Sunday, October 23, 2011

ஐஸ்வர்யா ராயாக ஆசை: அசின்

நடிகை ஐஸ்வர்யா ராய் இத்தனை ஆண்டுகளாகியும் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் போல் ஆக ஆசையாக இருக்கிறது என்று நடிகை அசின் தெரிவித்துள்ளார்.

தமிழில் நம்பர் 1 இடத்தில் இருந்த அசினுக்கு பாலிவுட் மோகம் ஏற்பட்டதால்

கேப்டனின் சுய விவரம்

Vijayaraj Azhagarswami Naidu, professionally known by his stage name Vijayakanth, is a Tamil film actor and politician in Tamil Nadu, India. He is the founder of the Desiya Murpokku Dravida Kazhagam and a Member of Legislative Assembly representing Virudhachalam, Tamil Nadu, India.
Early life
VijayakanthVijayakanth was born as Vijayaraj raja on 25 August 1952 in Madurai, Tamil Nadu. His family deity is Veera Chinnamma at Kangeyanatham. His parents are K. N. Alagarswami and Aandal Azhagarswami. His father had a rice mill and was a popular man in the region. Alagarswami was Madurai's Counsellor for two terms. Vijayakanth had a stepmom by the name Rukmaniammal and she had 7 children and on the whole, alagarswami had 11 children He married Premalatha on 31 January 1990 and had two sons named Vijay Prabhakar and Shanmuga Pandian. Upon entering the film industry to pursue an acting career, Director Khaja (who directed his first film) changed his name to " Amirtaraj" and then "Vijayakanth", dropping the "raj" out of his name and suffixing "kanth." He is nicknamed "Captain" which was taken from his film Captain Prabhakharan.
Education
Vijayakanth first studied in Rosary Convent in Madurai and later continued his education in M C School in Madurai. He later switched over to Devakottai T. Britto High School where he was an inmate. Vijayakanth's confidant till date, Ibrahim Ravuthar was his school friend.
Acting career
Vijayakanth has starred

Wednesday, October 19, 2011

மயக்கம் என்ன பாடல்கள்

மயக்கம் என்ன பட பாடல்களை தரவிறக்க இங்கே சுடுக்குக  

திமுகவின் 'திருமங்கலம் பார்முலா' இப்போது அதிமுகவிடம்

'திருமங்கலம் பார்முலாவை' இப்போது அதிமுக எடுத்துக் கொண்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கை செலுத்திவிட்டு நிருபர்களிடம் பேசிய அவர்,

தேர்தல் ஆணையம், அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் கைப்பாவையாக,

மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய முதல்வர் ஜெயலலிதா

திமுக ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட வழக்குகள் ஒவ்வொன்றிலிருந்தும், மிகக் கடுமையான போராட்டம் நடத்திய பின்னரே வெளியில் வந்த முதல்வர் ஜெயலலிதா தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து மட்டும் விடுபட முடியாமல் கடுமையாக திணறி வருகிறார். மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக

ஒஸ்தி பாடல்கள்

ஒஸ்தி பாடல்கள் தரவிறக்க இங்கே சுடுக்குக 

Tuesday, October 11, 2011

யுவராஜ், ஹர்பஜன் மீது சூதாட்ட புகார்! * இந்திய கிரிக்கெட்டில் அதிர்ச்சி

 கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் இந்தியாவின் ஹர்பஜன், யுவராஜ் சிங் சிக்கியுள்ளனர். இவர்களுடன் தொடர்பு இருந்ததாக பிரபல சூதாட்ட "ஏஜன்ட்' மசார் மஜித் தெரிவித்துள்ளார். இதனை ஏற்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மறுத்துள்ளது.
கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில், சூதாட்ட "ஏஜன்ட்' மசார் மஜீத்துடன் சேர்ந்து "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்ட பாகிஸ்தான் அணியின் அப்போதைய கேப்டன் சல்மான் பட், முகமது ஆசிப்,

Thursday, October 6, 2011

"கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்

 ""இரண்டு கட்சிகளும் (அ.தி.மு.க., - தி.மு.க.,) கொள்ளையடிக்கும் கட்சிகள். நான் இருந்தால் கொள்ளையடிக்க முடியாது என்பதால் கழற்றி விட்டனர்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் காட்டமாக கூறினார். 

