குழந்தைகளுக்கு சிறந்த சமூக சேவை மற்றும் தனிநபருக்கான சமூக சேவகி தேசிய விருதை, போடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை சிவகாமிக்கு குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் வழங்கினார்.தேனி மாவட்டம், போடி புதுக்காலனி பகுதியில் வசிப்பவர் சிவகாமி (82). 37 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். 40 ஆண்டுகளுக்கு முன்பு நேரு தொண்டு நிறுவனம் ஆரம்பித்து, அதன் கிளைகளாக நேரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், குழந்தைகள் காப்பகங்கள், அன்னை இந்திரா நினைவு ஆரம்ப பள்ளி, மகளிர் மன்றம் போன்றவற்றை அமைத்து, தலைவராக உள்ளார். 130 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இவரது பல்வேறு சேவைகளை பாராட்டும் வகையில், 2009 குழந்தைகளுக்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகி தேசிய விருதுக்கு தனி நபர் வரிசையில் மத்திய அரசு இவரை தேர்வு செய்தது.இதற்கான விருதை, டில்லியில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், சிவகாமிக்கு வழங்கினார். விருதுக்கான ஊக்கத்தொகையான ஒரு லட்ச ரூபாய் காசோலையும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் இந்த ஆண்டு சிறந்த தனிநபருக்கான விருது பெற்ற மூன்று நபர்களில் இவரும் ஒருவர்.
No comments:
Post a Comment