Sunday, January 30, 2011

மக்களுக்கு உழைக்கும் கட்சிக்கே ஓட்டுப் போட வேண்டும்: விஜயகாந்த்


 ""சுட்டுப்போட்டாலும் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஓட்டுப்போடக்கூடாது. நாடு முன்னேறவும், மக்கள் வாழ்வு வளம் பெறவும் உழைக்கும் தகுதியுள்ள கட்சிக்கே ஓட்டளிக்க வேண்டும்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 1,000 பேர், பல கட்சிகளில் இருந்து விலகி தே.மு.தி.க.,

Saturday, January 29, 2011

கருணாநிதி டில்லியில் இறுதி முடிவு


பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், தமிழக முதல்வர் கருணாநிதி இன்று டில்லி வருகிறார். சட்டசபை தேர்தல் குறித்தும், காங்கிரசுடன் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு

இளங்கோவன் அந்தர்பல்டி


தி.மு.க., கூட்டணி எதிர்ப்பு என்ற நிலையிலிருந்து, காங்., முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் அடித்த திடீர், "அந்தர் பல்டி'யால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இளங்கோவனின் அடுத்தடுத்த சரவெடி தாக்குதல்களால்,

Friday, January 28, 2011

கபில் தேவ் நம்பிக்கை

: "" இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலிமையாக உள்ளது. இம்முறை வீரர்கள் தங்களது திறமைக்கு ஏற்ப விளையாடினால், உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம், ''என, கபில் தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி,

Thursday, January 27, 2011

அமெரிக்காவுக்கு திடீரென கிளம்பிப் போன ராஜபக்சே திரும்பி வந்தார்

அமெரிக்காவுக்கு திடுதிப்பென கிளம்பிச் சென்ற இலங்கை சர்வாதிகாரி மகிந்தா ராஜபக்சே இன்று கொழும்பு திரும்பி விட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 18ம் தேதி திடீரென அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போனார் ராஜபக்சே. ஹூஸ்டனில் அவர் தங்கியிருந்தார். தனிப்பட்ட பயணம் இது என்றனர் இதை. ஜோசியக்காரர்கள் நேரம் சரியில்லை, நாட்டை விட்டு வெளியே சில நாட்கள் இருந்தால் நல்லது என்று கூறியதால் ராஜபக்சே அமெரிக்காவுக்கு ஓடியதாக செய்திகள் கூறின.

அதேசமயம், ராஜபக்சேவுக்கு புற்றுநோய் வந்திருக்கிறது. இதற்காக அவர் ஹூஸ்டனில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்றும் செய்திகள் கூறின.

ராஜபக்சே எதற்காக அமெரிக்கா போனார் என்பதை அங்குள்ள எதிர்க்கட்சிகளும் கேட்டன. ஆனால் அரசுத் தரப்பு எதற்கும் பதிலளிக்கவில்லை.

இந்த நிலையில், ராஜபக்சே மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ் அமெரிக்கர்கள் அமைப்புகள் திரண்டு சென்று அதிபர் ஒபாமாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தன. இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதற்கு முன்பு தமிழ் அமைப்புகள் இதுபோல அதிபரை சந்திக்க வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆனால் தற்போது இந்த வாய்ப்பு, அதுவும் அதிபரையே சந்திக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தற்போது ராஜபக்சே அமெரிக்காவுக்கு வந்துள்ளதால், அவர் மீதான போர்க்குற்றச்சாட்டு, மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று ஒபாமாவை தமிழ் அமைப்புகள் வலியுறுத்தியிருந்தன.

இந்த நிலையில் திடீரென இன்று கொழும்பு திரும்பி விட்டார் ராஜபக்சே. அதிகாலையில் அவர் கொழும்புக்கு வந்து சேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் துரத்தப்பட்டதைப் போன்ற நிலை அமெரிக்காவிலும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்தான் ராஜபக்சே ஓடி வந்து விட்டதாக கூறப்படுகிறது.

வருங்காலத்தில் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் சுதந்திரமாக போக முடியாத அளவுக்கு ராஜபக்சேவுக்கு நெருக்கடிகள் முற்றி வருவதாக ராஜபக்சே எதிர்ப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

விழிபிதுங்கும் ஆளும்கட்சி


தமிழக சட்டசபைக்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அரசுத் துறைகளில் பல்வேறு பிரிவினரின் போராட்டங்கள், எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள் என, தேர்தலுக்கு முந்தைய பரபரப்புகள் துவங்கியுள்ளன.

