Friday, December 31, 2010
தினமணி தலையங்கம் உங்கள் பார்வைக்கு!
முடிந்துபோன 2010-ம் ஆண்டுக்கு இந்திய ஊடகங்கள் வைத்த பொதுப்பெயர் "ஊழல்' ஆண்டு.இந்தியாவில் எந்த ஆண்டில்தான் ஊழல் இல்லாமல் இருந்தது? விடுதலைபெற்ற பின்னர் பெரும்பாலான ஆண்டுகளை ஊழல் ஆண்டு என்று அறிவித்துவிடலாம் என்றாலும், 2010 போன்று
டெஸ்ட் தொடரை வெல்வோம்: லட்சுமண்
""தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. இந்திய அணி தனது திறமைக்கு ஏற்ப விளையாடினால், நிச்சயமாக சாதிக்கலாம்,''என, லட்சுமண் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட
Thursday, December 30, 2010
ஆணவ சிரிப்பு!
யாருடன் கூட்டணி? சில நாள்களில் இறுதி முடிவு: ஜெயலலிதா
Last Updated :

சென்னை, டிச. 30: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றிய இறுதி முடிவு இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்படும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் சென்னை அருகே வானகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் ஜெயலலிதா பேசியதாவது:
போதையில் தவறு செய்த அம்பயர்: தென் ஆப்ரிக்கா அதிரடி புகார்
டர்பன் டெஸ்ட் போட்டியின் போது, அம்பயர் ஸ்டீவ் டேவிஸ், மது அருந்தியிருந்ததாக தென் ஆப்ரிக்க வீரர்கள் புகார் கூறியுள்ளனர். போதையில் தள்ளாடிய இவர் முக்கியமான கட்டத்தில், தங்களுக்கு எதிராக தவறான தீர்ப்பு அளித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.
டர்பனில் இந்தியா, தென் ஆப்ரிக்கா மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில், அபாரமாக ஆடிய இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் அம்பயராக செயல்பட்ட
டர்பனில் இந்தியா, தென் ஆப்ரிக்கா மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில், அபாரமாக ஆடிய இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் அம்பயராக செயல்பட்ட
Wednesday, December 29, 2010
"நந்திதா போல் நான்'
Last Updated :

ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார் மீரா வாசுதேவன். ""பெயரிடப்படாத ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறேன். நல்ல கதை. எனக்கும் நல்ல கேரக்டர். மலையாளத்தில் "கலி' என்ற படத்தில் நடிக்கிறேன். அனில் என்பவர் படத்தை இயக்குகிறார். கலாபவன்மணி, இந்திரஜித் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இதுவும் ஒரு வித்தியாசமான கதை. ஹிந்திப் படத்தின் ஷூட்டிங் 10 நாள்கள் முடிந்து விட்டன. மொத்தம் 30 நாள்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். தமிழில் இப்போது வெளியாகி உள்ள "ஆட்டநாயகன்' படத்தின் என் கேரக்டருக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்துள்ளன. கதை சொல்ல புதிய இயக்குநர்கள் நிறைய பேர் அணுகி இருக்கிறார்கள். ஜனவரி முதல் கதைகள் கேட்கப் போகிறேன். அதன் பின் தமிழ் சினிமாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன். தனி ஹீரோயின் என்பதில் மட்டுமே எனக்கு பிடிவாதம் கிடையாது. நந்திதாதாஸ் போன்று பெயரெடுக்க வேண்டும். எந்த கேரக்டருக்கும் தயார்'' என்றார் மீரா வாசுதேவன்.
இங்கிலாந்துக்கு இன்னிங்ஸ் வெற்றி* ஆஷஸ் கோப்பையை தக்கவைத்தது* ஆஸி., மீண்டும் பரிதாபம்
மெல்போர்ன் டெஸ்டில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. முதல் 3 போட்டிகளின் முடிவில்
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. முதல் 3 போட்டிகளின் முடிவில்
விஜய்யின் காவலனுக்கு வெறும் 70தியேட்டர்கள்
பொங்கல் அன்று விஜய்யின் "காவலன்" படம் ரிலீஸாக உள்ள நிலையில், படத்தை திரையிட வெறும் 70 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளனவாம். அதுவும் சுமாரான தியேட்டர்கள் தானாம்.
விஜய்-அசின் நடித்து, டைரக்டர் சித்திக்கின் இயக்த்தில் உருவாகியுள்ள "காவலன்" படத்திற்கு ஆரம்பம் முதலே அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்து கொண்டு இருக்கின்றன. முதலில் இம்மாதம் டிச., 17ம் தேதி இப்படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுருந்தனர். ஆனால் தியேட்டர் கிடைக்கவில்லை. இதனையடுத்து பொங்கலுக்கு இப்படத்தை திரையிட உள்ளனர். ஆனால் இப்போதும் தியேட்டர் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தியேட்டர் அதிபர்கள் உடனான பிரச்சனை தானாம்.
விஜய்யின் சமீபத்திய படங்கள் சரியாக ஓடாததால் தியேட்டர் அதிபர்கள் நஷ்ட ஈடு கேட்டு போராடி வருகின்றனர். ஆனால் நஷ்டத்திற்கு நடிகர் பொறுப்பேற்க முடியாது என்று ஏற்கனவே விஜய் கூறிவிட்டார். இதனையடுத்து விஜய் படத்தை இனிமேல் திரையிட மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.
இதனிடையே இப்படத்தை வாங்கியுள்ள சக்தி சிதம்பரம் தமிழகம் முழுவதும் 400தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளார். ஆனால் 70தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளதாம். அதுவும் சுமாரான தியேட்டர் தான் என்று கூறப்படுகிறது. இதனால் காவலன் படத்திற்கு தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. அதேசமயம் சிறுத்தை, இளைஞன் உள்ளிட்ட படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைத்துள்ளது.
விஜய்-அசின் நடித்து, டைரக்டர் சித்திக்கின் இயக்த்தில் உருவாகியுள்ள "காவலன்" படத்திற்கு ஆரம்பம் முதலே அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்து கொண்டு இருக்கின்றன. முதலில் இம்மாதம் டிச., 17ம் தேதி இப்படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுருந்தனர். ஆனால் தியேட்டர் கிடைக்கவில்லை. இதனையடுத்து பொங்கலுக்கு இப்படத்தை திரையிட உள்ளனர். ஆனால் இப்போதும் தியேட்டர் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தியேட்டர் அதிபர்கள் உடனான பிரச்சனை தானாம்.
விஜய்யின் சமீபத்திய படங்கள் சரியாக ஓடாததால் தியேட்டர் அதிபர்கள் நஷ்ட ஈடு கேட்டு போராடி வருகின்றனர். ஆனால் நஷ்டத்திற்கு நடிகர் பொறுப்பேற்க முடியாது என்று ஏற்கனவே விஜய் கூறிவிட்டார். இதனையடுத்து விஜய் படத்தை இனிமேல் திரையிட மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.
இதனிடையே இப்படத்தை வாங்கியுள்ள சக்தி சிதம்பரம் தமிழகம் முழுவதும் 400தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளார். ஆனால் 70தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளதாம். அதுவும் சுமாரான தியேட்டர் தான் என்று கூறப்படுகிறது. இதனால் காவலன் படத்திற்கு தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. அதேசமயம் சிறுத்தை, இளைஞன் உள்ளிட்ட படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைத்துள்ளது.
மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்: இளங்கோவன் பதிலடி
மூப்பனார் மகன் என்பதால் மட்டும் வாசனுக்கு கட்சியிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்கு வரவில்லை. வாசனுக்கு எம்.பி., பதவி தர வேண்டுமென்று கூறிய போது அதை மறுத்தவர் மூப்பனார். இன்றோ தன் மகனை முதல்வராக்க துடிக்கும் தலைவரும் நம் நாட்டில் உள்ளார். கட்சியில் உள்ள வயதானவர்களை வாசன் சமாளிப்பது தான் எனக்கு அவரிடம் பிடித்த காரியம். ஏனெனில், எங்கள் கட்சியில் உள்ள பெரியவர்கள் ஒரு மாதிரியானவர்கள். அவர்களை நிச்சயம் என்னால் அரவணைத்து செல்ல முடியாது. நாட்டின் பெரிய தலைவர்கள் பலர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். வீரபாண்டி ஆறுமுகத்திற்கு, அவர் சார்ந்திருக்கும் கட்சியில் சரிவு ஏற்பட்டு வருகிறது. அதனால் தான் என் தந்தையை கொச்சைப்படுத்தி பேசியும், எனக்கு கொலை மிரட்டல் விடுத்தும் கட்சியின் தலைமையை திருப்திபடுத்த விரும்புகிறார். அவரின் மிரட்டலைக் கண்டு, நான் ஒரு போதும் அஞ்ச மாட்டேன். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.
இந்தியா அசத்தல் வெற்றி!
டர்பன் டெஸ்டில் ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட இந்திய பவுலர்கள் சாதித்துக் காட்டினர். இவர்களது வேகத்தில் அதிர்ந்து போன தென் ஆப்ரிக்க அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதையடுத்து டர்பன் மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா, டெஸ்ட் தொடரில் 1-1 என சமநிலையை எட்டியது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது டெஸ்ட் டர்பனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 205, தென் ஆப்ரிக்கா 131 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில்
