Sunday, November 14, 2010

ஊழல் புரச்சியாளர் பதவி விலகல்!

     தி.மு.க மந்திரியும் மத்திய தொலைதொடர்பு அமைச்சருமான ராஜா நேற்று தான் பதவியை விட்டு விலகுவதாக கூறினார்.  மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பாததாலும் தனது தலைவர் கலைஞர் கருணாநிதியின் ஆணையை ஏற்றும் தான் பதவியை ராஜினாமா செய்வதாகவும் கூறினார்.  நேற்று இரவு பிரதமர் மன்மோகன் அவர்களை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.  பிரதமர் அத்தனை ஏற்று பரிந்துரைத்து ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைத்தார்.  அங்கும் ராஜினாமா எற்றுகொள்ளபட்டது.  
     அரசியலில் ஊழல்கள் என்பது சாதாரணம்தான்.  ஊழல் செய்யாத அரசியல் கட்சிகள் என்பதே இல்லை என்ற அளவிற்கு இன்றைய அரசியல் நிலை உள்ளது.  ஆனால் ஊழலில் புரட்சி செய்தவர் ராஜா.  மக்கள் அவர் எதாவது சாதனை செய்வார் என்ற நம்பிக்கையில்தான் அவரை மந்திரியாக்கி அழகு பார்த்தனர்.  அவர்களுடைய நம்பிக்கையை ராஜா நிறைவேற்றி வைத்துள்ளார்.  இதுவரை யாருமே செய்திராத இனிமேலும் செய்ய முடியாத அளவிற்கு ஊழல் செய்துள்ளார் ராஜா.  அவர்மேல் குற்றம் சுமத்தப்பட்ட உடனேயே அவர் இந்த ராஜினாமா முடிவை எடுத்திருக்க வேண்டும்.  ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.  ராஜினாமா செய்துவிட்டால் நான் குற்றம் செய்ததை ஒப்புகொல்லும்படி ஆகிவிடும் என்று நினைத்தார் ராஜா.  ஆனால் இன்று  கூடும் மக்களவையில் தன்னை பதவியை விட்டு விளக்கி விடுவார்கள் என்று  தெரிந்துகொண்ட ராஜா சற்று முந்திக்கொண்டு நேற்றே தான் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
     அவர் பதவி விலகுவதால் மட்டுமே இதற்கெல்லாம் முடிவு கட்டி விட்டதாக அர்த்தம் இல்லை.  அவர் மேல் முறையான விசாரணை நடைபெற வேண்டும்.  அவர் குற்றவாளி கூண்டில் நிறுத்தி விசாரிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்ற வேண்டும். இதுவே தமிழ் மக்களின் ஆசை. இதுபோல பெரிய அளவிற்கு கொள்ளை அடிப்போரை தேச துரோகிகளாக கருதி தூக்கு தண்டனை வழங்கவேண்டும். அதுவே மத்த ஊழல் பெரிசாளிகளுக்கு பாடமாகவும் பயமாகவும் இருக்கும்.  ஊழல் என்ற ஒன்று இல்லாவிட்டால் இன்று இந்தியாவிடம் மற்ற நாடுகள் கையேந்திக்கொண்டு இருக்கும்.  இதுபோன்ற ஊழல் பெரிச்சாளிகளை ஆதரிப்பதை மக்கள் கைவிட வேண்டும்.   

No comments:

Post a Comment