தி.மு.க., அரசின் பதவிக்காலம் இன்னும் மூன்று மாதங்களில் முடிவுக்கு வருகிறது. அரசியல் கட்சிகள் தங்களின் வெற்றிக்காக கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. ஆளும் கட்சியினர் ஆங்காங்கே விழாக்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தி, நான்கரை ஆண்டு சாதனைகளை விளக்கி வருகின்றனர்.அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்களில், காஸ் அடுப்பு, வீட்டுமனை பட்டா, இலவச கலர் "டிவி' பல்வேறு திட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என, பொதுமக்களின் கவனத்தை கவரும் வகையில் முயற்சிகள் நடந்து வருகின்றன.மக்கள் மத்தியில் ஆளும்கட்சிக்கு எதிராக கிளம்பியுள்ள, "ஸ்பெக்ட்ரம்' ஊழல் குறித்து, "உண்மை நிலை என்ன' என்று விளக்கக் கூட்டங்களும் நடந்து வருகின்றன.எதிர்க்கட்சிகள் தரப்பில், பகுதிவாரியாக அடிப்படை வசதி கேட்டு போராட்டம் நடத்துதல், விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல் என, கண்டன பொதுக்கூட்டங்கள் நாள்தோறும் அரசுக்கு எதிராக தொடர்ந்து வருகின்றன.

விவசாயிகள் தரப்பில், "கள்' போராட்டம் ஒரு புறம், போலீசாரை புரட்டி எடுத்து வருகிறது.ஆளும் தி.மு.க.,வுக்கு பெரும் பலமாக நம்பப்படும் அரசு ஊழியர்கள், இம்முறை, பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளனர்; தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர்.அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வில் உள்ள குறைபாடு, லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களால் ஏற்பட்டுள்ள பணிச்சுமையை குறைக்க நடவடிக்கை; புதிய ஓய்வூதிய திட்டம் வாபஸ், தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரமாக்குதல் என பல கோரிக்கைகள் முன்வைத்து, பல்வேறு அமைப்புகள் சார்பில், போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள், இன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

கடந்த, 24ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்திய ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம், வரும், 29ம் தேதி விருதுநகரில் மாநில அளவிலான பேரணி நடத்த உள்ளது. வருவாய்துறை அலுவலர் சங்கம், நாளை சென்னையில் தர்ணா போராட்டம், வரும் பிப்., 1ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளது.தமிழக அரசு ஊழியர் சங்கம் வரும், 2ம் தேதி மறியல் போராட்டம், தொடர்ந்து 10ம் தேதி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது. அரசு அலுவலக ஊழியர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம், வரும் 29ம் தேதி, சென்னை எழும்பூரில் கோரிக்கை பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.அரசு அலுவலர் மற்றும் ஊழியர்களின் இதுபோன்ற தொடர் போராட்ட அறிவிப்புகள், ஆளும்கட்சி தரப்பை பெரிதும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள், அண்மையில் பெற்ற சம்பள உயர்வு போன்ற அறிவிப்புகளால் சற்று நிம்மதியாக உள்ளன. இருப்பினும், தேர்வு நெருங்கி வரும் நிலையில், பாடங்கள் முடிக்க வேண்டிய காலகட்டத்தில், அவர்களை பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுவது, பெரும் அதிருப்தியையும், நிம்மதியற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தகர்கள் பாதிப்பு: மின் தட்டுப்பாடு, நூல் விலை பிரச்னை, மணல் அள்ளும் பிரச்னை, கட்டுமான பொருட்கள் கடும் விலை உயர்வு என, அனைத்து விதங்களிலும் வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நூறு நாள் வேலை திட்டம் காரணமாக, கிராமங்களில் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலைச் சந்திக்க உள்ள ஆளும் கட்சி, எவ்விதமாக இப்பிரச்னைகளை கையாளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.
(dinamalar)

Wednesday, January 26, 2011

யூசுப் பதான் உறுதி

 ""உலக கோப்பை தொடரில் ஏற்படும் நெருக்கடி குறித்து கவலையில்லை. இந்திய ரசிகர்கள் எந்த சூழ்நிலையிலும், எங்கள் பக்கம் இருந்து ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்,'' என இந்திய வீரர் யூசுப் பதான் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. செஞ்சுரியனில் நடந்த கடைசி போட்டியில்,

அசிங்கமான அரசியல் செய்கின்றனர்-விஜயகாந்த்


""மக்களை அழ விடாமல், அவர்கள் வருமானத்தை சுரண்டாமல், விலைவாசி உயர்வைக் குறைத்து, சுகாதாரம், சமச்சீர் கல்வி, வேலைவாய்ப்பு அளித்து, எப்போதும் அவர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். நான் யாருடன் கூட்டணி வைக்கிறேனோ

கிரிக்கெட் இணையதளம் துவக்கியது யாஹூ

 யாஹூ இணையதளமும், ஐசிசி யும் இணைந்து 2011ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான பிரத்யேக இணையதளத்தை இன்று துவக்கின. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் துவங்க உள்ளன. இதற்கான இணையதளத்தை யாஹூ நிறுவனத்துடன் இணைந்து உடனடி தகவல்களை வெளியி‌ட ஐசிசி துவக்கி உள்ளது. iccevents.yahoo.com என்ற இணையதளத்தில் உலகக்கோப்பை குறித்த அனைத்து தகவல்களும் உடனடியாக பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

Tuesday, January 25, 2011

அ.தி.மு.க., - தே.மு.தி.க., உற்சாகம்


கூட்டணி முயற்சியை முறியடிக்க எவ்வளவோ சதிகள். அத்தனையையும் மீறி, அமைதியாக இருக்கின்றன அ.தி.மு.க.,வும் - தே.மு.தி.க.,வும். இரண்டு கட்சிகளுக்குமே தெரிந்திருக்கிறது, தி.மு.க.,வை தோற்கடித்து, ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால், தாங்கள் கூட்டணி சேர்வது அவசியம் என்று.