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது டெஸ்ட் டர்பனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 205, தென் ஆப்ரிக்கா 131 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில்
Sunday, December 19, 2010
ஸ்பெக்ட்ரம் விவகாரம்: மொரீஷியஸ் போன்ற நாடுகளில் நடந்தது என்ன?
பல கோடி ரூபாய் ஊழல் நடந்த, "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம், இரண்டாம் கட்டமாக அமலாக்கத் துறையினர் சில விசாரணைகளைத் துவக்கியுள்ளனர். இதில், மொரீஷியஸ் போன்ற நாடுகளில் நடந்த பணப்பரிமாற்றங்களை
சச்சின் சூப்பர் சாதனை
டெஸ்ட் அரங்கில் 50 சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற மகத்தான சாதனை படைத்தார் இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இந்த மைல்கல்லை தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான செஞ்சுரியன் டெஸ்டில் எட்டினார். கிரிக்கெட்டில் சாதனை மன்னனாக ஜொலிக்கிறார் சச்சின். இவர் களமிறங்கினாலே ஏதாவது ஒரு சாதனை நிகழ்ந்து விடும். கடந்த 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன், அதிகம் சதம் அடித்து சாதித்துள்ளார். இவரது சாதனை பயணம் நேற்றும் தொடர்ந்தது. செஞ்சுரியனில் நடந்த முதல் டெஸ்டில் மிக கவனமாக ஆடிய இவர், டெஸ்ட் போட்டிகளில் தனது 50வது சதத்தை எட்டினார். இரண்டாம் இன்னிங்சில் கேப்டன் தோனியுடன் சேர்ந்து துணிச்சலாக போராடிய இவர் 107 ரன்களுடன் அவுட்டாகாமல் உள்ளார்.
தொடரும் சாதனை பயணம்...: கிரிக்கெட் உலகில் சச்சினின் சாதனை பயணம் தொய்வின்றி தொடர்கிறது. நேற்று டெஸ்டில்
தொடரும் சாதனை பயணம்...: கிரிக்கெட் உலகில் சச்சினின் சாதனை பயணம் தொய்வின்றி தொடர்கிறது. நேற்று டெஸ்டில்
எதிர்க்கட்சிகளின் வேகம் குறைந்தது ஏன்?கருணாநிதி
"ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைத்தே தீர வேண்டும் என, பார்லிமென்டை நடத்த விடாமல் செய்த பெரிய எதிர்க்கட்சிகள் எல்லாம் இப்போது அதைப் பற்றி வேகமாகக் குரல் கொடுக்காதது ஏன்?'
Friday, December 17, 2010
இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு
இதுவரை வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரக செய்திகளை வெளியிட்ட "விக்கிலீக்ஸ்' ரகசிய ஆவணங்கள், இப்போது சிறிது சிறிதாக, இந்தியா பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவின் சகிப்பு தன்மை,
விக்கிலீக்ஸ் ஜூலியன் ஆவேசம்
பிரிட்டன் ஐகோர்ட் தீர்ப்பின் மூலம் ஜாமீனில் வெளியே வந்துள்ள "விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், "உண்மைகளை வெளிக்கொண்டு வர தொடர்ந்து போராடுவேன். சுவீடனுக்கு என்னைக் கொண்டு போகும் முயற்சி,
தி.மு.க., கூட்டணி குறித்து காங்கிரஸ் ஆலோசனை
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு, டில்லியில் இன்று துவங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், முக்கியமான அரசியல் தீர்மானங்கள் பல நிறைவேற்றப்படவுள்ளன. ஸ்பெக்ட்ரம் பிரச்னையால் ஒரு நாள் கூட பார்லிமென்டின் குளிர் காலக் கூட்டத் தொடர் நடைபெறாமல் முடிவடைந்த சூழ்நிலையில்,
Thursday, December 16, 2010
பிரதமர் வீட்டிற்கு நடந்து சென்ற சோனியா
இந்தியா வந்துள்ள சீனப் பிரதமர் வென் ஜியாபோவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால், காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் வீட்டிற்கு நடந்து சென்றார்.
சீனப் பிரதமர் வென் ஜியாபோ மூன்று நாள் அரசு முறை பயணமாக, நேற்று முன்தினம் இந்தியா வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திபெத்தியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனப் பிரதமருக்கு, பிரதமர் மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் தனது வீட்டில் நேற்று முன்தினம் இரவு விருந்து அளித்தார். இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா, சபாநாயகர் மீரா குமார், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உள்ளிட்ட சிலர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
வென் ஜியாபோவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருந்ததால், பிரதமர் வீடு அமைந்துள்ள பகுதியில், வாகனங்கள் செல்ல முடியாதபடி, சாலைகள் அனைத்தும் மூடி சீல் வைக்கப்பட்டன. இதனால், சோனியா காரிலிருந்து இறங்கி, பிரதமர் வீட்டிற்கு அரை கி.மீ., தொலைவு நடந்து சென்றார்.
சீனப் பிரதமர் வென் ஜியாபோ மூன்று நாள் அரசு முறை பயணமாக, நேற்று முன்தினம் இந்தியா வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திபெத்தியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனப் பிரதமருக்கு, பிரதமர் மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் தனது வீட்டில் நேற்று முன்தினம் இரவு விருந்து அளித்தார். இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா, சபாநாயகர் மீரா குமார், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உள்ளிட்ட சிலர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
வென் ஜியாபோவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருந்ததால், பிரதமர் வீடு அமைந்துள்ள பகுதியில், வாகனங்கள் செல்ல முடியாதபடி, சாலைகள் அனைத்தும் மூடி சீல் வைக்கப்பட்டன. இதனால், சோனியா காரிலிருந்து இறங்கி, பிரதமர் வீட்டிற்கு அரை கி.மீ., தொலைவு நடந்து சென்றார்.
தினமணி தலையங்கம் உங்கள் பார்வைக்கு
அன்னிய ஏகாதிபத்திய ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கி 63 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையிலும்கூட, நாம் இன்னும் அடிமைத்தனச் சிந்தனையிலிருந்து விடுபடவில்லை என்று நினைக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக, நமது ஆட்சியாளர்கள் இப்போதும் இந்தியாவின் பலத்தை உணரவில்லை என்பது மட்டுமல்ல, இந்த மாபெரும் தேசத்தின் சுயமரியாதையையும், தன்மானத்தையும் காப்பாற்ற வேண்டும் என்கிற கடமை உணர்வுகூட இல்லாமல் இருக்கிறார்களே என்பது வேதனையளிக்கிறது.அது அமெரிக்காவானாலும் சரி, சீனாவானாலும் சரி, இந்தியாவை அவமானப்படுத்துவதில் துன்பியல் இன்பம் காண்பதை வாடிக்கையாக்கி விட்டிருக்கின்றன. சீனா நம்மை அவமானப்படுத்துவது புரிகிறது. ஆனால் அமெரிக்காவும் அப்படி இருக்கிறது என்கிறபோது, நமது வெளியுறவுக் கொள்கை தவறாக இருக்கிறதா இல்லை நமது ஆட்சியாளர்கள் முதுகெலும்போடு செயல்படாமல் இருக்கிறார்களா என்பது புரியவில்லை. அமெரிக்க அதிபர்களை நமது நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த வருந்தி அழைத்து வருவதால், இந்தியா தனது சுற்று தேவதை நாடுகளில் ஒன்று என அமெரிக்கா கருதிவிட்டதா என்கிற கேள்வியும் எழுகிறது. எந்தவொரு நாட்டிலும் சாதாரணப் பயணிகளைப்போல, அயல்நாட்டுத் தூதரக அதிகாரிகள் நடத்தப்படுவதில்லை. விமானநிலையங்களில் அவர்களுக்குத் தனியான வரிசை ஏற்படுத்தி பாதுகாப்புச் சோதனை செய்யப்படுவதுடன், அவர்கள் பணிபுரியும் நாடுகளில் என்ன பொருளை வாங்கினாலும் அதற்கு எந்தவிதமான வரியும் விதிப்பதில்லை என்பது சர்வதேச வழக்கு.ஷாரூக்கான், கமல்ஹாசன் என்று திரைப்பட நடிகர்கள் அமெரிக்காவில் சோதனையிடப்பட்டதை நாம் பெரிதுபடுத்தவில்லை. இவர்களுக்குத் தனி மரியாதை தரப்பட வேண்டும் என்று நாம் கோரவும் இல்லை. ஆனால் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமை பாதுகாப்புச் சோதனை என்கிற பெயரில் அவமானப்படுத்தினால் அது ஒவ்வோர் இந்தியக் குடிமகனையும் அவமானப்படுத்துவது போன்றதல்லவா? அதை எப்படி இந்திய அரசு சகித்தது? ஜிம்மி கார்ட்டரும், பில் கிளிண்டனும், ஜார்ஜ் புஷ்ஷும் இந்தியா வந்தால், அவர்களை அதேபோல சோதனைக்கு உள்படுத்தினால் அமெரிக்கா மௌனம் காக்குமா?போகட்டும், அது நடந்து முடிந்த கதை. அதிலிருந்து நாம் பாடம் படித்திருக்க வேண்டாமா? அமெரிக்காவிடம் கறாராகப் பேசி, இனிமேல் இதுபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருக்க வேண்டாமா?சமீபத்தில் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் இருவருக்கு பாதுகாப்புச் சோதனையின்போது அமெரிக்காவில் ஏற்பட்ட அவமானம்தான், நமது அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கத் தூண்டுகிறது. ஹர்தீப்சிங் புரி என்பவர் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பவர். சீக்கியரான ஹர்தீப்சிங்கின் தலைப்பாகையை அவிழ்த்துக் காட்டச் சொல்லி இருக்கிறார்கள். இது நடந்தது அமெரிக்காவிலுள்ள ஹெளஸ்டன் விமான நிலையத்தில். தான் ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியப் பிரதிநிதி என்றும், தூதரக அந்தஸ்துப் பெற்றவர் என்றும் எடுத்துக்கூறியும் அந்தப் பாதுகாப்புச் சோதனையிடும் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.இத்தனைக்கும் சுற்றுலாப் பயணிகளாகச் செல்லும் சீக்கியர்களைத் தலைப்பாகையை அவிழ்த்துக் காட்டச் சொல்வதில்லை. இந்தியத் தூதரக அதிகாரி என்பதால் வேண்டுமென்றே அந்த அதிகாரிகள் ஹர்தீப்சிங் புரியைக் கேவலப்படுத்தினார்கள் என்பது தெளிவு.கடந்த வாரம், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் இதேபோல, மிஸ்ஸிஸிப்பி விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். இத்தனைக்கும் இந்தியத் தூதர் என்ற முறையில் அமெரிக்க அதிபரின் ஒப்புதலுடன் செயல்படும் உயர் அதிகாரி மீரா சங்கர். அவரது குற்றம் சேலை கட்டி இருந்தது. உங்கள் சேலையை அவிழ்த்துக் காட்டுங்கள் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரை ஒரு சாதாரண பாதுகாப்பு அதிகாரி கேட்பது என்றால், இந்தியாவை எந்த அளவுக்கு அவர்கள் கேவலப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.சில மாதங்களுக்கு முன்னால் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் குரேஷி இருதரப்புப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சென்றார். வழியில் இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து அமெரிக்காவுக்குப் பறப்பதாக ஏற்பாடு. அமெரிக்க விமானத்தில் ஏறுவதற்கு முன்னால் பாதுகாப்புச் சோதனைக்கு அவர் உள்படுத்தப்பட வேண்டும். ஏதாவது அசம்பாவிதமோ, அவமரியாதையோ அவருக்கு ஏற்பட்டு விடலாகாது என்பதற்காக, அமெரிக்க வெளிவிவகாரத் துறை லண்டனில் இருக்கும் அமெரிக்கத் தூதரை அவருடன் கூடவே இருந்து விமானத்தில் ஏற்றி அமர்த்தும்படி உத்தரவிட்டது.நமக்குத் தெரிந்து இதுவரை எந்த வளைகுடா நாட்டு ஷேக்குகளின் மனைவியரையும் அவர்களது பர்தாவை அவிழ்த்து அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டதாகவோ, சோதனையிட நினைத்ததாகவோகூட நினைவில்லை. அப்படி ஏதாவது அதிகாரி முனைந்திருந்தால் அடுத்த நொடியே, பென்டகனும், வெள்ளை மாளிகையும், காப்பிடல் ஹில்சும் அலறித் துடித்திருக்கும். வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வராமல் போனால் அமெரிக்காவில் உள்நாட்டுக் குழப்பமே ஏற்படும் என்பது அவர்களுக்குத் தெரியும்.எந்தவொரு நாடும் தனது பாதுகாப்பு விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். நமது இந்தியாவைப்போல, தலைவர் வீட்டு நாய்க்குட்டி என்பதற்காக அதற்கும் சலாம் போடும் பழக்கம் அமெரிக்கா போன்ற நாடுகளில் இல்லை என்பதும் உண்மை. அமெரிக்கா பாதுகாப்பு விஷயத்தில் நம்மைப்போல இல்லாமல் விழிப்புடன் இருப்பதை நாம் பாராட்டுவதுடன் பின்பற்றவும் வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.பாதுகாப்புச் சோதனைக்குத் தூதரக ஊழியர் உள்படுத்தப்படுவதில்கூடத் தவறில்லை. ஆனால், சேலையைக் கழற்றித்தான் இந்தியத் தூதரைச் சோதனையிடுவேன் என்பது ஆணவத்தின் உச்சகட்டம் அல்லவா? நாம் பிறந்த புண்ணிய பூமிக்கு இழைக்கப்படும் அவமானம் அல்லவா அது?நிமிர்ந்து நிற்கவும், எதிர்த்துக் குரலெழுப்பி அமெரிக்காவை எச்சரிக்கவும் நாம் ஏன் தயங்குகிறோம்? ஐ.நா. சபையின் நிரந்தர உறுப்பினர் பதவிக்காக நமது தேசத்தின் தன்மானத்தையே விலைபேசிவிட்டோமா, என்ன?
இலவச நிலம் கொடுத்து தன் நிலத்தின் மதிப்பை உயர்த்திக்கொண்ட அறக்கட்டளை
பெரம்பலூரில் அரசு கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாக நிலம் கொடுப்பது போல் கொடுத்து, தங்களால் வளைக்கப்பட்ட நிலத்தின் மதிப்பை உயர்த்திக் கொண்டதாக, ராஜாவின் குடும்பத்தினரால் நடத்தப்படும் அறக்கட்டளை மீது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
பெரம்பலூரைச் சேர்ந்த
பெரம்பலூரைச் சேர்ந்த
ராஜாவின் நண்பர் சாதிக் யார்? ரூ.500 கோடிக்கு மேல் சொத்து குவித்த ரகசியம்
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், சைக்கிளில் சென்று துணி வியாபாரம் செய்து வந்த சாதிக், குறுகிய காலத்தில் 500 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்க்க அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., அரசியல் பிரமுகர்களின் அறிமுகமே காரணம் என்று தெரியவந்தது.
இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் விவகாரமாக கருதப்படும்,
இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் விவகாரமாக கருதப்படும்,
தினமணி தலையங்கம் உங்கள் பார்வைக்கு

