Sunday, October 31, 2010

சேவாக் ஆதரவு

     நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறைக்கு சேவாக் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.  மேலும் தான் பல முறை நடுவர்களின் தவறான முடிவினால் ஆட்டம் இழந்துள்ளதாகவும் இம்முறை செயல்படுத்தப்பட்டால் தவறான முடிவு எடுக்கப்பட்டாலும் தொடர்ந்து ஆடும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
     முன்னதாக இந்திய அணியின் நச்சத்திர வீரர் சச்சின் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  ஆனால் முன்னால் கேப்டன் டிராவிட் இதற்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.  டோனி இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்து கருத்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர் "நவீன உதவிகளுடன் நடுவரின் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய முடியுமே தவிர பெரிதாக எந்த வித்தியாசமும் வந்துவிட போவதில்லை" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
     நடக்க இருக்கும் நியூசிலாந்து தொடரிலும் உலக கோப்பை தொடரிலும் இதனை அமுல்படுத்தவேண்டும் என்று சேவாக் கூறினார்.

தேவை உடனடி தண்டனை!

     கோவையில் அக்க தம்பி கடத்தி செல்லப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.  பணத்துக்காக ஒரு டிரைவரும் அவருடைய நண்பரும் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு உள்ளனர்.  மேலும் அந்த அப்பாவி சிறுமியை பாலியல் சித்ரவாதை செய்து பிறகு கொன்றுள்ளனர்.  கடத்திய டிரைவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரேதத்தை கைப்பத்தி  உள்ளனர் போலீசார்.  
     கோவை ரன்கேகவுடார் வீதியில் கதான்பட்டி சந்து பகுதியில் வசிப்பவர் ரஞ்சித்குமார் ஜெயின்.  துணி கடை வைத்துள்ளார்.  இவரது மகள் முஸ்கின் மற்றும் மகன் ரித்திக் முறையே 5 மற்றும் 3 வகுப்புகளில் படித்துவந்தனர். வெள்ளிகிழமை அன்று இருவரும் பள்ளிக்கு செல்வதற்காக பள்ளிவாகனதிர்காக காத்துகொண்டு இருந்திருக்கின்றனர்.  அப்போது வந்த ஆம்னி வேனில் கடத்தப்பட்டுள்ளனர்.  
     போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபடவே முழு முனைப்புடன் இரவு பகலாக விசாரணைசெய்து கடத்திய குற்றவாளி ஒரு டிரைவர் என கண்டுபிடித்தனர்.  அவருடைய மொபைல் போனின் நம்பரை கொண்டு அவர்கள் திருமூர்த்திமலை அடிவாரத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
     இதனிடையே கேட்டிமேடு கால்வாயில் ஸ்கூல் பாக் ஒன்று மிதந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டு அது சிருவனுடையதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது.  பிறகு டிரைவரும் கைதுசெய்யப்பட்டார்.  அவரை விசாரித்தபோது குழந்தைகளை கால்வாயில் தள்ளி கொலை செய்ததை ஒப்புகொண்டார்.  பிறகு கால்வாய்க்கு விரைந்த போலீசார் இரு பச்சிளம் குழந்தைகளின் பிரேதத்தை மீட்டனர்.  
      மனதை உருக்கும் இந்த சம்பவம் இரண்டு நாட்களாக மனதை உருக்கி தூங்கவிடாமல் செய்கிறது.  ஆதி காலம் முதல் நமது பண்பாடு குழந்தைகளை தெய்வங்களின் மறு உருவமாகவே உருவகம் செய்கிறது.  அந்த குழந்தைகளின்  முகங்களை பாருங்கள் அதனை கொலை செய்ய அவர்களுக்கு எப்படி மனம் வந்திருக்கும்.  கண்டிப்பாக அவர்கள் மனிதனாக இருக்கவே முடியாது.  அரக்கர்கள் கூட அந்த காலத்தில் முறை அறிந்துதான்  கொலைகூட செய்வார்கள்.  எனவே இவர்கள் அரக்கர்கள் கூட அல்ல, அதற்கும் மேல் கொடியவர்கள் வார்த்தைகளால் வர்நிக்கமுடியவில்லை அந்த கயவர்களை.  
     அந்த பெற்றோர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய அந்த கயவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கபோகிறது?  வழக்கம்போல்தான் இருப்பது முப்பது ஆண்டுகள் வழக்கு விசாரணை நடந்து கொலையாளிகளுக்கு தண்டனை வழங்கப்படலாம் அல்லது அவர்கள் தப்பித்துவிடலாம்.  
     நமது தண்டனை வழங்கும் முறையை நாம் மறுபரிசீலனை செய்யும் காலம் வந்துவிட்டது.  கண்முன்னே கொடிய குற்றவாளிகள் நமது சட்டத்தின் முன்பு நியாய வாதிகளாக ஆகிவிடுவதை சில நேரங்களின் தடுக்கமுடியவில்லை நமது பழைய சட்டங்களால் இனியும் எந்த பயனும் இல்லை. அதனால்தான் கசாப் போன்ற குற்றவாளிகளுக்கு நம்மால் இன்னும் தண்டனை வழங்க  முடியவில்லை. இந்த பழைய சட்டங்களை வைத்துகொண்டு பயனில்லை என்றே நம்மை நினைக்கவைக்கிறது.  இம்மாதிரியான கொடிய கொலைகாரர்களுக்கு அந்த இடத்திலேயே தண்டனை வழங்கப்படவேண்டும்.  அப்பொழுதுதான் சட்டத்தின் பெயரில் மக்களுக்கு நம்ம்பிக்கை பிறக்கும்.  அரபிக் நாடுகளைப்போல் அவருகுக்கு வழங்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தவேண்டும்.  எதிர்காலத்தை இழந்துவிட்டு நிகழ் காலத்தை கேள்விகுரிஆக்கி நிற்கும் பெற்றோர்களுக்கு இதுவே மருந்தாகும்.   

