இன்னும் தீர்க்கப்படாதப் பிரச்னை என்ற நெடுநாளையப் பட்டியலில் இருந்து, காஷ்மீர் பெயரை ஐ.நா., நீக்கியுள்ளது. இவ்விவகாரம், பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஐ.நா.,வின் இச்செயலை இந்தியா வரவேற்றுள்ளது. பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இம்மாதத்தில் இருந்து ஐ.நா.,வின் பாதுகாப்புக் கவுன்சிலுக்கான தலைமையைப் பிரிட்டன் ஏற்றுள்ளது. இந்நிலையில், ஐ.நா.,வின் பொதுக் குழுக் கூட்டம் பிரிட்டன் தலைமையில் நடந்தது. அக்கூட்டத்தில், சர்வதேச அரசியலில் இன்னும் தீர்க்கப்படாதப் பிரச்னைக்குரிய பகுதிகளின் பெயர்ப் பட்டியலில் இருந்து காஷ்மீர் பெயர் நீக்கப்பட்டது.காஷ்மீர் பிரச்னையில் ஐ.நா., தலையிட வேண்டும் என்பது பாகிஸ்தானின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், காஷ்மீர் தனது ஒருங்கிணைந்தப் பகுதி என்பதால், பாகிஸ்தானுடன் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மற்றவர்கள் தலையீடு தேவையில்லை என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில், காஷ்மீர் பெயர் நீக்கத்திற்கு ஐ.நா.,வுக்கான பாகிஸ்தான் தூதர் யு.என். அம்ஜத் உசேன் தனது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில்,"பாதுகாப்புக் கவுன்சிலின் பரிசீலனைக்குரிய விஷயங்களில் மிகப் பழமையானப் பிரச்னையாக காஷ்மீர் குறிப்பிடப்பட்டுள்ளது என்றாலும், அதன் பெயர் நீக்கப்பட்டது, அப்பிரச்னையைப் புறக்கணிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
ஆனால் காஷ்மீர் பெயர் நீக்கத்திற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணீத் கவுர் இதுகுறித்துக் கூறுகையில், "காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று உறுதிபடத் தெரிவித்து வருகிறோம். ஐ.நா.,வின் இச்செயல் வரவேற்கத்தக்கது. இருதரப்பு பிரச்னைகளையும், இதே ரீதியில் ஐ.நா., அணுகும் என நம்புகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.(dinamalar)
No comments:
Post a Comment