நீதிமன்றங்களின், குறிப்பாகக் கூறவேண்டுமானால் நீதித்துறையுடன் தொடர்புடையவர்களின் கருத்துகள் விவாதப் பொருளாகி வருவது வேதனைக்குரிய ஒன்று. நீதிபதிகளே இப்படியா, நீதித்துறையே இப்படித்தானா என்று சராசரி இந்தியன் நம்பிக்கை இழந்துவிட்டால் அதன் விளைவுகள் இந்திய சுதந்திரத்தின், மக்களாட்சி அமைப்பின் அடித்தளத்தையே ஆட்டம்காண வைத்துவிடுமே என்பதுதான் நமது அச்சத்துக்குக் காரணம்.கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு ஒன்றின் விசாரணையின்போது நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவும், நீதிபதி கியான் சுதா மிஸ்ராவும் தெரிவித்த கருத்து நீதித்துறையையே ஒரு வினாடி அதிர வைத்தது.""அலகாபாத் உயர் நீதிமன்றத்தைப் பற்றிப் பல புகார்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. அந்த நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகள் சிலரின் வாரிசுகளும் உறவினர்களும் பட்டம் பெற்று அந்த நீதிமன்றங்களில் பணிபுரியத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே சொகுசுக் கார்களும், பிரம்மாண்டமான பங்களாக்களும், வங்கிகளில் பெரும் சேமிப்புகளுமாகக் கோடீஸ்வரர்களாய் வளையவரத் தொடங்கி விடுகிறார்கள். எல்லோரும் அப்படி என்று நாங்கள் குற்றம்சாட்டவில்லை. சிலர் தங்கள்மீது களங்கத்தின் நிழல்கூடப் படிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஆனால், பலர் தங்களது உறவு முறைகளைப் பயன்படுத்திக் கொண்டு செல்வத்தில் கொழிக்கிறார்கள்'' என்பதுதான் அந்த நீதிபதிகள் தெரிவித்த அதிர வைக்கும் கருத்து.லக்னௌ மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த நிலைமையை மாற்றத் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் நீதிபதிகளை இடம் மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றத்துக்குப் பரிந்துரை செய்யலாம் என்றும்கூட அந்த நீதிபதிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். உத்தரப் பிரதேச நீதித்துறை கொதித்து எழுந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்து தங்களது உயர் நீதிமன்றத்துக்கு நிரந்தரக் களங்கம் கற்பித்துவிடும் என்றும் அதை நீதிமன்றக் குறிப்பிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது.இப்படி ஒரு கருத்தைத் தெரிவிக்க நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு உரிமையும் தகுதியும் உண்டு. நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் தாத்தா டாக்டர் கே.என். கட்ஜு, மோதிலால் நேருவுக்கு நிகரான வழக்குரைஞர் மட்டுமல்ல, ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியும்கூட. நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் தந்தை எஸ்.என். கட்ஜு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர். மாமா பி.என். கட்ஜு அதே அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவே இருந்தவர். 1991-ல் மார்க்கண்டேய கட்ஜு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்கும்வரை, தனது தந்தையோ, மாமாவோ நீதிபதிகளாக அமர்ந்திருக்கும் நீதிமன்றங்களில் வழக்காடுவதில்லை என்பதில் கண்டிப்பாக இருந்தவர்.அப்படி ஒரு பின்னணியுடைய நீதிபதிக்கு, சில நீதிபதிகளும் அவர்களது வாரிசுகளும் நீதித்துறையைக் கேவலப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைச் சகித்துக் கொள்ள முடியாதுதான். ஆனால், இப்படி ஒரு கருத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் தெரிவிக்கப்பட்ட பிறகும், உண்மை வெளிக்கொணரப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கப்பட்டால்தானே மக்களுக்கு நீதித்துறைமீதும், ஆட்சிமுறை மீதும் நம்பிக்கை தொடர முடியும்?எல்லா உயர் நீதிமன்றங்களிலும், கீழமை நீதிமன்றங்களிலும் இதேபோன்ற நிலைமைதான் தொடர்கிறதா? அப்படியானால், அதைத் தீர விசாரித்து நீதித்துறையின் கௌரவத்தையும், சாமானியனுக்குக் கிடைக்க வேண்டிய நீதியையும் நிலைநாட்ட வேண்டாமா? பணம் கொடுத்துத் தீர்ப்பை வாங்குவது என்று வந்துவிட்டால் நீதித்துறையும் ஒரு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அல்லது தலைமைச் செயலகம்போல ஆகிவிடுமே, அதை நாம் அனுமதிக்கலாமா?சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரைச் சந்தித்து மத்திய அமைச்சர் பேசுகிறார் என்று தொலைபேசியைக் கொடுக்க வழக்குரைஞர் துணிந்தது எதனால், எதற்காக என்பதெல்லாம் இப்போது இரண்டாம் பட்சமாகிவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியே உண்மையை மறைக்கப் பார்த்திருக்கிறாரோ என்கிற ஐயப்பாடல்லவா மேலோங்கி இருக்கிறது.கடைசிவரை தன்னிடம் யார் தொடர்புகொண்டு தனது நண்பர்களுக்காக சிபாரிசு செய்தது என்பதை நீதிபதி ரகுபதி தெரிவிக்கவே இல்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபோது, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்பட்டவர் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாகஇருக்கும் ஹெச்.எல். கோகலே, அமைச்சர் ஆ. ராசாவின் பெயரை நீதிபதி ரகுபதி குறிப்பிட்டிருந்ததை உறுதிப்படுத்தி, அந்தக் கடிதத்தை அன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை இருப்பதாகக் கூறியிருப்பது அதிர்ச்சி அலைகளை எழுப்பாமல் என்ன செய்யும்?உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவும் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருந்தார், உண்மையை மறைத்தார் என்றால், அவர் வகித்த பதவிக்கு மிகப் பெரிய களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இந்தப் பிரச்னையில் எது உண்மை? உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியே உண்மையை உறைபோட்டு மூடப் பார்த்தாரா என்பது வெளிப்படுத்தப்பட்டே தீரவேண்டும்.உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகளில் பலர் ஊழல் பேர்வழிகள் என்று வெளிப்படையாகக் குற்றம்சாட்டிய மூத்த வழக்குரைஞர்கள் பிரசாந்த் பூஷணையும் அவரது தந்தை சாந்திபூஷணையும் நீதிமன்ற அவமதிப்புக்காக தண்டிக்கக்கூட முடியாத நிலையில் உச்ச நீதிமன்றம் தத்தளிக்கும் நிலைமை அதைவிடக் கொடுமை. இந்த நிலைமையும் தொடரக்கூடாது.நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். கண்ணியமும் காப்பாற்றப்பட வேண்டும். எது நிஜம்? என்று கண்டறியத்தான் நீதித்துறை. அதனால், நீதித்துறை சுய பரிசோதனைக்குத் தயாராகியே தீரவேண்டும்!
அசத்துமா இந்தியா: முதல் டெஸ்ட் இன்று துவக்கம்
இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று துவங்குகிறது. இதில், தோனி தலைமையிலான இந்திய அணி சாதித்துக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், ஒரு "டுவென்டி-20' மற்றும் 5 ஒருநாள் போட்டிகள்
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், ஒரு "டுவென்டி-20' மற்றும் 5 ஒருநாள் போட்டிகள்
தே.மு.தி.க., தலைவர் கூறியதை நாங்கள் வரவேற்கிறோம்
""வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியதை, நாங்கள் வரவேற்கிறோம்; அதே கருத்தை நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம்,'' என, பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.திருவண்ணாமலையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
Monday, December 13, 2010
சாமிகளே சாமிகளே சொல்லும் கதை கேளுங்க!
அப்படியே கொஞ்சம் காலம் யாராவது ஒரு பெரிய சாமியாரிடம் ஒட்டிக்கொண்டு தொழில் கற்று தனியாக ஆசிரமம் ஆரம்பித்து அப்படியே நன்கொடை பெற்று ஏதோ பெரிய அளவில் இல்லாவிட்டாலும் ஒரு சொகுசு பங்களா, ஒரு பொறியியல் கல்லூரி, குடிக்க குடிக்க குறையாம இருக்குற அளவுக்கு மதுபானம், அப்பப்ப தொட்டுக்கொள்ள பொண்ணுங்க ஏதோ இந்தமாதிரி சின்ன ஆசைகள் நிறைவேறினால் போதும். மற்றபடி எந்த பேராசையும் எனக்கு கிடையாது. என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது இந்திய சாமியார்களின் புழப்பு.
எத்தனை போலி சாமியார்கள் வந்தாலும் நாம் திருந்தபோவதில்லை. எது நடக்கிறதோ இல்லையோ சாமியார்களை உருவக்குவதர்க்கென்று தனியாக பல்கலை கழகங்கள் ஆரம்பித்துவிடுவார்கள் போல இருக்கிறது. அப்படி ஆரம்பித்தால் அதற்க்கு வேந்தராக நமது மனம் கவர்ந்த நித்தியானந்தாவை போடலாம் என்பது எனது விருப்பம்.
இதனை நான் விளையாட்டுக்காக சொல்லவில்லை அப்படி நாரிபோயிருக்கிறது நமது சுதந்திர இந்தியாவின் அரசியலும் ஆன்மீகமும். ஊழலுக்கு பல்கலை கழகம் ஆரம்பித்தால் அதற்க்கு வேந்தராக நமது ராஜா தம்பியை போடவேண்டுமென்று நீங்கள் கூறுவது எனக்கு புரிகிறது. அப்படியே ஆகட்டும்.
மொத்தத்தில் இத்தியா ஒளிர்கிறது. நான் இந்தியா என்று குறிப்பிட்டது இந்திய மக்களை இல்லை இந்திய அரசியல்வாதிகள் மற்றும் சாமியார்கள் மட்டுமே.
-அன்பு.நெட் .
இந்திய மக்கள் கவலை
"இந்திய மக்களால் அதிகம் பேசப்படும் பிரச்னையாகவும், கவலைப்படும் பிரச்னையாகவும் ஊழல் தான் உருவெடுத்துள்ளது' என, ஆய்வில் தெரியவந்துள்ளது.
பி.பி.சி., வேர்ல்டு சர்வீஸ் நிறுவனத்துக்காக, குளோப்ஸ்கேன் என்ற ஆய்வு நிறுவனம்,
பி.பி.சி., வேர்ல்டு சர்வீஸ் நிறுவனத்துக்காக, குளோப்ஸ்கேன் என்ற ஆய்வு நிறுவனம்,
ஆதரவு
"இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் தன்ராஜ் பிள்ளை பொருத்தமான தேர்வாக இருக்கும்,' என, இந்திய வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஜோஸ் பிராசாவின் பதவிக்காலம் முடிந்தது. இதனால்
இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஜோஸ் பிராசாவின் பதவிக்காலம் முடிந்தது. இதனால்
கூட்டணியை விட்டு வெளியேற வேண்டியது தானே?""நாங்களா வேண்டாமென்று சொல்கிறோம்?"
""நாங்களா வேண்டாமென்று சொல்கிறோம்; கூட்டணியை விட்டு நீங்களே வெளியேற வேண்டியது தானே?'' என, காங்., விவசாய அணி மாநாட்டில், முன்னாள் மத்திய அமைச்சர்
புது வரலாறு படைத்தது பார்லிமென்ட்
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, எம்.பி.,க்கள் மேற்கொண்ட தொடர் அமளியால், புது வரலாறு படைத்தது பார்லிமென்ட். 22 நாட்கள் நடந்த கூட்டத் தொடரில், ஒரு நாள் கூட மன்னிக்கவும்.....
கடந்த சில நாட்களாக சில பிரச்சினையில் இருந்ததால் என்னால் பதிவுகளை போட முடியவில்லை. இன்று முதல் நமது தளம் வழக்கம்போல் செயல்படும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்.
Wednesday, December 8, 2010
சென்னை அணியில் தோனி, ரெய்னா நீடிப்பு