அன்பு தமிழர்களே- உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!

     நம் தமிழ்நாடு 1953 வரை ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களும் இணைந்து, "சென்னை தலைமாநிலம் என்ற பெயருடன் இருந்தது.  ஆந்திரர்களுக்கென தனிமாநிலம் கோரி ஆந்திரத்தின் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்தார்.  அது பெரும் கிளர்ச்சியாய் வெடித்தது.  உடனே இந்திய அரசு, கர்நூலை தலைனகரமாககொண்டு 11 மாவட்டங்கள் இணைந்த ஆந்திர மாநிலத்தை 1953 அன்று அமைத்தது.  1956 நவம்பர் முதல் நாள் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொது சென்னை தலைமாநிலம் ஆந்திரம், கருநாடகம், கேரளம், சென்னை மாநிலம் என நான்கு மாநிலங்களாக பிரிந்தது.
     அன்று தமிழகம் கண்டுகொள்ளாமல் புறக்கணித்த காரணத்தினால் வடவேங்கட மாலவன் குன்றமாகிய திருப்பதியுடன் சித்தூர், புத்தூர், கண்ணப்ப நாயனார் பிறந்த திருக்காளத்தி, புங்கனூர், காகுந்தி, பலமநெறி போன்ற தமிழ் பகுதிகளையும் சேர்த்து ஆந்திரத்திடம்  இழந்தோம்.  வெங்காலூர் கோலார், கொள்ளேகாலம் போன்ற தமிழ் பகுதிகளை கருநாடகத்திடம் இழந்தோம்.  பாலக்காடு, மூனாறு, தேவிகுளம், பீர்மேடு, உடும்ம்பன்சோலை, நெய்யாற்றின் கரை, நெடுமாங்காடு, செங்கூட்டையின் பாதி, கொச்சின், சித்தூர் போன்ற தமிழ் பகுதிகளை  கேரளத்திடம் இழந்தோம்.
     தெலுங்கர்கள் தங்கள் மாநிலத்தை ஹைதராபாத்  மாநிலம் என்று கூறாமல் ஆந்திர மாநிலம் என்றே அழைத்து உரிமை பாராட்டினர்.  அது இப்போது தெலுங்கு தேசமாயுற்று.  கன்னடர்கள் தங்கள் மாநிலத்திற்கு பெங்களூர் மாநிலம் என்று பெயர் வைக்காமல் கருநாடக மாநிலம் என்றே பெயர் வைத்துள்ளனர்.  அதேபோல மலையாளிகள் தங்கள் மாநிலத்திற்கு திருவனந்தபுரம் என்று பெயர் வைக்காமல் கேரளா மாநிலம் என்றே பெயர் வைத்துள்ளனர்.  தமிழர்களாகிய நாமோ தமிழ் மாநிலம் என்ற பெயரை கருதிகூட பார்க்காமல் சென்னை ராஜ்ஜியம் என்றே விட்டு வைத்தோம்.
     அதைமாற்றி இதற்க்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று கூறி, அறுபது மூன்று நாள் உண்ணா நோன்பிருந்த தியாகி சங்கரளிங்கநாரை செத்தால் சாகட்டும் என்று விட்டுவிட்டு அன்றைய தமிழகம் செயலற்று கிடந்தது.  அவரும் கோரிக்கை நிறைவேறாமல் செத்து மடிந்தார்.  வரலாற்று திருப்பத்தில் 1969 ஜனவரி 14 அன்று தமிழர் திருநாளாகிய பொங்கலன்று அன்றைய தமிழக முதல்வர் அண்ணா அவர்கள் நம் மண்ணுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூடினார்.
     இப்போது நம் மாநிலம் தமிழ் மக்கள் வாழும் தமிழ் மாநிலம் என்னும் நிலையை இழந்து, பல மொழி மக்களும் உரிமை கொண்டாடும் மாநிலமாகி இழிநிலையை அடைந்துள்ளது.  பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் நாங்கள் இத்தனை விழுக்காடு இருக்கிறோம் எனவே எங்கள் மொழிக்கு உரிய இடம் வேண்டும் என்று உரிமை கொண்டாடி தலையெடுக்கும் போக்கு உருவாகியுள்ளது.  மதராஸ் மனதே என்று சென்னையிலே கூடி தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் தெளுகர்கள். கன்னியாகுமரியை கேரளா மாநிலதூடு சேர்க்க வேண்டும் என்று கூக்குரலிடுகிறார்கள்  மலையாளிகள்.  நீலகிரி பகுதி தங்களுக்கே  உரியது என்று  கூப்பாடு போடுகிறார்கள் கன்னடர்கள்.  இதை பார்த்தும் பார்க்காத அவல நிலைக்கு நாம் ஆளாகி உள்ளோம்.  .
     வீடு விற்பனைக்கு- மார்வாடிகளுக்கு மட்டும் என்று அறிவிப்பு பலகை வைக்கும் அளவுக்கு உரிமைகள் பறிக்க பட்டிருக்கிறோம்.  கன்னடம் படித்த கன்னடர்களுக்கே வேலை என்று கருநாடக அரசு அரசானை பிறப்பித்து உள்ளதுபோல் ஒவ்வொரு மொழியினரும் விழிப்பு அடைந்துள்ள இவ்வேளையில் தமிழ்வழி பயின்ற தமிழர்களுக்கே வேலை என்று தமிழ்நாட்டில் ஆணை பிரப்பிக்க  இல்லாத நிலை இங்கு மட்டுமே.
     இந்த வரலாறும், நிலையும் தெரியாத இன்றைய இளைய தலைமுறையோ மொழி கொலை செய்யும் திரைப்பட பாடல்களை பாடிக்கொண்டு பொறுப்பு அற்றவர்களின் பின்னால்  போய்கொண்டிருக்கிறது.  பொறுபேற்க வேண்டியவர்களோ தன்னல கனவுகளில் தம்மை இழந்தனர்.  தமிழுக்கும், தமிழனுக்கும் தமிழ்நாடுக்கும் ஆற்ற வேண்டிய தம் கடமைகளையும் அறவே மறந்தனர். விழிப்பை துறந்தனர். தமிழகத்தின் இந்த தூக்கத்தை கலைக்க வேண்டும் தமிழை ஆட்சிமொழி, கல்விமொழி, தொடர்பு மொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழி, இசைமொழி என அணைத்து துறைகளிலும் அரியணை ஏற்ற  வேண்டும்.  வருங்கால தமிழ் இனத்தினரின்  உரிமைகளை பாதுகாத்து வைக்க வேண்டும்.
    

Saturday, October 30, 2010

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?-நீதிபதிகள் கண்டனம்



     மூன்றாம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீடு முறையில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கு நேற்று நீதிபதியின் முன்பு விசாரணைக்கு வந்தது.  இதில் நேற்று நீதிபதிகள் காட்டமான கருத்துக்களை கூறினார்.  "மத்திய அமைச்சர் ராஜாவின் மீது ஊழல் புகார் விசரனைக்குவந்து பலவருடம் ஆஹிவிட்டது ஆனால் அவர் இன்னமும் அமைச்சராகவே நீடிக்கிறார்.  இதுதான் சட்டத்தின் ஆட்சியா?  அவர் இன்னமும் பதவி விலகாததற்கு  காரணம் என்ன?" என்று நீதிபதிகள் சராமாரியாக கேள்விகளை எழுப்பினர்.  
     வீடுகட்டுவதில் நடந்த ஊழல் விவகாரதிர்க்கே பதவி விலக முன்வந்துள்ளார் மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான்.  ஆனால் பல ஆயுரம் கோடி அரசாங்கத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி அதன் மூலம் கொள்ளையடித்த ராஜாவையோ  இன்று தமிழக அரசு  போற்றி பாதுகாத்துவருகிறது.  இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.  இதைதான் நீதிமன்றமும் கருத்துகளாக பதிவுசெய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் ராஜா பதவி விலக வேண்டும் என்பதையே  விரும்புவதாக தெரிகிறது.  எனினும் ஊழலின் பிதாமகன் கலைங்கர்தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததுபோல் நீதிமன்றத்துக்கு தெரியவில்லை போலும்.  
     கலைஞர் இனியாவது நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவேண்டும் இல்லையேல் மக்கள் மன்றம் அவருக்கு சரியான தீர்ப்பை வழங்கிவிடும் என்பது நிதர்சனமான உண்மை. 

எம்ஜிஆருக்கு சென்னையிலும் கோயில்

அமரர் எம்ஜிஆருக்கு சென்னைக்கு அருகிலும் ஒரு கோயில் கட்டப்பட்டு வருகிறது.

புரட்சித் தலைவர் என்றும் பொன்மனச் செம்மல் என்றும் மக்களால் அழைக்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். பாரத ரத்னா விருது பெற்ற பெருமைக்குரியவர். 

இவருக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் ஏற்கெனவே கோயில்கள் எழுப்பப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. அரசியல் கட்சிகளுக்கு அப்பால் பலரும் இந்தக் கோயில்களில் அன்னதானம் செய்து வருகின்றனர். வழிபாடும் தொடர்ந்து நடத்தப்படுகிறது. சில தினங்களுக்கு முன் மதுரைக்கு அருகிலும் சேலம் அருகிலும் எம்ஜிஆருக்கு கோயில்கள் கட்டப்பட்டன. 

இப்போது, சென்னையை அடுத்த திருநின்றவூர் பகுதியிலும் எம்ஜிஆருக்கு கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள நாதமேட்டில் இந்த கோயில் கட்டப்படுகிறது. 

எம்ஜிஆரால் நிறுவப்பட்ட அதிமுக உள்பட, எந்த அரசியல் கட்சியின் உதவி்யுமில்லாமல் இக்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது. 

கவிஞர் காசி முத்துமாணிக்கம் மற்றும் இதயக்கனி பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.விஜயன் ஆகியோர் இக்கோயிலின் பூமி பூஜையை துவக்கி வைத்தனர். 

இந்த பூமி பூஜையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இலவச உதவிகளும் தரப்பட்டது. 

ஏராளமான எம்ஜிஆர் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

MGR










தேங்க்ஸ் thatstamil

கிரிக்கெட் ஒரு சாதாரண விளையாட்டு... சச்சினிடம் பிராட்மேன்





லண்டன், அக்.30: கிரிக்கெட் ஒரு சாதாரண விளையாட்டு, இதில் எப்போதும் நாம் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று பிராட்மேன் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
 கிரிக்கெட்டின் பிதாமகராக கருதப்படுவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த டான் பிராட்மேன். 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,996 ரன்கள் குவித்துள்ளார். இதில் 29 சதங்கள், 50 அரை சதங்கள் அடங்கும். சராசரி 99.94 ரன்கள்.
 பிராட்மேன் கடந்த 2001-ம் ஆண்டு தனது 92-வது வயதில் காலமானார்.
 கிரிக்கெட்டில் தனது நகலாக சச்சினை அடிக்கடி குறிப்பிட்டவர் பிராட்மேன். முன்னதாக, தனது 90-வது பிறந்த நாள் விழாவுக்கு சச்சின் உள்ளிட்ட சில முக்கிய வீரர்களை விருந்தினர்களாக அவர் அழைத்திருந்தார்.
 அந்த சந்திப்பின்போது பிராட்மேனுடனான தனது இனிய தருணங்கள் குறித்தும், தனது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்தும் லண்டனிலிருந்து வெளியாகும் தி கார்டியன் பத்திரிகைக்கு சச்சின் அளித்துள்ள பேட்டியிலிருந்து சில வரிகள்...
 ""அவரிடம் (பிராட்மேன்) நீங்கள் இப்போது கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தால் எவ்வளவு சராசரி வைத்திருப்பீர்கள் என்று நான் கேட்டேன். பிராட்மேன் 70 ரன் சராசரி வைத்திருப்பேன் என்று கூறினார்.
 உடனே, நான் 99 சராசரி வைத்துள்ள நீங்கள் இப்போது 70 ரன்களாக குறைத்துக் கூற காரணம் என்ன என்று வினவினேன். அதற்கு அவர் 90 வயதுள்ள நான் 70 ரன் சராசரி வைத்திருப்பதே பெரிய விஷயம் என்று நகைச்சுவையாக கூறினார்.
 நீ 11 வயது சிறுவனாக இருந்தாலும்சரி அல்லது டான் பிராட்மேனாக இருந்தாலும் சரி ஒன்றை மட்டும் எப்போதும் மறக்கக்கூடாது. கிரிக்கெட் ஒரு சாதாரண விளையாட்டு, இதில் எப்போதும் நாம் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்'' என்று பிராட்மேன் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார் சச்சின்.
 குரோனியேதான் அதிகம் சோதித்தவர்: தென் ஆப்பிரிக்க வீரர் ஹான்ஸி குரோனியேவின் பந்து வீச்சை எதிர்கொண்டதுதான் மிகவும் சவாலாக இருந்தது என்றார் சச்சின். டொனால்டு, ஷான் போலாக் ஆகியோர் என்னை அதிக அளவில் ஆட்டமிழக்கச் செய்துள்ளனர்.
 எனினும், குரோனியே பந்து வீச்சை எவ்வாறு எதிர்கொள்வது என பல சமயங்களில் நான் ஸ்தம்பித்தது உண்டு. என்னை நெருக்கடிக்குள்ளாக்கிய சிறந்த பந்து வீச்சாளர் அவர்.
 மெக்ராத்தின் வேகப்பந்து வீச்சும், ஷேன் வார்னேவின் விஷேசமான சுழற் பந்து வீச்சும் என்றும் மறக்க முடியாதவை. டெஸ்ட் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும், பேட்டிங்கில் அடுத்தக் கட்டத்துக்கு செல்ல முயற்சிக்கிறேன்.
 ஆஸ்திரேலிய அணி பற்றி குறிப்பிடுகையில், "கில்கிறிஸ்ட், ஹேடன், ஜஸ்டின் லாங்கர், வார்னே ஆகியோர் இல்லாதது அந்த அணிக்கு பலவீனம்தான். இப்போதும் சிறந்த வீரர்களை அந்த அணி பெற்றிருந்தாலும், பாண்டிங் ஒருவரே அந்த அணியின் பேட்டிங் பலம். எதிர்வரும் ஆஷஸ் தொடரை வெல்ல இங்கிலாந்துக்கு அதிக வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டார்.
 அடுத்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவிலும் நடக்க உள்ளன. சமீபகாலமாக இந்திய வீரர்கள் சிறப்பான வெற்றிகளை பெற்றுள்ளனர். உலகக் கோப்பை போட்டியிலும் இந்த வெற்றி தொடரவேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு. அது நிச்சயம் நிறைவேறும் என்றார் சச்சின்.
 thanks dinamani

பார்த்து ரசிக்க-4












பார்த்து ரசிக்க-3







பார்த்து ரசிக்க-2












தெண்டுல்கரின் “பேட்” ரூ.42 லட்சத்துக்கு ஏலம்


தனியார் நிறுவனம் சார்பில் இந்தியாவில் உள்ள விளையாட்டு வீரர்கள், பயன்படுத்திய பொருட்கள் மும்பையில் ஏலம் விடப்பட்டன. இந்தியாவின் “டாப் 25” விளையாட்டு வீரர்களின் பொருட்கள் ஏலத்தில் பங்கேற்றன. இதில் தெண்டுல்கரின் பேட் தான் அதிக தொகைக்கு ஏலம் போனது. 2009-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக கிறிஸ்ட் சர்ச் ஒருநாள் போட்டியில் தெண்டுல்கர் 163 ரன்கள் குவித்தார். இதில் பயன்படுத்தப்பட்ட பேட் ரூ.42 லட்சத்துக்கு ஏலம் போனது.
 
அடுத்து அபினவ் பிந்த்ரா, ராகுல் டிராவிட்டின் பொருட்கள் அதிக தொகைக்கு ஏலம் போனது.
 
2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்தார். இதில் அவர் பயன்படுத்திய ரைபிள் ரூ.20 லட்சத்துக்கு ஏலம் போனது.
 
ராகுல் டிராவிட் 2005-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். இந்த டெஸ்டில் அவர் பயன்படுத்திய பேட் ரூ.20 லட்சத்துக்கு ஏலம் போனது.
 
1983-ம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்ட பேட் ரூ.17 1/2லட்சத்துக்கும், அனில் கும்ப்ளே டெஸ்ட்டில் 10 விக்கெட் கைப்பற்றியபோது பயன்படுத்தப்பட்ட ஜெர்சி மற்றும் தொப்பி ரூ.11 1/2 லட்சத்துக்கு ஏலம் போனது.
 
தெண்டுல்கர், ஷேவாக், டிராவிட், கும்ப்ளே சாய்னா நேவால், சானியா மிர்சா, அபினவ் பிந்த்ரா, பூட்டியா, மகேஷ் பூபதி, லியாண்டர் பெயஸ், ஆனந்த், பங்கஜ் அத்வானி உள்பட 25 விளையாட்டு வீரர்களின் பொருட்கள் ஏலம் விடப்பட்டது

தெண்டுல்கரின் “பேட்” ரூ.42 லட்சத்துக்கு ஏலம்

 
thanks maalaimalar


காதலனுடன் சுற்றவில்லை -ரீமாசென்


ரீமாசென் பாலா இயக்கும் அவன் இவன் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இவரை சமீபகாலமாக ஒரு மர்ம இளைஞர் பின் தொடர்வதாகவும் இருவரும் ரகசியமாக சந்தித்து பேசுவதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பின. அந்த வாலிபர் ரீமா சென்னின் காதலர் என்றும் கூறப்பட்டது.
 
நேற்று ரீமாசென் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அதில் அந்த வாலிபரும் பங்கேற்றதாக தகவல் வெளியானது.
 
இதுபற்றி ரீமாசென்னிடம் கேட்ட போது, மறுத்தார். நான் காதலனுடன் சுற்றவில்லை. மர்ம வாலிபர் என்னை பின் தொடர்கிறார் என்பதெல்லாம் உண்மைக்கு மாறானவை.
எனது பிறந்த நாள் விழாவிலும் அப்படிப்பட்ட யாரும் பங்கேற்க வில்லை. எனது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மிகச்சிலர் பங்கேற்றனர். விருந்து சந்தோஷமாக இருந்தது என்றார்.
காதலனுடன்    சுற்றவில்லை
 
 -ரீமாசென்











thanks maalaimalar

பார்த்து ரசிக்க-1











Friday, October 29, 2010

உயிருக்கு ஆபத்து: லலித் மோடி இந்தியா திரும்பமாட்டார- வழக்கறிஞர் மெஹ்மூத் அப்த





மும்பை, அக்.28: ஐ.பி.எல். முன்னாள் ஆணையர் லலித் மோடியின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இந்த சூழ்நிலை மாறும் வரையிலும் அவர் இந்தியா திரும்பமாட்டார் என்றார் லலித் மோடியின் வழக்கறிஞர் மெஹ்மூத் அப்தி.
 இது குறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அப்தி தெரிவித்தது:
 லலித் மோடி இந்தியா திரும்பினால், இங்குள்ள சில விஷமிகளால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால், அவர் இப்போதைக்கு இந்தியா வரமாட்டார். லலித் மோடி தலைமறைவாக உள்ளார் என்ற தகவல் தவறானது. மத்திய அமலாக்கத் துறை மற்றும் அதிகாரிகளை அவர் லண்டனிலிருந்து தொடர்புகொண்டு வருகிறார் என்றார் அப்தி.
 லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வது தொடர்பாக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அக்டோபர் 10-ம் வெளியிட்ட நோட்டீஸில் விளக்கம் கேட்டுள்ளது. விளக்கம் அளிக்க 15 நாள் கெடுவும் விதித்திருந்தது. ஆனால் அந்த நோட்டீஸ் அக்டோபர் 15ம் தேதிதான் கிடைக்கப்பெற்றது.
 எனவே, விளக்கம் அளிப்பதற்கான இறுதி தேதி குறித்து தெளிவான விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் அதற்கு உரிய பதில் இல்லை.
 இதற்கிடையே, என்ன காரணத்துக்காக பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று லலித் மோடி கோரியுள்ளார். மத்திய அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டதன் பேரிலேயே அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய உள்ளதாக நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உரிய காரணத்தை அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்று மேலும் தெரிவித்தார் அப்தி.
 ஐ.பி.எல். போட்டிகளில் அன்னிய செலாவணி விதி மீறல்களில் ஈடுபட்டதாக கூறி, லலித் மோடி மீது மத்திய அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. அவரின் நடவடிக்கைகளை கண்காணிக்க சர்வதேச "ப்ளு நோட்டீஸýம்' பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
thanks dinamani

தொடர்கிறது ஆனந்தின் டிரா

நான்ஜிங், அக்.29: சீனாவின் நான்ஜிங்கில் நடைபெற்று வரும் பியர்ல் ஸ்பிரிங் செஸ் போட்டியின் 9-வது சுற்றிலும் ஆனந்த் டிரா கண்டார்.
 ÷முன்னதாக 7 மற்றும் 8-வது சுற்றுகளையும் ஆனந்த் டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.
 ÷வெள்ளிக்கிழமை நடைபெற்ற 9-வது சுற்று ஆட்டத்தில் அஸர்பெய்ஜன் வீரர் உகர் காஸிமோவை எதிர்கொண்டார் ஆனந்த். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்தப் போட்டியில் காஸிமோவுடன் இரண்டாவது முறையாக ஆனந்த் டிரா கண்டார்.
 ÷மற்றொரு ஆட்டத்தில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்ùஸன், பல்கேரியாவின் வெஸ்லினை தோற்கடித்தார். இதோபோல் பிரான்ஸின் எடியன்னே பக்ரோட்-சீனாவின் வாங் யூ ஆகியோருக்கு இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தது.
 ÷புள்ளிகள் பட்டியலில் நார்வேயின் கார்ல்ùஸன் 6.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆனந்த், பிரான்ஸ் வீரர் எடின்னே பக்ரோட் ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்
thanks dinamani

படங்களை ரசிங்க... பாலாபிஷேகம் வேண்டாம்! - தங்கர் பச்சான்



Thankar Bachan


ரசிகர்கள் திரைப்படங்களை ரசித்து மகிழலாம், ஆனால் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம், என்று இயக்குநர் தங்கர் பச்சான் கூறினார்.

திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசுகையில், "இன்று தமிழ்நாட்டில் தமிழ் பற்று கொண்டு ஆவேசமாக பேசினால் துரோகிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். தேர்தலை முன் வைத்து தமிழர்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்குகிறார்கள். இதனால் அண்ணன்- தம்பி உறவுகூட பிரிக்கப்படுகிறது.

போராட்ட உணர்வை இழந்ததால் கச்சத்தீவை இழந்தோம். சேது சமுத்திர திட்டத்தை ஒருமித்த குரலாக நம்மால் நிறைவேற்ற முடிய வில்லை. காவிரி பிரச்சினையில் கர்நாடகாவை போல் தமிழக அரசியல் தலைவர்களும் ஒற்றுமையாக பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

சினிமா கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது ஏற்புடையதல்ல. ரசிகர்கள் சினிமாவை ரசிக்கட்டும். ஆனால் பாலாபிஷேகமெல்லாம் வேண்டாம்.

