தொடர்களுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ரெய்னா, முரளி விஜய் மற்றும் அல்பி மார்கல் ஆகியோர் நீடிக்க உள்ளனர்.

கடந்த 2008 ம் ஆண்டு ஐ.பி.எல்., அமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போது 8 அணிகள் சேர்க்கப்பட்டன. இந்த
அணிகள் 3 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தன. இவர்களது ஒப்பந்த காலம் இந்த ஆண்டுடன் (2010) முடிந்து விட்டது. இதனால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள 4 வது ஐ.பி.எல்., தொடரில், மறுபடியும் வீரர்கள் ஏலம் (ஜன. 8) நடக்க உள்ளது.

புதிய ஏலம்: ஐ.பி.எல்., புதிய ஏலத்தின் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே உள்ள 8 அணிகளும், தங்கள் அணிகளில் 3 ஆண்டுகளாக விளையாடி வரும் வீரர்களில் 4 பேரை மட்டும் தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தோனி நீடிப்பு: இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி, ரெய்னா, முரளி விஜய் மற்றும் அல்பி மார்கல் ஆகிய 4 பேரை தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதே போல மும்பை இந்தியன்ஸ் அணி சச்சின், ஹர்பஜன், போலார்டு மற்றும் லசித் மலிங்கா ஆகியோரை தங்கள் அணியிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஷேன் வார்ன், ஷேன் வாட்சன் ஆகியோரையும், கோல்கட்டா அணி கெய்லையும், டில்லி டேர் டெவில்ஸ் அணி சேவக்கையும் தக்கவைத்துக் கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

டிராவிட்டுக்கு கல்தா: பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, விராத் கோஹ்லியை மட்டுமே தற்போதைக்கு தக்கவைக்க முடிவு செய்துள்ளது. டிராவிட்டை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணம் பெங்களூரு அணிக்கு இல்லை. இதே போல டில்லி டேர் டெவில்ஸ் அணி, காம்பிரை தக்கவைத்துக் கொள்ள விரும்ப வில்லை. இதனால் டிராவிட், காம்பிர் போன்றோர் வரும் ஜனவரி மாதம் நடக்க உள்ள ஏலத்தில் எடுக்கப்படுவர் என தெரிகிறது.(dinamalar)

No comments:

Post a Comment