அடுத்த இரண்டு (2011, 2012) ஐ.பி.எல்., தொடர்களுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ரெய்னா, முரளி விஜய் மற்றும் அல்பி மார்கல் ஆகியோர் நீடிக்க உள்ளனர்.
கடந்த 2008 ம் ஆண்டு ஐ.பி.எல்., அமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போது 8 அணிகள் சேர்க்கப்பட்டன. இந்த
உறவை வெட்டினால் தி.மு.க., வுக்கு நஷ்டம் : இளங்கோவன் பேட்டி

:""உறவை வெட்டினால் தி.மு.க., வுக்குத்தான் நஷ்டம். தேர்தலின் போது யாருக்கு நஷ்டம், யாருக்கு லாபம் என தெரிய வரும்,'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.
வேலூரில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ராஜா மீது நடவடிக்கை

""ராஜா மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவரது பேட்டி:
செய்த பாவங்களுக்கு கருணாநிதி பதில் சொல்ல வேண்டும்

""கருணாநிதி தான் செய்த பாவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது,'' என, ஜெயலலிதா காட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:
ராஜா வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு : அதிர்ச்சியில் தி.மு.க.,

மாஜி அமைச்சர் ராஜா வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததால் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்தது.இப்படிப்பட்ட பூதாகர சர்ச்சையில் சிக்கியதால் தொலைதொடர்பு துறை அமைச்சர் கடந்த மாதம் 14ம் தேதி பதவியை இழந்தார் ராஜா. சுப்ரீம்கோர்ட்டின் கண்டிப்பு எனஅடுத்தடுத்து நெருக்கடிகள் ராஜாவுக்கு வலுத்து வந்த நிலையில் இந்த வரிசையில் இன்று ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்த துவங்கினர்.
காலை 7.30 மணிக்கு ரெய்டு தொடங்கியது. டில்லியில் இருக்கும் அவரது அதிகாரப்பூர்வ வீடு மற்றும்
Tuesday, December 7, 2010
யூசுப் விஸ்வரூபம்! இந்தியா வெற்றி!