காவிரிப் பிரச்சினை தீர, கருணாநிதி, ஜெயலலிதா, விஜய்காந்த் போன்ற தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசி, பிரதமரைச் சந்தித்து பிரச்சினையை வலியுறுத்த வேண்டும். இது ஒன்றுதான் விவசாயிகளின் பிரச்சினைக்கு சரியான தீர்வு", என்றார்.

அப்போது, ஒரு நிருபர், நதிநீர் இணைப்புக்கு ரூ 1 கோடி தருவதாக ரஜினிகாந்த் கூறினாரே, அது என்ன ஆயிற்று? என்றார்.

உடனே தங்கர் பச்சான், "எதுவும் நடக்கப் போவதில்லை என்பதால் அவர் அமைதியாகிவிட்டாரோ என்னவோ..", என்றார்.
thanks oneindia.com

எந்திரன் கதை-உரிமை கோரி மேலும் ஒரு தமிழ் எழுத்தாளர் போலீஸில் புகார்


Arnika Nassar










எந்திரன் படத்தின் கதை தன்னுடைய கதை என்று கூறி சமீபத்தில் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல எழுத்தாளர் போலீஸ் ஆணையரை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் தான் எழுதியை கதையை எடுத்து அப்படியே திரைப்படமாக்கியுள்ளதாக எந்திரன் பட இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் கலாநிதிமாறன் மீது ஆரூர் தமிழ்நாடன் என்கிற அமுதா தமிழ்நாடன் போலீஸ் ஆணையர் ராஜேந்திரனை சந்தித்துப் புகார் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், மேலும் ஒரு தமிழ் எழுத்தாளர் எந்திரன் படக் கதை தொடர்பாக போலீஸ் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார். அவரது பெயர் ஆர்னிகா நாசர். தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். தினமலர் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் இவரது கதைகள் வெளியாகியுள்ளன. பல தொடர் கதைகளையும் இவர் எழுதியுள்ளார்.

இவர் நேற்று ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அதில் ஆர்னிகா நாசர் கூறியிருப்பதாவது:

நான், கடந்த 25 ஆண்டுகளாக சிறுகதைகள், விஞ்ஞான கதைகள் மற்றும் நாவல்கள் எழுதி வெளியிட்டு வருகிறேன். கடந்த 1995ம் ஆண்டு எழுதிய, ரோபாட் தொழிற்சாலை என்ற நாவல், குமுதம் குழுமத்தின் வெளியீடுகளில் ஒன்றான, மாலைமதி இதழில், ஜூலை 13, 1995 இதழில் வெளியானது.

சமீபத்தில் வெளிவந்த, எந்திரன் படத்தை பார்த்த என் வாசகர்கள் பலர், என் கதையில் இருந்து பெரும்பாலும் காப்பி அடிக்கப்பட்டு, அந்த படம் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். படத்தை நானும் பார்த்தேன்.

என் கதையில் வந்த பல சம்பவங்கள் படத்தில் முக்கியமான காட்சிகளாக படமாக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தேன். காப்புரிமை சட்டப்படி நான் முதல் உரிமையாளர். அப்படி இருக்கும்போது, இயக்குனர் ஷங்கர், இந்த கதையின் முக்கிய பகுதிகளை தன் சொந்த கற்பனையில் உருவான கதை என்று லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் திரித்து கூறி, பலரை ஏமாற்றி, " எந்திரன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

காப்புரிமை சட்டப்படி, முதல் உரிமையாளரான என் அனுமதியில்லாமல், என் கதையை திரைப்படமாக்கி வெளியிட்டதன் மூலம், எனக்கு பல கோடி ரூபாய் சட்டவிரோத நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார். எனவே, என் கதையை திருடியவர்கள் மீது இந்திய காப்புரிமை சட்டப்படி வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் நாசர்.

இந்தப் புகார் தொடர்பாக நாசர் கூறுகையில், எனது ரோபாட் தொழிற்சாலை கதையின் பிரதி, என்னிடம் இல்லாததால், சமீபத்தில், பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டேன். இதை அறிந்த கடலூர், சிப்காட் ஊழியர் துரை என்பவர், பிரதியை எனக்கு வழங்கினார்.

என் கதையை, இயக்குனர் ஷங்கர் படமாக எடுத்துள்ளது குறித்து கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன். அவர், உதவி கமிஷனர் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார். அத்துடன், 50 லட்ச ரூபாய் நஷ்டஈடு கேட்டு, சிவில் வழக்கும் தொடர உள்ளேன் என்று தெரிவித்தார்.

எந்திரன் கதை-ஆர்னிகா நாசர் கூறுவதென்ன?:

தனது ரோபோட் தொழிற்சாலைக் கதையில் உள்ள பல முக்கிய அம்சங்களை இயக்குநர் ஷங்கர் எடுத்தாண்டுள்ளதாக கூறியுள்ளார் ஆர்னிகா நாசர்.

