Monday, December 6, 2010

தெரிந்துகொள்வோம் 6 (M.G.R-1)

     தமிழ் திரை உலகிலும், பின்னர் அரசியலிலும் சகாப்தம் படைத்த m .g .r இன் முழு பெயர் m .g .ராமச்சந்திரன்.  
     பெற்றோர் பெயர் கோபாலமேனன் - சத்யபாமா.  இவர்களது முன்னோர் கொங்கு நாட்டிலிருந்து கேரளாவில் குடியேறிய மன்றாடியார்கள் என்று m .g .r ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.  
     அரூர், திருச்சூர், கரூர், எர்ணாகுளம் முதலிய ஊர்களில் கோர்ட்டில்  பணியாற்றியவர், கோபாலமேனன்.  நீதி தவறாதவர்.  அநீதிக்கு துணைபோக மறுத்தால், வேறு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.  அதனால் வேதனை அடைந்த கோபாலமேனேன் பதவியை ராஜினாமா செய்தார்.  மனைவியுடன் இலங்கை சென்றார்.  
     கோபாலமேனேன் - சத்தியபாமா தம்பதியினர் இலங்கையில் வசித்தபோது, 1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் m .g .r . பிறந்தார். 
     கண்டியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹன்தானா என்ற இடத்தில்  m .g .r . பிறந்தார்.  அந்த இடம், தமிழில் "பச்சைக்காடு" என்று அழைக்கப்படுகிறது.  m .g .r . பிறந்த வீட்டில் இப்போது ஒரு பாடசாலை நடந்து வருகிறது.
     m .g .r க்கு 2 வயதானபோது குடும்பத்துடன் தாயகம் திரும்பினார் கோபாலமேனன்.   முன்பு செல்வ செழிப்புடன் வாழ்ந்த அவர் குடும்பம் ஒத்தபாலம் என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்து.  1920 ஆம் ஆண்டில், கோபாலமேனன் திடீரென்று மாரடைப்பால் காலமானார்.  அப்போது m .g .r க்கு மூன்று வயது.  கணவரை இழந்த சத்யபாமா, தன் இரண்டு மகன்களையும் வளர்த்து ஆளாக்குவது எப்படி என்று திகைத்தார்.  
     அவருடைய தம்பி நாராயணும், குடும்ப நண்பர் வேலு நாயரும் அப்போது கும்பகோணத்தில் வசித்து வந்தார்கள்.  ஆகவே, தன் இரு மகன்களுடன் கும்பகோணத்துக்கு வந்தார் சத்யபாமா.  நாராயணன், இளம் வயதிலேயே கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்து குடியேறியவர்.  கும்பகோணத்தில் தங்கி மதுரை ஒரிஜினல் பாய்ஸ் என்ற நாடக கம்பனியில் பின் பாட்டு பாடி பிழைத்துவந்தார்.  குழந்தைகளுடன் ஆதரவு தேடி வந்த அக்காவுக்கு அவர் ஒரு வீடு பார்த்து குடுத்தார்.  
     கும்பகோணம் ஆணையபட்டியில் சக்கரபாணியும், m .g .r -ம் சேர்ந்தனர்.  m .g .r ஐ விட சக்ரபாணி நான்கு வயது மூத்தவர்.  எனவே குடும்ப நிலைமையை ஓரளவுக்கு உணர முடிந்தது.  பள்ளிக்கு போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சிறு சிறு வேலைகள் செய்து, கொஞ்சம் பணம் சம்பாதித்தார்.     
     இலங்கையிலிருந்து கொண்டு வந்திருந்த பணமும், நகைகளும் தீரும் வரை வாழ்கை சக்கரம் சிக்கலின்றி சுழன்றது.  அதன்பிறகு, தன் குழந்தைகளை வளர்க்க சத்யபாமா மிகவும் சிரமபடவேண்டியிருன்தது.  எப்படியும் பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து முன்னுக்கு கொண்டுவர வேண்டும் என்ற உறுதியுடன் சோதனைகள் அனைத்தையும் தாங்கிகொண்டார்.  
(தொடரும்....)

No comments:

Post a Comment