Sunday, December 19, 2010

சச்சின் சூப்பர் சாதனை

டெஸ்ட் அரங்கில் 50 சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற மகத்தான சாதனை படைத்தார் இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இந்த மைல்கல்லை தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான செஞ்சுரியன் டெஸ்டில் எட்டினார். கிரிக்கெட்டில் சாதனை மன்னனாக ஜொலிக்கிறார் சச்சின். இவர் களமிறங்கினாலே ஏதாவது ஒரு சாதனை நிகழ்ந்து விடும். கடந்த 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன், அதிகம் சதம் அடித்து சாதித்துள்ளார். இவரது சாதனை பயணம் நேற்றும் தொடர்ந்தது. செஞ்சுரியனில் நடந்த முதல் டெஸ்டில் மிக கவனமாக ஆடிய இவர், டெஸ்ட் போட்டிகளில் தனது 50வது சதத்தை எட்டினார். இரண்டாம் இன்னிங்சில் கேப்டன் தோனியுடன் சேர்ந்து துணிச்சலாக போராடிய இவர் 107 ரன்களுடன் அவுட்டாகாமல் உள்ளார்.
தொடரும் சாதனை பயணம்...: கிரிக்கெட் உலகில் சச்சினின் சாதனை பயணம் தொய்வின்றி தொடர்கிறது. நேற்று டெஸ்டில்
50வது சதம் அடித்த இவர், இன்னும் பல மைல்கல்லை கடக்க காத்திருக்கிறார்.கடந்த 1973ல் மும்பையில் பிறந்த சச்சின், இளம் பருவத்திலேயே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தார். 1988ல் பள்ளி அளவிலான ஹாரிஸ் ஷீல்டு போட்டியில் பங்கேற்ற இவர், தனது நண்பர் வினோத் காம்ப்ளி(349)யுடன் சேர்ந்து 664 ரன்கள் சேர்த்து முதல் சாதனை படைத்தார். இதில் சச்சின் மட்டும் 326 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து தனது 16வது வயதில் 1989ல் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இத்தொடரில் வக்கார் யூனிஸ் உள்ளிட்ட வேகங்கள் வீசிய பவுன்சரில் முகத்தில் ரத்தக் காயம் ஏற்பட்ட போதும், தனது ஆட்டத்தை தொடர்ந்தார். சோதனைகளை கடந்த இவர், கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் பாராட்டும் அளவுக்கு சிகரங்களை தொட்டார்.

கடந்த 21 ஆண்டுகளாக விளையாடி வரும் 37 வயதான இவர் நிகழ்த்திய சில முக்கிய சாதனைகள்:
* டெஸ்ட் விளையாடும் அனைத்து  நாடுகளுக்கும் எதிராகவும் சச்சின் சதம் அடித்துள்ளார்.
* டெஸ்ட் அரங்கில் அதிக முறை (20) 150 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையும் இவர் படைத்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் லாரா 19, ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் 18 முறை 150 ரன்கள் எடுத்துள்ளனர்.
* டெஸ்ட் அரங்கில் அடித்துள்ள 50 சதத்தில், 28 அயல்நாடுகளிலும், 22 இந்தியாவிலும் எடுத்துள்ளார்.
* இதுவரை 6 இரட்டைசதம் அடித்துள்ள சச்சினின் 50 சதத்தில் 15 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார்.
* ஒருநாள் (46), டெஸ்ட் (50) சேர்த்து 96 சதம் அடித்துள்ளார். 

No comments:

Post a Comment