கடந்த 2004 லோக்சபா தேர்தலில் காங்., -பா.ம.க., - ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் வலுவான

மக்களின் உயிர்களை காப்பாற்ற முடியாத அரசுகள் தேவையா? விஜயகாந்த்


பொழுது விடியத் தவறினாலும், இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளாவது தவறுவதில்லை. கடந்த வாரம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர் பாண்டியன் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். வழக்கம் போல், கடிதம் எழுதுவதற்கு மாறாக முதல்வர் கருணாநிதி தந்தி அனுப்பினார்.மத்திய அரசும், இலங்கைத் தூதரை நேரில் வரவழைத்து இத்தகைய தாக்குதலை தவிர்த்திருக்கக் கோரியது. இலங்கை அரசோ, தங்களது கடற்படையினர் அத்தகைய துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சித்தது.தி.மு.க.,வுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்த, சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதியைச் சந்தித்தார்.

"தி.மு.க.,-காங்கிரஸ் கூட்டணி உறவின் மூலம் நாடு வளமும், வலிமையும் பெறும்' என்று நா கூசாமல் பேசி வருகிறார்.இவர்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தும்போதே, இலங்கை கடற்படையினர் நமது மீனவர் ஜெயக்குமாரை கழுத்தில் கயிற்றினால் சுருக்கிட்டு கொன்றுள்ளார்கள். இலங்கை கடற்படையின் இந்த மிருகத்தனமான செயலை வழக்கம்போல், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி கண்டித்துவிட்டு டில்லிக்குப் பறந்து விட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முதல்வர் வழக்கம்போல், நிதியுதவி வழங்கி, தனது கடமையை ஒப்புக்கு நிறைவேற்றி விட்டார்.பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கோ, போன உயிர்கள் திரும்ப வரப் போவதில்லை. நாள் தோறும் பாடுபட்டு, அக்குடும்பங்களைக் காப்பாற்ற நாதியில்லை. அரசுகளை உருவாக்குவதே மக்கள் தங்கள் உயிர்களையும், உடமைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான்.

மீனவர்களைக் காப்பாற்ற முடியாத, கடலோரக் காவல்படையால் என்ன பயன்?"தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இனி தாக்குதல் நடத்த முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று கடலோர காவல்படையின் தென் மண்டல கமாண்டர் முதல்வரிடம் அளித்த உறுதி மொழி என்ன ஆனது?காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி அரசுகளால், மக்களின் உயிர்களைக் கூட காப்பாற்ற முடிவதில்லை என்பதையே இந்த சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய அரசுகள் நமக்கு தேவைதானா என்பதையும், இவைகளால் நமக்கு என்ன பயன் என்பதையும் தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

தே.மு.தி.க., சார்பில், ராமேஸ்வரம் ஆர்ப்பாட்டம் முதல், தலைநகர் டில்லியில் உண்ணாவிரதம் வரை, நாம் இருந்து பார்த்தாகி விட்டது. அவற்றால் எந்த பயனும் இல்லை. குட்டி நாடான இலங்கை அரசு தமிழக மீனவர்களை தினந்தோறும் தாக்குவது மட்டுமல்ல, ஏளனமாக நினைக்கிறது. மத்திய அரசு இதனைக் கண்டு கொள்ளாதது ஏன்?இலங்கை அரசின் அராஜகப் போக்கையும், அதற்கு துணை போகும் மத்திய, மாநில அரசுகளையும் வன்மையாக கண்டிக்கிறேன்.இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சச்சினுக்கு பாரத ரத்னா விருது?


 மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கி்ன்றன. இதுகுறித்து, சச்சின் கூறியிருப்பதாவது, ஒவ்வொரு இந்தியனின் கனவும் பாரத ரத்னா விருது பெறுவதாகவே இருக்கும் என்று கூறினார். அவருக்கு இவ்விருது வழங்க வாய்ப்பிருப்பதாகவும், ஆனால் இதுகுறித்து ‌இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு இந்த விருது கிடைக்கும் பட்சதத்தில், இவ்விருது பெறும் இ‌ளம் இந்தியர் என்ற சாதனையை இந்த சா‌தனை நாயகன் நிகழ்த்துவார் என்பது குறி்ப்பிடத்தக்கது. 

Monday, January 24, 2011

ஒரு தடவைக்கு மேல் 'அனுமதிக்க' மாட்டார்

விபச்சாரம் செய்து கைதாகியுள்ள கன்னட நடிகை யமுனா, எந்த ஒரு வாடிக்கையாளரையும், ஒரு தடவைக்கு மேல் 'அனுமதிக்க' மாட்டார் என்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் பெங்களூர் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஐடி நிறுவன அதிபர் ஒருவருடன்

கூட்டணி ஏன்?