மதுரை மேயர் வேட்பாளர் கவியரசு, கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. அடிப்படை

Wednesday, October 5, 2011

சற்றும் மரியாதை தெரியாத, இல்லாத கட்சி அதிமுக- பிரேமலதா கடும் தாக்கு

 கொஞ்சம் கூட மரியாதை இல்லாத கட்சிதான் அதிமுக. அதனால்தான் அந்தக் கூட்டணி வேண்டாம் என்று கூறி பிரிந்து வந்து விட்டோ் என்று அதிமுகவிலிருந்து தேமுதிக விலகி வந்ததற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா.

திருச்சி, திருவெறும்பூரில் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து பேசினார் பிரேமலதா. அப்போது அதிமுகவை மரியாதை இல்லாத கட்சி என்று கடுமையாக தாக்கிப் பேசினார்.

பிரேமலதா பேசுகையில், 

தற்போது மரியாதை இல்லாத கட்சியுடன் கூட்டணியில் இருக்க வேண்டாம் என்று தான் அதிமுகவை விட்டு பிரிந்து வந்தோம். தேமுதிகவை மதித்த கட்சிகள் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. எனவேதான் அவர்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம்.

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டு வைத்தோம். அதற்கு காரணம் சேலம் மாநாட்டில் தொண்டர்கள் விரும்பியது தான் என்றார் பிரேமலதா.

சென்னை அணி விரைவில் வெளியேறியது நல்லதே: தோனி

சாம்பியன்ஸ் லீக் 20-20 போட்டித் தொடரில் தோல்வியுற்று விரைவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது நல்லதற்கே என்றார் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி.

இதற்குக் காரணமாக அவர் சுட்ட்டிக்காட்டியது, வரும் அக்டோபர் 14ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்குத் தயாராக

என் படத்தில் வடிவேலா... இல்லை என்கிறார் சுந்தர்.சி!

நான் அடுத்து இயக்க போகும் படத்தில் வடிவேலு நடிக்கப்போவதாக வந்த செய்தி உண்மையில்லை என்று கூறுகிறார் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி. தமிழில் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக கூறி, விஜயகாந்தை தமது பேச்சால் வெளுத்து வாங்கிய வடிவேலு, தேர்தல் முடிவுக்கு பின்னர் தமிழ்நாட்டில் தான் இருக்கிறாரா... என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ளார். குறிப்பாக தேர்தல் முடிவுக்கு பின்னர் படவாய்ப்புகளும் ஏதும் இல்லாமல் இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுந்தர்.சி படத்தில் வடிவேலு நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளிவந்த வின்னர், கிரி உள்ளிட்ட படங்கள் வடிவேலு காமெடிக்காவே மாபெரும் வெற்றி பெற்றன. இதனால் சுந்தர்.சி படம் மூலம் வடிவேலு மீண்டும் புத்துயிர் பெறப்போவதாக கோலிவுட்டில் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் வடிவேலு தன்னுடைய படத்தில் நடிக்கவே இல்லை, அதுவெறும் வதந்தி தான் என்று கூறியுள்ளார் சுந்தர்.சி.

இதனிடையே தேர்தலில் அநாகரிமாக பேசியதே வடிவேலுவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு காரணம் என்றும், இப்போதும் வடிவேலுவுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதாகவும், ஆனால் அவரை வைத்து படம் எடுக்க தான் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தயங்குவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

வடிவேலுவுக்கு மீண்டும் எப்போது நல்லகாலம் வருமோ...?

தேர்தலில் ஒதுக்கீடு எதற்கு?


