Tuesday, December 7, 2010

நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது



 ""நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது,'' என விஜயகாந்த் கூறினார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில், மழையால் பாதித்த மக்களுக்கு அரிசி மற்றும் வேட்டி சேலைகளை வழங்கிய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விருதகிரி படத்தை முடிக்க வேண்டும், என்பதால் காலதாமதமாக தொகுதிக்கு வந்துள்ளேன். மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிட்டேன். சிதம்பரம் பகுதியில் மழை வெள்ளம் தேங்கியற்கு ஏரி, வாய்கால்களை தூர் வாராததே காரணம். இதை கலெக்டர், அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. தேசிய பேரிடர் என்று அறிவித்து உடனடியாக, நிவாரணம் வழங்க வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அமைச்சரவை கூட்டத்தை கூட்டி நிவாரண நிதி கொடுப்பது. குறித்து முதல்வர் பேசுவாராம்.  ஆனால் ஏப்ரல் மாதம் தான் கொடுப்பார். ஏனென்றால் தேர்தல் வருகிறது.தேர்தல் நேரத்தில் நிவாரணம் கொடுத்து, மக்களை ஊழல்வாதியாக்குகின்றனர். இது சட்ட ரீதியாக செய்யும் திருட்டுத்தனம். மக்கள் கரன்ட், தண்ணீர் இல்லாமல் இருக்கும்போது "இளைஞன்' பட பாடல் கேசட் வெளியீடு தேவையா?

 ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிக்க வேண்டும், என முதல்வர் சொல்கிறார். நானும் அதை தான் சொல்கிறேன் தீர விசாரிக்க வேண்டும். காங்கிரஸ் அரசு பார்லிமென்ட் கூட்டு கமிட்டியை அமைக்க தயங்குவது ஏன்? கருணாநிதி சாலமன் மன்னர் கதையை கூறுகிறார். அப்படி என்றால் காங்கிரஸ் போலி தாயா? காங்கிரஸ் இரண்டு மாதத்திற்கு முன் குதித்ததே. இப்போது குதிக்கவேண்டியது தானே. காங்கிரசுக்கு பயம்.ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்க கருணாநிதி தினம் ஒரு பொய்யை சொல்கிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜினாமா பெரிதல்ல. குற்றத்திற்கு தண்டனை வழங்க @வண்டும். திருடனை பிடித்தால் மட்டும் அவனிடம் பறிமுதல் செய்த பணம் நகைகளை மேசையில் வைத்து காட்டுகின்றனர். இது ராஜாவிடம் பிடித்தது, இது கல்மாடியிடம் பிடித்து, என காட்ட வேண்டியது தானே. குற்றம் செய்தவர்கள் விரலை வெட்டினால் தானே பயம் வரும்.

 நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது. நான் ஆரூடம் சொல்லவில்லை தைரியமாக சொல்கிறேன். கருணாநிதி அறிவாளி இல்லை. ஊழல் செய்வதில் தான் அறிவாளி. சர்காரியா கமிஷன் அப்போதே சொல்லி விட்டது. ஜாதியை பத்தி பேச மாட்டேன் என்று கூறும் இவர் தான் ஜாதியை கூறி பேசுகிறார். எதையும் முன்னுக்கு பின் முரணாகவே பேசுபவர் கருணாநிதி.கூட்டணி பற்றி இப்போது பேச்சு இல்லை. அதற்கென யூகித்து அதை கையாள்வோம். தி.மு.க., ஆட்சிக்கு வர கூடாது. அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வோம். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.  "மீண்டும் விருத்தாசலத்தில் போட்டியிடுவீர்களா' என கேட்டதற்கு, "அது ரகசியம். தேர்தல் வரும் போது சொல்கிறேன்' என்றார். (dinamalar)

No comments:

Post a Comment