     விஜயகாந்த் ஆ.தி.மு.க வுடன் கூட்டணி சேர்கிறார் என்றதும் சிலர் கொதித்து இவனும் இப்படிதான்.  காசுக்காகத்தான் கூட்டணி சேர்கிறான்.  எல்லாம் நடிப்பு என்று பொரிந்து தள்ளுவது புரிகிறது.  ஆனால் அவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்.  
     விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த பிறகு ஜெயாவால் ஜெயிக்கமுடியவில்லை.  அவருடைய ஓட்டு வங்கி பிரிந்து விட்டது.  ஆனால் தி.மு.க வின் ஓட்டு வங்கி அப்படியே தான் உள்ளது.  ஆ.தி.மு.க வின் ஓட்டுகள் தான் பிரிந்து அதிகமாக விஜயகாந்துக்கு  விழுகிறது.  
     இந்நிலையில் எனக்கு தன்மானம்தான் முக்கியம் என்று கோரி தனியாக தேர்தலை  விஜயகாந்த் சந்தித்தால் மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வர அதுவே காரணம் ஆகிவிடும்.  தி.மு.க ஆட்சியில் தொடரும் விலையேற்றம், ஊழல், லஞ்சம் ஆகியவை தொடரவேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.  
     இந்த தேர்தலில் தி.மு.க ஜெயித்துவிட்டால் தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாத்தமுடியாது என்ற நிலையில் விஜயகாந்த் கூட்டணிக்கு வருவது மிகவும் நல்ல முடிவாகும்.  எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் தான் இந்த கூட்டணி அமைந்துள்ளது.  
     பலத்த பலம் பொருந்திய ஒரு எதிரியை வீழ்த்த பலர் ஒன்று சேர்வது கோழைத்தனம் ஆகாது.  அது சாணக்கியத்தனம்.  காசுக்காக கூட்டணி சேர்வது என்றால் சென்ற தேர்தலிலேயே சேர்ந்திருக்க முடியும்.  விஜயகாந்தின் எண்ணம் அப்படியல்ல.  தமிழக மக்களின் நன்மைகாகவே இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.  
     மற்றபடி மேலும் விஜயகாந்தை விமர்சிப்பவர்கள் தமிழகத்தின் விஷமிகள் அல்லது தி.மு.க விசமிகலாகதான் இருக்க முடியும் என்பதை தமிழக மக்கள் உணரவேண்டும்.    
     தி.மு.க வின் பணபலத்தை எதிர்கொள்ள எதிர்கட்சிகள் ஒன்று சேர வேண்டிய நிர்பந்தம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.  இளங்கோவனை போல தி.மு.க வை கண்டபடி விமர்சித்துவிட்டு அந்த கூட்டணியில் விஜயகாந்த் சேரவில்லை.  தி.மு.க வை எதிர்க்கும் ஆ.தி.மு.க வுடன் தானே கூட்டணி சேர்கிறார்.  
     கூட்டணியே இன்னமும் முடிவாகவில்லை.  அதற்குள்ளாக தி.மு.க விஷமிகள் தனது வேலையை ஆரம்பித்துவிட்டனர்.  தமிழக மக்கள் ஒன்று சேர்ந்து தி.மு.க வை அதன் குடும்ப ஆட்சியை ஒழித்துகட்ட தயாராக வேண்டும்.  

Sunday, January 23, 2011

யூசுப் பதான் அதிரடி சதம் வீண்

 பரபரப்பான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி "டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்ரிக்காவிடம் தோல்வியடைந்தது. யூசுப் பதானின் அதிரடி சதம் வீணானது. தொடரை 3-2 என வென்ற தென் ஆப்ரிக்கா, கோப்பை கைப்பற்றியது.
தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் 2-2 என சமமாக இருந்தன. இந்நிலையில்

Saturday, January 22, 2011

கடைசி மோதல்


செஞ்சுரியன்: இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று செஞ்சுரியனில் நடக்கிறது. இதில், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் எழுச்சி கண்டால், கோப்பை வென்று வரலாறு படைக்கலாம்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1

என்ன செய்ய போகிறார் இளங்கோவன்?


     காங்கிரஸ் தி.மு.க கூட்டணி அமையாது என்று எண்ணி தனது வார்த்தை ஏவுகணையை கலைஞர் மீது அள்ளி வீசிய இளங்கோவனுக்கு இனி சோதனை காலம்தான்.  தி.மு.க காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் மேற்கொண்டு தான் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார் இளங்கோவன்.
     தி.மு.க வுடன் கூட்டணி உருவாகிவிட கூடாது என்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டவர் இளங்கோவன்.  கடந்த சில மாதங்களாக தி.மு.க வை கடுமையாக தாக்கி பேசி வந்தார்.  தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை காப்பாத்த  முடியாது என்று கூட சொன்னார்.  இப்போது கூட்டணி என்ற பெயரில் கலைஞரின் வெற்றிக்கு உதவும் சூழ்நிலையில் உள்ளார்.  இது இவருக்கு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.  
     இன்னமும் மனம் தளராத இளங்கோவன் சோனியா காந்தியை சந்தித்து தனது மன குமுறலை வெளிபடுத்த நினைத்து அவரை சந்திக்க அனுமதி கேட்டுப்பார்த்தார்.  ஆனால் சோனியா இவரை சந்திப்பதை தவிர்த்து வருகிறார்.  ஆனாலும் மனம்தளராத இளங்கோவன் டெல்லியிலேயே முகாம் இட்டு எப்படியும் சோனியாவை சந்திக்க நினைக்கிறார்.
     இனி சோனியாவை சந்தித்தாலும் எந்த மாற்றமும் நிகழபோவதில்லை.  தன்னை கைது செய்து ஒரு வருடம் சிறையில் அடைத்த ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து வைகோ தனது அரசியல் வாழ்கையை அழித்துகொண்டார்.  அவ்வபோது கூட்டணி மாற்றம் செய்து ராமதாஸ் தனது அரசியல் வாழ்க்கையையும் தமிழக மக்கள் அவர் மேல் வைத்த நம்பிக்கையையும் கெடுத்து கொண்டுள்ளார்.  இந்த வரிசையில் இளங்கோவனும் சேர போகிறாரா இல்லை தனக்கு கௌரவம் தான் முக்கியம் என்று எண்ணி கட்சியை விட்டு விலகி வர போகிறாரா என்பது புரியாத புதிராக உள்ளது.  
     எது எப்படியோ இதுவரை, தி.மு.க வரும் தேர்தலில் ஆட்சியை பிடித்துவிட கூடாது.  அது தமிழகத்திற்கு நல்லதல்ல என்று கூறிவிட்டு இப்போது தி.மு.க வெற்றிக்காக உழைத்தால் தமிழக மக்கள் அவர் முகத்தில் காரி துப்புவார்கள் என்பது அவருக்கும் தெரியும் தானே?  தனது கௌரவம் முக்கியமா இல்லை காங்கிரஸ் முக்கியமா என்பதை முடிவெடுக்கும் நிலையில் உள்ள இளங்கோவனின் அரசியல் நிலைமை சற்று பரிதாபமாகவே உள்ளது.  

Friday, January 21, 2011

விராத் கோஹ்லி ஆட்டம் வீண்


போர்ட் எலிசபெத்: நான்காவது ஒரு நாள் போட்டியில் சொதப்பலாக ஆடிய இந்திய அணி, தென் ஆப்ரிக்காவிடம் "டக்வொர்த் -லீவிஸ்' விதிமுறைப்படி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 87 ரன்கள் விளாசிய விராத் கோஹ்லியின் ஆட்டம் வீணானது.
தென் ஆப்ரிக்க சென்றுள்ள இந்திய அணி

Sunday, January 16, 2011

ஜெ., - விஜயகாந்த் கூட்டணிக்கு ஆதரவு: சோ கருத்து



: "" தற்போதையை ஆட்சி மாறி, தமிழகத்துக்கு நல்லது நடக்க, ஜெயலலிதாவை அனைவரும் ஆதரிக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் கூட்டணி அமைக்கலாம்,'' என்றும், துக்ளக் ஆசிரியர் சோ பேசினார்.

"துக்ளக்' வார இதழின் 41ம் ஆண்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் துக்ளக் ஆசிரியர் சோ பேசியதாவது:
தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சியால்

விஜயகாந்த் அறைகூவல் அமைச்சர் மவுனம்: தி.மு.க.,வினர் "அப்செட்'


விழுப்புரத்தில் நேற்று முன்தினம் தே.மு.தி.க., சார்பில் நடந்த பொங்கல் விழாவில், கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். திடீரென ஏற்பாடு செய்த விழாவில் ஆயிரக்கணக்கான தொண்டர்களை கண்டு மகிழ்ச்சியடைந்தார். உற்சாகத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் அமைச்சர் பொன்முடி மட்டுமின்றி, முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து நின்று வெற்றி பெற தயார் என்று சவால் விடுத்தார்.இது

Saturday, January 15, 2011

கருணாநிதியை எதிர்த்து போட்டியிடுவேன்: விஜயகாந்த் ஆவேசம்


 ""வரும் சட்டசபை தேர்தலில் எனது தொண்டர்கள் விரும்பினால் அமைச்சர் பொன்முடி மட்டுமல்ல, முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து போட்டியிடுவேன்,'' என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் நேற்று நடந்த பொங்கல் விழாவில் அவர் பேசியதாவது

Monday, January 10, 2011

2011 கேப்டன் வருடம்?

     சேலம் மாநாட்டை கேப்டன் அறிவித்ததிலிருந்தே தே.மு.தி.க தொண்டர்கள் மட்டுமின்றி மற்ற கட்சியினரிடமும் எதிர்பார்ப்பு தொற்றி கொண்டது. விஜயகாந்த் கூட்டணி அமைப்பாரா இல்லை தனியாக நிற்பாரா?  அப்படியே கூட்டணி அமைத்தால் யாருடன் அமைப்பார்?  என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன.  சிலர் இவரால் என்ன கூட்டம் கூட்டிவிட முடியும் ஆளும் கட்சியில் செலவு செய்து காசு கொடுத்துமே அவ்வளவாக கூட்டம் கூட்ட முடியவில்லை இவன் என்ன செய்வான்.  ஏதோ ஒன்று அல்லது இரண்டு லட்சம் பேர் வந்தாலே பரவாயில்லை என்று நினைத்தவர்கள் இன்று வாய்பிளந்து நிற்கிறார்கள்.  தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்லை தொட்டிருக்கிறது சேலம் மாநாடு.  தே.மு.தே.க தொண்டர்கள் ஒன்றும் பணக்காரர்கள் அல்ல.  கஷ்டப்படும் மக்கள் அதிகம் உள்ள கட்சி அது.  இந்நிலையிலும் தனது சொந்த காசை போட்டு இப்படி ஒரு கூட்டத்தை வரலாறை ஏற்படுத்தி விட்டனர் தே.மு.தே.க கட்சி தொண்டர்கள்.  

        தே.மு.தி.க சேலம் மாநாட்டிற்கு கூடிய கூட்டமே கலைஞர் ஆட்சி எவ்வளவு நன்றாக நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி.  இன்றைய சூழ்நிலையில் ஆளும் கட்சியை எதிர்க்க இவரை விட்டால் சரியான தைரியமான ஆள் வேறு யாரும் இல்லை என மக்கள் புரிந்துகொண்டதை பார்க்க முடிந்தது.  மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்தின் எழுச்சி உரை அனைவரையும் கவர்ந்தது. கேப்டன் தைரியசாலியா இல்லை பிரேமலதாவா  என்று கேள்வி கேட்கும் அளவிற்கு அவருடைய பேச்சு அமைந்தது.  
     மொத்தத்தில் வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி இடுவது உறுதியாகிவிட்டது.  வரும் தேர்தலில் தே.மு.தி.க உடன் கூட்டணி அமைக்காமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்பது திட்டவட்டமாகிவிட்டது.  ஆளும் கட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் வெறுப்பே இந்த மாநாட்டின் வெற்றி ரகசியம்.  மாநாட்டிற்கு தி.மு.க தவிர அனைத்து கட்சி காரர்களும் வந்திருப்பதை பார்க்கமுடிந்தது.  
      கூட்டம் கூட்டுபவநெல்லாம் ஜெயிக்கமுடியாது என்று பஞ்ச் பேசும் அருமை தமிழர்களுக்கு ஒன்று கூறிகொள்ளவேண்டும் "இது காசுக்கு கூடிய கூட்டம் அல்ல கேப்டனின் தலைமையை ஆதரிக்கும் கூட்டம்".  முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது.  
      இளைங்கர்களை வைத்து அவர்களை கவர்ந்துதான் கலைஞர் முதல் முறையாக ஜெயித்தார்  என்பது வரலாறு கூறும் உண்மை.  அந்த வரலாறு உண்மை என்றால் கேப்டனின் வெற்றியும் உறுதியான ஒன்று.  
     கலைஞரின் அராஜக ஆட்சிக்கு மக்கள் சாவு மணி அடிக்க தயாராகிவிட்டனர் என்பது சேலத்தில் உறுதியாகிவிட்டது.  இனி எவ்வளவு  காசு கொடுத்தாலும் சிலரின் பருப்பு வேகாது என்பது உண்மை.  
     சேலம் மாநாட்டை பார்த்து வாயை பிளந்து இன்னும் மூடாமல் திரியும் எதிர் கட்சி அரசியல் தலைவர்களே இனியாவது சுதாரித்து கொள்ளுங்கள் இல்லை எனில் திறந்த வாயில் அரிசி விழுந்துவிடும்.


     இந்த மாநாடு வெறும் ட்ரைலர் தான்.  வரும் தேர்தலில்தான் மெயின் பிச்சர் இருக்கிறது என்று கேப்டன் தொண்டர்கள் மார்தட்டிகொல்வதர்க்கு மேலும் அங்கு கூடிய கூட்டத்திற்கு இந்த வரலாற்று சுவட்டிர்க்கு முழுக்க முழுக்க கலைஞர் மட்டுமே காரணம்.  அதனால் அவருக்கு சத்தமாக ஒரு "ஓ" போடுவோம்.  வரும் தேர்தலில் சங்கு ஊதுவோம்.  

Sunday, January 9, 2011

பா.ம.க.வினர் புலம்பல்


பா.ம.க.,வின் தேர்தல் கால கூட்டணி பார்முலா கட்சிக்கு வளர்ச்சியை, வெற்றி தேடி தந்த நிலை மாறி, சமீபகால கூட்டணி பார்முலா தோல்வியை தழுவுவதால் பா.ம.க., நிர்வாகிகள், தொண்டர்கள் விரக்தியில் உள்ளனர்.
வன்னியர் சங்கத்திலிருந்திலிருந்து 1989ல் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க., ) உருவானது. அதே ஆண்டு

சேலத்தில் தே.மு.தி.க.,


சேலத்தில் நேற்று நடைபெற்ற தே.மு.தி.க.,வின், "மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில்' லட்சக்கணக்கான தொண்டர்கள் மகிழ்ச்சி, ஆரவாரத்துடன் குவிந்தனர். இம்மாநாட்டை ஒட்டி, கின்னஸ் சாதனை படைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 1,000 கி.மீ., தூரத்திற்கு வண்ண பாலிதீன் பேனர்கள்,

Saturday, January 8, 2011

கோடிகளின் நாயகன்!

 நான்காவது ஐ.பி.எல்., தொடரில் "கோடிகளின் நாயகனாக' இந்திய வீரர் கவுதம் காம்பிர் ஜொலிக்கிறார். நேற்று நடந்த ஏலத்தில் இவரை அதிகபட்சமாக 11.04 கோடி ரூபாய் கொடுத்து கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. இன்றும் ஏலம் தொடர்ந்து நடக்க உள்ளது.
 இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த மூன்று முறை "டுவென்டி-20' தொடர் நடந்தது. நான்காவது தொடர் வரும் ஏப். 8ல் துவங்குகிறது. இதில், பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம்

கூட்டணி உருவாகாமல் இருக்க.சதி? அம்பலப்படுத்தினார் விஜயகாந்த்


எதிர்க்கட்சிகள் மத்தியில் கூட்டணி உருவாகாமல் தடுக்க, ஆளுங்கட்சி சதி செய்து இருப்பதாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று, "பகீர்' தகவலை வெளியிட்டுள்ளார்."மக்கள் உரிமை மீட்பு மாநாடு' என்ற பெயரில், சேலத்தில் தே.மு.தி.க., மாநாடு, விஜயகாந்த் தலைமையில் இன்று நடக்கிறது. இதுகுறித்த

வெற்றி பெறுமா சேலம் மாநாடு?

      தி.மு.க ஆ.தி.மு.க விற்கு போட்டியாக விஜயகாந்த் நாளை சேலத்தில் மாபெரும் மாநாடு நடத்துகிறார்.  இந்த மாநாட்டில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட போவதாகவும் அது தேசிய மற்றும் மாநில அரசியலில் திருப்புமுனையாக அமையும் என்றும் அதை பற்றி இப்போது எதுவும் கூறமுடியாது மாநாட்டில் தான் கூறுவேன் என்றும் விஜயகாந்த் அறிக்கை விட்டதில் இருந்தே மாநாடு குறித்து அதிக எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டுவிட்டது.  
     தே.மு.தி.க வினர் மட்டுமின்றி ஆ.தி.மு.க வினரும் மாநாட்டினை எதிர்பார்துகொண்டுள்ளனர்.  போன தேர்தலிலேயே ஆ.தி.மு.க வெற்றி பெரும் நிலையில் இருந்தது.  ஆனால் விஜயகாந்த் ஓட்டு வங்கியை ப்ரிதுவிட்டதால்தான் ஆ.தி.மு.க தேர்தலில் தொர்துபோனது என்று அதிக அளவில் கருதுநிலவும் வேலையில் இம்முறையும் அதே தவறு நிகழக்கூடாது என்பதில் ஆ.தி.மு.க தலைமையும் தொண்டர்களும் இருப்பதாக தெரிகிறது.
     அதனால் எப்படியும் விஜயகாந்தை கூட்டணிக்குள் கொண்டுவரவேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் தீட்டி திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.  
     ஆனால் விஜயகாந்தோ காங்கிரஸின் வருகைக்காக காத்து இருக்கிறார்.  அப்படி காங்கிரஸ் உடன் கூட்டணி அமையாத பட்சத்தில் மட்டுமே அவர் ஆ.தி.மு.க உடன் கூட்டணி அமைப்பார் என்று தெரிகிறது. வரும் தேர்தலில் வெற்றியை நிர்ணயுக்கும் மாபெரும் சக்தியாக தே.மு.தி.க உருவெடுத்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.  இந்நிலையில் விஜயகாந்த் யார் பக்கம் சாய்வார் என்று தெரியாததால் தமிழக கட்சிகள் கூட்டணியை உறுதிபடுத்த முடியாத நிலையில் உள்ளன.  
     ஆளும் கட்சியை எந்த வித பயமும் இல்லாமல் வெளுத்துவாங்கும் விஜயகாந்தின் தைரியம் தான் தமிழக மக்கள் எதிர்பார்த்தது எதிர்பார்ப்பது அதுவே அவருக்கு வெற்றியை தேடித்தரும் என்று தே.மு.தி.க தொண்டர்கள் பூரிப்பதை பார்க்கமுடிகிறது.  
      கூட்டணி குறித்த எதிர்பார்ப்பு, வழக்கமாக கூடும் கூட்டம், சேலம் மாவட்டத்தில் தே.மு.தி.க பெற்றுள்ள எழுச்சி ஆகியவையே மாநாடு வெற்றிபெறும் காரணிகளாக அமையுள்ளன.  

அதிக விலைக்கு ஏலம் போன கெளதம் காம்பீர்

4வது ஐ.பி.எல் டுவண்டி-20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முதல் 3 ஐ.பி.எல். போட்டிகளுடன் இந்திய மற்றும் சர்வதேச வீரர்களுடனான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதால் அனைத்து வீரர்களும் புதியதாக ஏலம் விடப்படுகிறார்கள்.

