Monday, December 13, 2010

சாமிகளே சாமிகளே சொல்லும் கதை கேளுங்க!



     பேசாம  நாமளும் சாமியாராகிவிட்டால் என்ன என்று என்ன தோனுகிறது.  இந்தியாவில் பிரபலமாவதற்கும், சீக்கிரம் பணம் சம்பாரித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் எளிய வழி இதுதானே. 
      அப்படியே கொஞ்சம் காலம் யாராவது ஒரு பெரிய சாமியாரிடம் ஒட்டிக்கொண்டு தொழில் கற்று தனியாக ஆசிரமம் ஆரம்பித்து அப்படியே நன்கொடை பெற்று ஏதோ பெரிய அளவில் இல்லாவிட்டாலும் ஒரு சொகுசு பங்களா, ஒரு பொறியியல் கல்லூரி,  குடிக்க குடிக்க குறையாம இருக்குற அளவுக்கு மதுபானம்,  அப்பப்ப தொட்டுக்கொள்ள பொண்ணுங்க ஏதோ இந்தமாதிரி சின்ன ஆசைகள் நிறைவேறினால் போதும்.  மற்றபடி எந்த பேராசையும் எனக்கு கிடையாது.  என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது இந்திய சாமியார்களின் புழப்பு. 
     எத்தனை போலி சாமியார்கள் வந்தாலும் நாம் திருந்தபோவதில்லை.  எது நடக்கிறதோ இல்லையோ சாமியார்களை உருவக்குவதர்க்கென்று தனியாக பல்கலை கழகங்கள் ஆரம்பித்துவிடுவார்கள் போல இருக்கிறது.  அப்படி ஆரம்பித்தால் அதற்க்கு வேந்தராக நமது மனம் கவர்ந்த நித்தியானந்தாவை  போடலாம் என்பது எனது விருப்பம்.
     இதனை நான் விளையாட்டுக்காக சொல்லவில்லை அப்படி நாரிபோயிருக்கிறது நமது சுதந்திர இந்தியாவின் அரசியலும் ஆன்மீகமும்.  ஊழலுக்கு பல்கலை கழகம் ஆரம்பித்தால் அதற்க்கு வேந்தராக நமது ராஜா தம்பியை போடவேண்டுமென்று நீங்கள் கூறுவது எனக்கு புரிகிறது. அப்படியே ஆகட்டும். 
     மொத்தத்தில் இத்தியா ஒளிர்கிறது.  நான் இந்தியா என்று குறிப்பிட்டது இந்திய மக்களை இல்லை  இந்திய அரசியல்வாதிகள் மற்றும் சாமியார்கள் மட்டுமே.
                                                                  -அன்பு.நெட்   . 

No comments:

Post a Comment