"தேர்தல்களில் ஒதுக்கீடு செய்து மக்களை ஏன் பிரிக்கிறார்கள்? 'என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்புத்தூரில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, விஜயகாந்த் பேசியதாவது:""ஜாதி சாப்பாடு போடாது. உங்கள் மூச்சில் என்ன ஜாதியா வருகிறது? எல்லோரும் ஒன்றாக இருந்து தானே என் பேச்சுக் கேட்கிறீர்கள். இந்த தனி,பொது என்பதெல்லாம் தேவையில்லாதது. நீங்களாக மக்களை பிரிக்காதீர்கள். யார் பிரிக்க சொன்னது? நான் மனசாட்சிப்படிபேசுகிறேன்.யாரும் பிறக்கையிலேயே இந்த ஜாதி வேண்டும் என்று கேட்பதில்லை. இது வரை ஜெயித்தவர்கள் எல்லாம்நல்லது செய்திருந்தால் என் பேச்சை ஏன் கேட்க வரப் போகிறீர்கள். எனக்கும் ஒரு வாய்ப்தைத் தாருங்கள் என்று கெஞ்சிக் கேட்கிறேன். என் கட்சியினர் வெற்றி பெற்றால் நல்லது செய்யும் வரை அவர்களை விடமாட்டேன். "ஞாபக மறதி' என்று கூறும் சிதம்பரம் காங்., கட்சியைக் காட்டிக் கொடுக்கிறாரா?இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Tuesday, October 4, 2011

எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் : விஜயகாந்த்

: ""ஜாதி, மதம், பணம் அரசியலில் எடுபடாது, பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்வதால் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்,'' என, ராஜபாளையத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். 

ராஜபாளையம் நகராட்சி தலைவர் தே.மு.தி.க., வேட்பாளர் சுப்பிரமணிய ராஜா உள்ளிட்ட பல வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்த அவர் பேசியதாவது: உள்ளாட்சி பதவி என்பது கவுரவமானது,

Monday, October 3, 2011

நிறைய பேரு என்னை காதலிச்சாங்க...

ஹைதராபாத் பக்கத்துல உள்ள நெல்லூர்தான் சொந்த ஊர். ஆனா, நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே ஹைதராபாத்துல
தான். அடிக்கடி நெல்லூருக்கு பாட்டி வீட்டுக்குப்போவேன். எங்க குடும்பத்துலேயே நான்தான் அழகு. அதனால எல்லாருக்கும் நான் செல்லப் பிள்ளை. நான் பண்ற சேட்டையெல்லாம்

ஐபால் ஷான் எஸ்-315 போன்

ஐபால் எஸ்-315 என்ற மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது ஐபால் நிறுவனம்!

நோக்கியா, மோட்டோரோலா, சாம்சங் நிறுவனங்கள் போல ஐபால் நிறுவனமும் மக்களிடையே சிறப்பான பெயர் பெற்ற நிறுவனம். இந்த மொபைல் டியூவல் சிம் போன்

கோபம் இருக்கும் இடத்தில் தானே குணம் இருக்கும்: விஜயகாந்த்

 தவறு நடப்பதைப் பார்த்தால் கோபப்படுகிறேன். அதற்காக என்னை கோபக்காரன் என்கிறார்கள். கோபம் இருக்கும் இடத்தில் தானே குணம் இருக்கும் என்று தேமுதிக தலைவரும், எதிரிகட்சித் தலைவருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில்

மக்கள் பிரச்னைகளில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்: கருணாநிதி

 முதல்வர் ஜெயலலிதா மக்கள் பிரச்னைகளிலே ஆக்கப்பூர்வமாக கவனத்தைச் செலுத்துவது அவருக்கும் நல்லது; மாநிலத்துக்கும் நல்லது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

 இதுதொடர்பாக, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 நான்கு நாள்களாக ஏற்பட்டுள்ள மின்தட்டுப்பாடு சீர் செய்யப்படும் என்று

மகாத்மா பட்டத்தை ஏற்க ஹசாரே மறுப்பு


 கிராம சபையினர் அளித்த, "மகாத்மா' பட்டத்தை ஏற்க, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மறுத்து விட்டார். ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரேவை பாராட்டி, மகாராஷ்டிராவில் உள்ள அவரது சொந்த கிராமத்தினர், அவருக்கு, "மகாத்மா' என்ற பட்டத்தை அளிப்பதாக, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், இதை ஏற்க மறுத்து விட்டார் ஹசாரே.

