சத்யபாமாவின் கஷ்டத்தை போக்க, நாராயணன் ஒரு யோசனை தெரிவித்தார். "அக்கா சக்ரபானியும் ராமசந்திரனும் பார்பதற்கு அழகாக இருக்கிறார்கள். நான் வேலை பார்க்கும் நாடக கம்பனியில் சேர்த்து விட்டால், விரைவில் முன்னுக்கு வந்துவிடுவார்கள்" என்றார். அப்போது m .g .r . அவர்ககளுக்கு 7 வயது. அவர் மூன்றாம் வகுப்பும் சக்ரபாணி ஏழாம் வகுப்பும் படித்து கொண்டிருந்தார்கள்.
குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க சத்யபாமா விரும்பினார். ஆனால் குடும்ப சூழ்நிலை அதற்க்கு இடம் தரவில்லை. எனவே வேறு வழியின்றி பிள்ளைகளை நாடகத்தில் சேர்க்க சம்மதித்தார். ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி அப்போது பாண்டிச்சேரியில் முகாமிட்டிருந்தது. அங்கு m .g .r . சக்ரபாணி ஆகியோரை அழைத்து சென்று சேர்த்து விட்டார் நாராயணன். அப்போது இந்த நாடக கம்பனியில் b .u .சின்னப்பா t .s .பாலய்யா ஆகியோர் நடிகர்களாக இருந்தார்கள். முதலில் சிறு வேடங்களில் நடித்த m .g .r . சில ஆண்டுகளுக்கு பின் கதாநாயகனாக உயர்ந்தார்.
இந்த சமயத்தில்தான் தமிழில் பேசும் படங்கள் வரத்தொடங்கின. 1935 ஆம் ஆண்டு m .g .r . வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கியமான வருடம். பிற்காலத்தில் ஜெமினி ஸ்டுடியோவை தொடங்கி சாதனைகள் புரிந்த s .s .வாசன் தமது ஆனந்த விகடன் பத்திரிக்கையில் எழுதிய சதிலீலாவதி என்ற கதையை வேல் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் திரைப்படமாக தயாரித்து. படத்தின் கதாநாயகன் m .k .ராதா. இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க m .g .r . ஒப்பந்தமானார். கலைவாணர் n .s .கிருஷ்ணன், t .s .பாலையா ஆகியோரும் இப்படத்தில் நடித்தனர்.
s .s .வாசன், m .g .r , n .s .கிருஷ்ணன், t .s .பாலையா ஆகிய நால்வருக்கும் இது முதல் படம். அமெரிக்காவில் இருந்து வந்து பிற்காலத்தில் "அம்பிகாபதி" " மீரா" " சகுந்தலை" போன்ற அற்புத படங்களை இயக்கியவரான எல்லிஸ் r .டங்கன் தான் இப்படத்தின் இயக்குனர்.
1936 இல் சதி லீலாவதி வெளியாகியது. படத்தின் முடிவு எப்படி இருக்குமோ என்று அதில் சம்மந்தப்பட்ட அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். படம் பெரும் வெற்றிபெற்று அதில் பங்கு கொண்ட அனைவருக்கும் நல்ல பெயரை தேடித்தந்தது. அப்போது m .g .r அவர்களுக்கு நல்ல பெயரை தேடித்தந்து.
அப்போது m .g .r . அவர்களுக்கு 19 வயது. முதல் படத்தில் நடிததர்க்காக அவருக்கு கிடைத்த சம்பளம் நூறு ரூபாய். முழு நூறு ரூபாய் நோட்டை அப்போதுதான் முதன் முதலாக பார்த்தார். சந்தோசம் தாங்கவில்லை. நூறு ரூபாயை அப்படியே அம்மா கையில் கொண்டு பொய் கொடுத்து ஆசி பெற்றார்.
(தொடரும்....)
No comments:
Post a Comment