Saturday, November 13, 2010

ராமதாசின் புதிய கண்டுபிடிப்பு!

  •      தாழ்த்தபட்டோரும் , வன்னியரும் சேர்ந்து ஓட்டு போட்டால் பா.மா.க. 127 தொகுதிகளில் வெற்றி பெரும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். 
  •           தமிழகத்தில் பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் கல்வி, வேலை வாய்ப்பு, விவசாயம் போன்றவற்றின் வளர்ச்சிக்கு, பல புதிய திட்டங்களை வகுத்து வைத்துள்ளோம். ஆனால், நீங்கள் என்னை போயஸ் கார்டனிற்கும், கோபாலபுரத்திற்கும் அனுப்புகிறீர்கள். தமிழகத்தில் காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முதல்வர்களாக இருந்தனர். ஆனால் ஒரு வன்னியரோ, தாழ்த்தப்பட்டவரோ 10 நாட்கள் கூட முதல்வர்களாக இருந்தது இல்லை. இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
  •       சாதி பெயரை கொண்டு ஆட்சியை பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறார் ராமதாஸ்.  தனது கட்சியின் கொள்கை என்ன என்பதையே மறந்திருப்பார் அவர்.  கட்சி ஆரம்பித்த இதுநாள்வரை அவருடைய இன மக்களுக்கு அவர் செய்தது என்ன?  கொபாலபுரமா? போயஸ் கார்டனா? என்பதை முடிவு செய்வதிலேயே பா.மா.க. வின் காலம் ஓடி கொண்டு இருக்கின்றது.  கூட்டணியிலேயே இவருக்கு இவ்வளவு சிக்கல்கள் இருந்தால் இவரை நம்பி மக்கள் ஓட்டு போட்டு முதலமைச்சர் ஆக்கினால் மக்களின் நிலைமை அவ்வளவுதான்.  தகுதிக்கு மீறி ஆசை பட கூடாது.  கூட்டணியை மாற்றி கொள்வதும் கொள்கையை மாற்றி கொள்வதும் ராமதாசுக்கு கை வந்த கலை என்பது தமிழக மக்கள் அறியாததா? 


No comments:

Post a Comment