அவர் கூறும் குற்றச்சாட்டுக்கள்

1.ஆர்னிகா நாசரின் கதையில் முக்கோணக் காதல். ஹீரோ, ஹீரோயின் மற்றும் ரோபோட். ஹீரோ ஒரு ரோபோட்டை உருவாக்குகிறான். அந்த ரோபோட், தனது காதலியை காதலிக்க ஆரம்பித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். பின்னர் தனது ரோபோட்டுக்காக காதலியைத் தியாகம் செய்கிறான்.

- எந்திரனிலும் முக்கோணக் காதல் கதை. ஹீரோ உருவாக்கிய ரோபோட், ஹீரோவின் காதலைய வெறித்தனமாக காதலிக்கிறது. காதலியை அடைவதற்காக பல நாச வேலைகளில் கூட ஈடுபடுகிறது. இறுதியில் கோர்ட் உத்தரவின்படி அந்த ரோபோட் டிஸ்மான்ட்டில் செய்யப்பட்டு விடுகிறது.

2. ஆர்னிகா நாசர் கதையில், ரோபோட் இதய மாற்று அறுவைச் சிகிச்சையை செய்வதாக வைத்துள்ளார். ஆனால் எந்திரன் படத்தில் இது லேசாக மாற்றப்பட்டு பிரசவம் பார்ப்பது போல வைத்துள்ளார் ஷங்கர்.

3. வில்லனாக மாறும் ரோபோட் முதலில் இரண்டாகவும், பின்னர் பல நூறு பேராகவும் மாறுவது போல தனது கதையில் வைத்துள்ளார் ஆர்னிகா நாசர். இதுவும் எந்திரனில் அப்படியே வருகிறது.

4. ஆர்னிகா நாசரின் கதையில் வில்லனாக மாறும் ரோபோட்டை உடைத்து சிதறடித்து விடுகிறார்கள். ஆனால் அது மீண்டும் புது உருவம் பெற்று வருகிறது. எந்திரனிலும் இதேபோல உள்ளது.

5. சுயமாகவே சிந்தித்து தன்னைத் தானே வளர்த்துக் கொள்ளும் திறன் படைத்தாக ஆர்னிகா நாசரின் ரோபோட் உள்ளது. அதேபோலவே எந்திரன் ரோபோட்டும் புத்திசாலியாக காட்டப்பட்டுள்ளது.

6. எந்திரன் படத்தில் வரும் ரோபோட், விர்ச்சுவல் ரியாலிட்டி பிளேயரைப் பயன்படுத்துவதாக காட்சிகள் உள்ளன. இதே தொழில்நுட்பத்தை தனது கதையிலும் சொல்லியுள்ளார் நாசர்.

7. நூலகத்தில் உள்ள புத்தகங்களின் 36 லட்சம் பக்கங்களையும் ஒரு மணி நேரத்தில் தனது எலக்ட்ரானிக் மூளைக்குள் கிரகித்துக் கொள்கிறது ஷங்கரின் ரோபோட். அதேபோன்ற காட்சி ஆர்னிகா நாசரின் புத்தகத்திலும் உள்ளது.

8. காவல்துறை, சுகாதாரத் துறையில் ரோபோட்டைப் பயன்படுத்துவது போன்ற காட்சிகள் ஆர்னிகா நாசர் மற்றும் எந்திரன் படத்தில் உள்ளன.

9. ரோபோட்டுகளின் அரசன் போல எந்திரன் படத்தில் வரும் ரோபோட் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆர்னிகாவும் அதேபோல காட்டியுள்ளார்.

10. மனித குலத்தை அடிமையாக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக ஆர்னிகா நாசரின் ரோபோட்டும், எந்திரன் ரோபோட்டும் காட்டப்பட்டுள்ளன.

இந்த ஒற்றுமைகளை வைத்துத்தான் தனது கதையின் பல முக்கிய அம்சங்களை ஷங்கர் எடுத்துக் கையாண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் நாசர்.
thanks thatstamil.com

கதை மாறுகிறது!






அஜித்துக்காக தயார் செய்து வைத்திருந்த "துப்பறியும் ஆனந்த்' கதையில் சில மாற்றங்களை செய்து வருகிறார் கௌதம் வாசுதேவ்மேனன். இக்கதையில் முதலில் அஜித் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அஜித் இப்படத்திலிருந்து திடீரென விலகினார். இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் "மங்காத்தா' என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங்கும் தொடர்ந்து நடந்து வருகிறது. "விண்ணைத் தாண்டி வருவாயா' ஹிந்தி பதிப்பின் வேலைகளில் இருக்கும் கௌதம் வாசுதேவ்மேனன் இந்தக் கதையை சூர்யாவிடம் சொல்லியிருக்கிறார். கதை பிடித்து விடவே அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை ஆரம்பித்து விடலாம் என்றிருக்கிறாராம் சூர்யா. அவருக்கு ஏற்ப திரைக்கதை மாற்றங்களும் கதையில் நடக்க இருக்கிறது. ஜனவரியில் படம் தொடங்குமாம்
thanks dinamani.com