Monday, December 6, 2010

வைட்வைன் நிறுவனத்தை தன்வசப்படுத்துகிறது கூகுள்



சான் பிரான்சிஸ்கோ : கூகுள் நிறுவனம், வைட்வைன் டெக்னாலஜிஸ் நிறவனத்தை விலைக்கு வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், இண்டர்நெட் வீடியோக்களை சுலபமாக கையாளுவதற்கும், குதனை திருட்டுகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, அமெரிக்காவின் சியாட்டிலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வைட்வைன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை தன்வசப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து, கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தங்களுடைய டிஜிட்டல் ரைட்ஸ் மேனேஜ்மெண்ட்டுக்காகவும், இண்டர்நெட் வீடியோக்களை பாதுகாப்பாக கையாளும் பொருட்டு இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வைட்வைன் டெக்னாலஜிஸ் நிறுவனம், இண்ட‌ர்நெட் தொடர்புடைய டிவிக்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் மொபைல்பேன்களை வர்த்தகப்படுத்தி வருவதாகவும், இந்த நிறுவனத்தை தன்வசப்படுத்துவதன் மூலம், தங்களது வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல பாதுகாப்பான சேவை‌களை தரமுடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment