Thursday, November 11, 2010

ராசாவை நீக்கினால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு: ஜெயலலிதா





சென்னை, நவ.11- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ராசாவை பதவியிலிருந்து நீக்கினால், காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"2ஜி ஸ்பெக்டரம் ஊழல் தொடர்பான விவகாரத்தில், மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ஆ. ராசாவை நீக்க வேண்டும். அவ்வாறு அவரை நீக்கினால் கூட்டணி அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொள்ளும் என்று காங்கிரஸ் கருதுவது இயற்கையே. அத்தகைய சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக ஆதரவு தரும்." என்று அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவு தருவதற்காக தான் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்றும், பொது வாழ்க்கையில் தூய்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மக்களவையில் உள்ள 9 அதிமுக எம்.பி.,க்கள் மற்றும் ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 18 எம்.பி.,க்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.(dinamani)

1 comment:

  1. பத்தினி வேடம் கலைந்து இப்போது விலை பேசும் படலம் ஆரம்பித்துள்ளது. தி மு க அரசே விலக வேண்டும் என்ற கூப்பாட்டிலிருந்து ஒவ்வொருவராக விலகக் கோலஞ்செய் படலத்தின் வசனங்கள். பாவம், இதுவரை ஏமாந்த சோனகிரிகள். அதற்குமேல் பாவம் இனி ஏமாறப் போகும் சோமாரிகள்.

    ReplyDelete