ஒப்பந்த விதிகளை மீறியதாக கிரிக்கெட் வாரியத்தால் நீக்கப்பட்ட

Friday, January 7, 2011

பொங்கலுக்குப் பின் கூட்டணி பேச்சுவார்த்தை: முதல்வர் கருணாநிதி

 பொங்கல் பண்டிகைக்குப் பிறகு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
 திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. கட்சித் தலைவரும், முதல்வருமான கருணாநிதி தலைமை வகித்தார். கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
 ஆளுநர் உரையை கூட்டணிக் கட்சிகள் வரவேற்று இருக்கிறார்கள்; ஆனால்,

Thursday, January 6, 2011

தினமணி தலையங்கம் உங்கள் பார்வைக்கு!


அமெரிக்காவில் ஏற்கெனவே உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றாலும், அந்த அமைப்பை மேலும் சட்டரீதியில் வலுவுள்ளதாக மாற்றுவதற்கு ஜனவரி 4-ம் தேதி ஒரு சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. இந்தச் சட்டத்துக்கு

கேப்டவுன் டெஸ்ட் "டிரா: தொடரை சமன் செய்தது இந்தியா


இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கேப்டவுன் டெஸ்ட் "டிரா ஆனது. இதன் மூலம் தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை (1-1) முதன் முறையாக சமன் செய்தது இந்தியா.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி

Wednesday, January 5, 2011

அழகிரியை சமாதானப்படுத்த மேலிடம் முயற்சி


முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் கொள்கை பரப்புச் செயலர் பதவியைப் பறித்து, அவரை கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்று தி.மு.க., தலைமைக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை மத்திய அமைச்சர் அழகிரி வலியுறுத்தியதாகவும்,

Tuesday, January 4, 2011

இளங்கோவன் தனிக்கட்சி துவக்க வேண்டும் : பா.ஜ., தலைவர் அட்வைஸ்

 ""காங்., கட்சியிலிருந்து இளங்கோவன் விலகி, தனிக்கட்சி துவங்கி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்,'' என, பா.ஜ., மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், உடுமலையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை கைது செய்ய மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. இது ஒரு கூட்டுக்கொள்ளை என்பதால் தான் நடவடிக்கை எடுக்காமல், சி.பி.ஐ., ரெய்டு என கண்துடைப்பு நாடகத்தை நடத்தி, காங்., அரசு மக்களை ஏமாற்றுகிறது.முதல்வர் கருணாநிதி சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், "ஏழைகள் இருக்கும் வரை இலவசம் கொடுக்கப்படும்' என்றார். ஏழ்மை இல்லாத நிலைமை உருவாக வேண்டுமென்றால், தமிழகத்தில் தி.மு.க., அரசு முற்றிலுமாக தோற்கடிக்கப்பட வேண்டும். இல்லையெனில், ஏழைகள் கையேந்தும் நிலை என்றும் நீடிக்கும்.

காங்., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, 1977ல் ஒன்று திரண்டது போன்று, தி.மு.க.,வை தோற்கடிக்க அனைத்து கட்சிகளும் ஒரே அணியாக திரள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது. அதே நேரத்தில், பா.ஜ., தன் சொந்த பலத்தில் போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய வாய்ப்பும் உள்ளது.பா.ஜ., ஆட்சிக்கு வரும் போது, கட்டாயமாக அனைத்து ஜாதி மக்களையும் கொண்ட அறவோர் குழு அமைத்து, கோவில்கள் பாதுகாக்கப்படும். இளங்கோவன் தற்போது, "தி.மு.க., - காங்., கூட்டணி விரும்பத்தகாத கூட்டணி' என, பேசி வருகிறார். தி.மு.க., கூட்டணியிலிருந்து காங்., விலகவில்லை எனில், மூப்பனார் போன்று, இளங்கோவன், தனியாக கட்சி துவங்கி மக்களுக்கு நன்மை செய்வார் என நம்புகிறேன்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Sunday, January 2, 2011

தி.மு.க.,வால் காங்கிரசுக்கு கெட்ட பெயர்

""தி.மு.க., செய்யும் தவறுகளுக்கு, அவர்களுடன் சேர்ந்திருப்பதால் காங்கிரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. எனவே அவர்களிடம் விலகியிருக்க வேண்டும்'' என,

ஸ்பெக்ட்ரம் பூதம் : பரிகாரம் தேடும் தி.மு.க.,

இலவச திட்டங்கள் மூலம் இடைத்தேர்தல்களில் ஜொலித்து வந்த தி.மு.க., ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால், மக்கள் மத்தியிலும், அரசியல் ரீதியாகவும் செல்வாக்கை இழந்து வருகிறது. இதை சரிக்கட்டும் வகையில், தற்போது, "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்தது என்ன?' என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்தி, பரிகாரம் தேடும் பணியில் ஆளுங்கட்சி இறங்கியுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலின் போது,