பெங்களூருவில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இயற்கை மழையில், சிக்சர் மழை பொழிந்த யூசுப் பதான்,
நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது

""நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது,'' என விஜயகாந்த் கூறினார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில், மழையால் பாதித்த மக்களுக்கு அரிசி மற்றும் வேட்டி சேலைகளை வழங்கிய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
Monday, December 6, 2010
தெரிந்துகொள்வோம் 7 (m .g .r -2 )
சத்யபாமாவின் கஷ்டத்தை போக்க, நாராயணன் ஒரு யோசனை தெரிவித்தார். "அக்கா சக்ரபானியும் ராமசந்திரனும் பார்பதற்கு அழகாக இருக்கிறார்கள். நான் வேலை பார்க்கும் நாடக கம்பனியில் சேர்த்து விட்டால், விரைவில் முன்னுக்கு வந்துவிடுவார்கள்" என்றார். அப்போது m .g .r . அவர்ககளுக்கு 7 வயது. அவர் மூன்றாம் வகுப்பும் சக்ரபாணி ஏழாம் வகுப்பும் படித்து கொண்டிருந்தார்கள்.
குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க சத்யபாமா விரும்பினார். ஆனால் குடும்ப சூழ்நிலை அதற்க்கு இடம் தரவில்லை. எனவே வேறு வழியின்றி பிள்ளைகளை நாடகத்தில் சேர்க்க சம்மதித்தார். ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி அப்போது பாண்டிச்சேரியில் முகாமிட்டிருந்தது. அங்கு m .g .r . சக்ரபாணி ஆகியோரை அழைத்து சென்று சேர்த்து விட்டார் நாராயணன். அப்போது இந்த நாடக கம்பனியில் b .u .சின்னப்பா t .s .பாலய்யா ஆகியோர் நடிகர்களாக இருந்தார்கள். முதலில் சிறு வேடங்களில் நடித்த m .g .r . சில ஆண்டுகளுக்கு பின் கதாநாயகனாக உயர்ந்தார்.
இந்த சமயத்தில்தான் தமிழில் பேசும் படங்கள் வரத்தொடங்கின. 1935 ஆம் ஆண்டு m .g .r . வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கியமான வருடம். பிற்காலத்தில் ஜெமினி ஸ்டுடியோவை தொடங்கி சாதனைகள் புரிந்த s .s .வாசன் தமது ஆனந்த விகடன் பத்திரிக்கையில் எழுதிய சதிலீலாவதி என்ற கதையை வேல் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் திரைப்படமாக தயாரித்து. படத்தின் கதாநாயகன் m .k .ராதா. இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க m .g .r . ஒப்பந்தமானார். கலைவாணர் n .s .கிருஷ்ணன், t .s .பாலையா ஆகியோரும் இப்படத்தில் நடித்தனர்.
s .s .வாசன், m .g .r , n .s .கிருஷ்ணன், t .s .பாலையா ஆகிய நால்வருக்கும் இது முதல் படம். அமெரிக்காவில் இருந்து வந்து பிற்காலத்தில் "அம்பிகாபதி" " மீரா" " சகுந்தலை" போன்ற அற்புத படங்களை இயக்கியவரான எல்லிஸ் r .டங்கன் தான் இப்படத்தின் இயக்குனர்.
1936 இல் சதி லீலாவதி வெளியாகியது. படத்தின் முடிவு எப்படி இருக்குமோ என்று அதில் சம்மந்தப்பட்ட அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். படம் பெரும் வெற்றிபெற்று அதில் பங்கு கொண்ட அனைவருக்கும் நல்ல பெயரை தேடித்தந்தது. அப்போது m .g .r அவர்களுக்கு நல்ல பெயரை தேடித்தந்து.
அப்போது m .g .r . அவர்களுக்கு 19 வயது. முதல் படத்தில் நடிததர்க்காக அவருக்கு கிடைத்த சம்பளம் நூறு ரூபாய். முழு நூறு ரூபாய் நோட்டை அப்போதுதான் முதன் முதலாக பார்த்தார். சந்தோசம் தாங்கவில்லை. நூறு ரூபாயை அப்படியே அம்மா கையில் கொண்டு பொய் கொடுத்து ஆசி பெற்றார்.
(தொடரும்....)
வைட்வைன் நிறுவனத்தை தன்வசப்படுத்துகிறது கூகுள்

| சான் பிரான்சிஸ்கோ : கூகுள் நிறுவனம், வைட்வைன் டெக்னாலஜிஸ் நிறவனத்தை விலைக்கு வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், இண்டர்நெட் வீடியோக்களை சுலபமாக கையாளுவதற்கும், குதனை திருட்டுகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, அமெரிக்காவின் சியாட்டிலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வைட்வைன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை தன்வசப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து, கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தங்களுடைய டிஜிட்டல் ரைட்ஸ் மேனேஜ்மெண்ட்டுக்காகவும், இண்டர்நெட் வீடியோக்களை பாதுகாப்பாக கையாளும் பொருட்டு இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வைட்வைன் டெக்னாலஜிஸ் நிறுவனம், இண்டர்நெட் தொடர்புடைய டிவிக்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் மொபைல்பேன்களை வர்த்தகப்படுத்தி வருவதாகவும், இந்த நிறுவனத்தை தன்வசப்படுத்துவதன் மூலம், தங்களது வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல பாதுகாப்பான சேவைகளை தரமுடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
சொந்தங்களுக்காக பதவி வகிப்பவர் கருணாநிதி: விஜயகாந்த்

சொந்தங்களுக்காக பதவி வகிக்கும் கருணாநிதி மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை என விஜயகாந்த் எம்.எல்.ஏ., கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் நேரு நகர், நந்திமங்கலம், குமராட்சி, கீழவன்னியூர், திருநாரையூர் ஆகிய பகுதிகளை தே.மு.தி.க., நிறுவனத் தலைவரும், விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான விஜயகாந்த் நேற்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
25000 நன்றிகள்!
இன்றுவரை நமது வலைத்தளம் தொடங்கி 71 நாட்கள் ஆகின்றது. இன்றுவரை நமது தளத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை இதை பதிவிடும்வரை 25000 . இன்று வரை நமது தளத்திற்கு வருகைபுரிந்த அன்பு வருகையாலர்களுக்கும் இதற்க்கு காரணமாயிருந்த பதிவர் நண்பர்களுக்கும் இதன் மூலம் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
மேலும் இன்று முதல் வருகையாளர்களும் நமது தலத்தில் அவர்களுடைய படைப்புகளை இடம்பெற செய்யும் வகையில் முயற்சியை ஆரம்பித்திருக்கிறேன். இதற்க்கு வருகையாலர்களிடம் இருந்து நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன்.
மேலும் மேலும் நமது தளத்தின் முன்னேற்றத்திற்கு தங்களின் பங்களிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
-அன்பு.நெட்.
தெரிந்துகொள்வோம் 6 (M.G.R-1)
தமிழ் திரை உலகிலும், பின்னர் அரசியலிலும் சகாப்தம் படைத்த m .g .r இன் முழு பெயர் m .g .ராமச்சந்திரன்.
பெற்றோர் பெயர் கோபாலமேனன் - சத்யபாமா. இவர்களது முன்னோர் கொங்கு நாட்டிலிருந்து கேரளாவில் குடியேறிய மன்றாடியார்கள் என்று m .g .r ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அரூர், திருச்சூர், கரூர், எர்ணாகுளம் முதலிய ஊர்களில் கோர்ட்டில் பணியாற்றியவர், கோபாலமேனன். நீதி தவறாதவர். அநீதிக்கு துணைபோக மறுத்தால், வேறு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அதனால் வேதனை அடைந்த கோபாலமேனேன் பதவியை ராஜினாமா செய்தார். மனைவியுடன் இலங்கை சென்றார்.
கோபாலமேனேன் - சத்தியபாமா தம்பதியினர் இலங்கையில் வசித்தபோது, 1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் m .g .r . பிறந்தார்.
கண்டியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹன்தானா என்ற இடத்தில் m .g .r . பிறந்தார். அந்த இடம், தமிழில் "பச்சைக்காடு" என்று அழைக்கப்படுகிறது. m .g .r . பிறந்த வீட்டில் இப்போது ஒரு பாடசாலை நடந்து வருகிறது.
m .g .r க்கு 2 வயதானபோது குடும்பத்துடன் தாயகம் திரும்பினார் கோபாலமேனன். முன்பு செல்வ செழிப்புடன் வாழ்ந்த அவர் குடும்பம் ஒத்தபாலம் என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்து. 1920 ஆம் ஆண்டில், கோபாலமேனன் திடீரென்று மாரடைப்பால் காலமானார். அப்போது m .g .r க்கு மூன்று வயது. கணவரை இழந்த சத்யபாமா, தன் இரண்டு மகன்களையும் வளர்த்து ஆளாக்குவது எப்படி என்று திகைத்தார்.
அவருடைய தம்பி நாராயணும், குடும்ப நண்பர் வேலு நாயரும் அப்போது கும்பகோணத்தில் வசித்து வந்தார்கள். ஆகவே, தன் இரு மகன்களுடன் கும்பகோணத்துக்கு வந்தார் சத்யபாமா. நாராயணன், இளம் வயதிலேயே கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்து குடியேறியவர். கும்பகோணத்தில் தங்கி மதுரை ஒரிஜினல் பாய்ஸ் என்ற நாடக கம்பனியில் பின் பாட்டு பாடி பிழைத்துவந்தார். குழந்தைகளுடன் ஆதரவு தேடி வந்த அக்காவுக்கு அவர் ஒரு வீடு பார்த்து குடுத்தார்.
கும்பகோணம் ஆணையபட்டியில் சக்கரபாணியும், m .g .r -ம் சேர்ந்தனர். m .g .r ஐ விட சக்ரபாணி நான்கு வயது மூத்தவர். எனவே குடும்ப நிலைமையை ஓரளவுக்கு உணர முடிந்தது. பள்ளிக்கு போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சிறு சிறு வேலைகள் செய்து, கொஞ்சம் பணம் சம்பாதித்தார்.
இலங்கையிலிருந்து கொண்டு வந்திருந்த பணமும், நகைகளும் தீரும் வரை வாழ்கை சக்கரம் சிக்கலின்றி சுழன்றது. அதன்பிறகு, தன் குழந்தைகளை வளர்க்க சத்யபாமா மிகவும் சிரமபடவேண்டியிருன்தது. எப்படியும் பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து முன்னுக்கு கொண்டுவர வேண்டும் என்ற உறுதியுடன் சோதனைகள் அனைத்தையும் தாங்கிகொண்டார்.
(தொடரும்....)
நீங்களும் எழுதலாம் வாங்க?
எத்தனை நாட்கள் அடுத்தவர்கள் எழுதுவதையே படிப்பது பார்வையாளர்களே? நீங்களும் எழுதலாம் வாங்க? நமது தலத்தில் உங்களது படைப்புகளும் இடம்பெற உடனே உங்கள் படைப்புகளை எழுதி anbutamilnet@rediffmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
மோடியை கொல்ல லஷ்கர் திட்டம் ?

சமீப காலமாக விக்கிலீக் இணைய தளம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்களது தலைமை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய மற்றும் ஆவணங்கள் மூலம் அனுப்பி தகவல்கள் பகிர்ந்து கொண்ட ஏறக்குறைய 2 லட்சத்திற்கும் அதிகமான டாக்மென்ட்கள் வெளியே லீக் செய்யப்பட்டுள்ளது. விக்கி லீக் வெளியிட்டுள்ள தகவல்கள் அமெரிக்காவுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில்
"விக்கிலீக்ஸ்' ஜூலியன் கைது நிச்சயம்?

"விக்கிலீக்ஸ்' இணையதளத்திற்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் இருந்தும் நெருக்கடி அதிகரித்து வருவதன் காரணமாக, அதன் நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் இன்னும் ஒரு வாரத்தில் கைது செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க வெளியுறவுத் துறை கொள்கை பற்றிய ரகசிய ஆவணங்களை,
தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல் : முதல்வர் எச்சரிக்கை

""கோஷ்டிப் பூசல் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.,விற்கு வெற்றியை பெற்றுத்தர வேண்டும்,'' என, புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க., நேர்காணல் கூட்டத்தில் கட்சியினரை முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.,வின் வெற்றிக்கும், கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்கும், அவர்களின் நிறைகுறைகளை கேட்டறியும் நேர்காணல் நிகழ்ச்சி,
கவிஞர் வைரமுத்துவின் 1000 பாடல்கள் தொகுப்பு நூல்
கவிஞர் வைரமுத்து கடந்த 30 வருடங்களாக சினிமா பாடல்கள் எழுதிவருகிறார். இதுவரை அவர் 7000 பாடல்களுக்குமேல் எழுதி இருக்கிறார். அந்த 7000 பாடல்களில் இருந்து 1000 பாடல்களை கவிஞர் வைரமுத்து தேர்ந்தெடுத்து முழு தொகுப்பு நூலாக வெளியிடுகிறார். ஆயுரம் பாடல்களுக்கு முன்னுரை எழுதி இருப்பது இந்த நூலின் சிறப்பு.
நிழல்கள் படம் தொடங்கி எந்திரன் படம் வரையிலான படங்களில் இருந்து முக்கியமான பாடல்கள் இதில் இடம் பெறுகின்றன. இந்த நூல் வெளியீட்டு விழா அடுத்த மாதம் 2 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தமிழக முதல்வர் கருணாநிதி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நூலை வெளிஎடுகிறார்.
Subscribe to:
Posts (Atom)























