Monday, September 3, 2012

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஒரு பார்வை


திருச்சிராப்பள்ளி மாவட்டம் [Tiruchirappalli District], சுமார் 4,403.83 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இம்மாவட்டத்தின் தலைமையகம் திருச்சி எனப்படுகின்ற திருச்சிராப்பள்ளி ஆகும். 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 24,18,366 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 77.9% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 27,13,858 பேர் உள்ளதாகவும், இதில் 13,47,863 ஆண்களும் 13,65,995 பெண்கள் உள்ளனர். இங்கு 83.6% பேர் படித்தவர்கள்,

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் [Tiruchirappalli District], வடக்கில்பெரம்பலூர் மாவட்டமும், வட மேற்கில் நாமக்கல் மாவட்டமும், கிழக்கில்பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டமும், தெற்கில் புதுக்கோட்டைசிவகங்கைமற்றும் மதுரை மாவட்டமும்,  மேற்கில் கரூர் மற்றும் திண்டுக்கல்மாவட்டங்களுடனும் தனது எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் [Tiruchirappalli District], திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் [Tiruchirapalli International Airport] உள்ளது. விமான நிலையம், தி௫ச்சிராப்பள்ளி - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை 210-ல் [NH210 - Tiruchirapalli to Rameswaram] உள்ளது . இது நகரத்தின் மையப்பகுதில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் [Tiruchirappalli District], 9 வட்டங்களாக (தாலுக்கா) பிரிக்கப்பட்டுள்ளது.

* Lalgudi Taluk - லால்குடி வட்டம்
* Manachanallur Taluk - மணச்சநல்லூர் வட்டம்
* Manapparai Taluk - மணப்பாறை வட்டம்
* Musiri Taluk - முசிறி வட்டம்
* Srirangam Taluk - ஸ்ரீரங்கம் வட்டம்
* Thiruverumpur Taluk - திருவெறும்பூர் வட்டம்
* Thottiyam Taluk - தொட்டியம் வட்டம்
* Thuraiyur Taluk - துறையூர் வட்டம்
* Tiruchirappalli Taluk - திருச்சிராப்பள்ளி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் [Tiruchirappalli District], முக்கிய ஆறுகள்
* காவிரி
* அய்யாறு
* அமராவதி
* நொய்யாறு
* மருதையாறு
* வெள்ளாறு
இது மட்டுமல்லாது, அனேக சிறிய ஆறுகள் உள்ளன. அவை

* அரியாறு
* அம்புலியாறு
* காட்டாறு
* கம்பையாறு
* குண்டாறு
* கொடிங்கால்
* கோரையாறு
* சின்னாறு
* ருத்ராட்சா ஆறு
* வாணியாறு
* பாம்பாறு

காவிரியின் முக்கிய கிளை நதிகள்
* கொள்ளிடம்
* வெண்ணாறு
* உய்யகொண்டான் ஆறு
* குடமுருட்டி
* வீரசோழன்
* விக்ரமனாறு
* அரசலாறு

இது மட்டுமல்லது, வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு,
* வெள்ளையாறு
* வடலாறு
* கோரையாறு
* பாமனியாறு
* பாண்டவயாறு


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் [Tiruchirappalli District], முக்கிய சுற்றுள்ளத்தளங்கள்

Mukkombu Dam - முக்கொம்பு அனை
முக்கொம்பு அனை, [NH67] தேசிய நெடுஞ்சாலை 67-ல் உள்ளது. இது திருச்சிராப்பள்ளியில் சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ளது. இது ஒரு பிரபலமான உல்லாசப் பயணம் செல்லும் இடம் ஆகும். இங்கு, கேளிக்கைப் பூங்காகள், சிறுவர் விளையாட்டுப் பூங்கா, மீன் பிடித்தல் போன்ற பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. இங்கு வாரயிறுதிலும் விடுமுறை நாட்களிளூம் ஆயிரக்கணக்கானோர் தங்கள் குடும்பங்கலோடு வந்து மகிழ்கின்றனர்.

Kallanai Dam - கல்லணை அனை
கல்லணை காவிரி, ஆற்றின் மீது அனையாக கட்டப்பட்டுள்ளது. இந்த அனையை முதலாம் நூற்றாண்டில், மன்னர் கரிகால சோழன் கட்டினார். இது உலகிலேயே மிகவும் பழைமையான அனையாகும்.

Puliyancholai - புளியஞ்சோலை
புளியஞ்சோலை, கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது திருச்சிராப்பள்ளியில் இருந்து சுமார் 72 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. துறையூர் இவ்விடத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. புளியஞ்சோலை அருகில் இருக்கும் மற்றும் ஒரு பிரபலமான இடம் ஆகாயகங்கை அருவி ஆகும்.

1 comment:

  1. நல்லதொரு தொகுப்பு...

    அப்படியே எங்க ஊருக்கும் வாங்க...

    ReplyDelete