Friday, December 17, 2010

உலகக் கோப்பை உத்தேச அணி: யூசுப் பதான், அஸ்வினுக்கு வாய்ப்பு





உலகக் கோப்பைக்கான இந்திய உத்தேச அணியில் அதிரடி வீரர் யூசுப் பதான், தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உலகக் கோப்பையில் 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சனிக்கிழமை அறிவிக்கிறது.நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பெங்களூரில் நடந்த ஒருநாள் ஆட்டத்தில் இந்திய வீரர் யூசுப் பதான், இக்கட்டான நேரத்தில் பின்வரிசையில் களமிறங்கி 98 பந்துகளில் 7 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 123 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.இதேபோல் தமிழக வீரர் அஸ்வின் நியூசிலாந்துக்கு எதிரான அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக பந்துவீசி முன்னணி வீரர்களை வீழ்த்தினார். குறிப்பாக சென்னை ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இவர்கள் இருவருக்கும் உலகக் கோப்பை உத்தேச அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கடைசி இரண்டு ஆட்டங்களில் தொடர்ந்து இரண்டு அரைசதமடித்த பார்திவ் பட்டேலுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. 15 பேர் கொண்ட இறுதிப் பட்டியில் உலகக் கோப்பை தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.  மும்பையில் சனிக்கிழமை நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் ஐபிஎல் அணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று  பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.(dinamani)

No comments:

Post a Comment