இது குறித்து, நிருபர்களிடம் அவர் குறிப்பிடுகையில், "காந்தியடிகளின் வழியை பின்பற்றும் சாதாரண இந்தியன் நான். காந்தியடிகள், அம்பேத்கர் போன்ற மகாத்மாக்களின் வழியை நாம் பின்பற்றி வாழ்வில் மேன்மையடைய வேண்டும். மக்களுக்கான பணியில் ஈடுபட்டுள்ள என்னை போன்றவர்களை மகாத்மா காந்தியோடு ஒப்பிட்டு பேசுவதை நான் விரும்பவில்லை' என்றார். 

Sunday, October 2, 2011

அப்ரிதி பல்டி

சச்சின் டெண்டுல்கரை அவமதிக்கும் வகையிலோ அல்லது அவரது திறமையை குறைத்தோ நான் எந்தக் கருத்தையும் கூறவில்லை. ஒரு குறிப்பிட்ட போட்டியில்

மேயர், கவுன்சிலர்கள் அழகிரியின் கொலு பொம்மைகள்: பிரேமலதா


""மதுரை மேயர், தி.மு.க., கவுன்சிலர்கள் அழகிரியின் "கொலு பொம்மைகள்'. இவர்களால் மக்களுக்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறினார்.மதுரை மேயருக்கு போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் கவியரசுவை ஆதரித்து ஜீவாநகரில் பிரேமலதா பேசியதாவது:மதுரையில் தி.மு.க.,வை சேர்ந்த மேயர், கவுன்சிலர்கள் 15 ஆண்டுகள்

இல்லறத்தில் இணைந்தால் இனிமையாக வாழலாம்!

மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அனைத்து மத சாஸ்திரங்களும் தெரிவிக்கின்றன. திருமணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம் எனலாம். திருமணம் என்பது இருவர்

ரஜினியின் ராணா கைவிடப்படுமா?

இதோ அதோ என்று தள்ளிப் போடப்பட்டு வந்த ரஜினியின் ராணா படம் கைவிடப்படக்கூடும் என கோடம்பாக்கத்தில் பலமான வதந்திகள் உலா வர ஆரம்பித்துள்ளன.

ராணா படம் துவங்கிய தினத்தன்றுதான் ரஜினியின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஒரே ஒரு நாள் ஷூட்டிங் நடந்ததோடு சரி. அதன் பிறகு

அரசு நினைத்தால் எதையும் சாதிக்கலாம் : விஜயகாந்த் பேச்சு


 ""அரசாங்கம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்,'' என்று கும்பகோணத்தில் நடந்த உள்ளாசித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.

தமிழக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நேற்று கும்பகோணம் மகாமகக்குளம் மேல்கரையில், தே.மு.தி.க., நிறுவனத்தலைவர் விஜயகாந்த், நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் கோமதிசிவாவை ஆதரித்து, முரசு சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, திறந்தவேனில் இருந்து பேசியதாவது:நான் கும்பகோணம், மாயவரம், மன்னார்குடி, முத்துப்பேட்டை என, உங்கள் பகுதியிலுள்ள பல ஊர்களை சுற்றிப் பார்த்தவன். தற்போது நான் ஓட்டு கேட்க வந்துள்ளேன்.இன்றைய நிலையில் நாட்டுக்கே உள்துறை மந்திரியாக உள்ள சிதம்பரம், எனக்கு ஞாபகமறதி ஜாஸ்தி என்று சொல்கிறார். இது நாட்டுக்கே அவலம்.ஏழைகளுக்கு கடன் கொடுத்தால், கரெக்டாக வசூல் செய்கின்றனர். பணக்காரர்களுக்கு கடன் கொடுத்தால், கணக்கு தெரியாது என்று சொல்கின்றனர். திரும்ப, திரும்ப செய்கின்ற தப்பால் தான் இதுமாதிரி அரசியல்வாதிகள் உருவாகிறார்கள். நாம் மாடு மாதிரி

பிரேமலதா மீது வழக்கு

 தேர்தல் விதிகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா மீது மதுரையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு தேமுதிக சார்பில் கவியரசு போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் வாகனங்களைப் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக கூறி மதுரை போலீஸார் பிரேமலதா, வேட்பாளர் கவியரசு மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக பிரிந்து வந்த பின்னர் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர் மீது அதுவும் விஜயகாந்த் மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.